சங்க இலக்கியம் கூறும் உலகியல்.....

ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை (புறநானூறு,76)


சாதலும் புதுவதன்றே ; வாழுதல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே;முனிவின்
இன்னாது என்றலும் இலமே( புறநானூறு, 192)



ஓரில் நெய்தல் கறங்க, ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப,
புணர்ந்தோர் பூவணி அணிய, பிரிந்தோர்
பைதல் உண்கண பனிவார்பு உறைப்ப,
படைத்தோன் மன்ற, அப்பணிபி லாளன்!(புறநானூறு,19

இன்னாது அம்ம! இவ்வுலகம்;
இனியகாணக,இதன் இயல்பு உணர்ந்தோரே (புறநானூறு,194)

இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்,
நண்பகல் அமையமும் இரவும் போல,
வேறுவேறு இயல ஆகி, மாறு எதிர்ந்து,
உளவென உணர்ந்தனை ( அகநானூறு,327)


மகளிர் தோள்சேர்ந்த மாந்தர் துயர்கூர நீத்தலும்,
நீள்சுரம் போகியார் வல்லைவந்து அளித்தலும்,
ஊழ்செய்து,இரவும் பகலும்போல்,வேறாகி,
வீழ்வார்கண் தோன்றும்,தடுமாற்றம் ஞாலத்துள்
வாழ்வார்க்கு எல்லாம் வரும் ( கலித்தொகை 145)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......