துன்பம் தொடர்ந்துவந்த கதை

துன்பம் ஒருவருக்கு வந்தால் எப்படி தொடர்ந்து வரும் என்பதற்கு ஒரு கதையினை விவேகசிந்தாமணி என்னும் நூல் கூறுகின்றது.பட்டகாலிலே படும் கெட்டக்குடியே கெடும் என்ற பழமொழியும் இதறகுப் பொருத்தமாக இருக்கும்.

ஒரு ஊரில் ஒரு குடியானவன் இருந்தான்.அவனுக்குப் பொல்லாத காலம் வந்தது.ஒருநாள் பெருமழை பொழிந்தது.அப்பொழுது அவனுடைய பசு மாடு கன்று போட்டது.மழையினால் பசுவும் கன்றும் துன்புற்றன.அப்பொழுது அவனுடைய வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
அப்போது கருவுற்றிருந்த அவனுடைய மனைவிக்குப் பேறு காலம் நெருங்கியதால் உடல் வருந்தினாள்.அந்நேரத்தில் அவனுடைய வேளையாள் இறந்து போனான் என்ற செய்தி வந்தது.மழை பெய்யும் போதே விதை விதைக்க வேண்டிய சூழல்.


எது எப்படி ஆனாலும் ஆகட்டும் என்று வயலில் விதைவிதைத்து விடலாம் என விதையைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறான்.அந்நேரத்தில் பழைய கடன்காரர்கள் சிலர் எதிர்பட்டுக் கடனைக் கொடுத்துவிட்டு மறுவேலையைப் பார் என மறிக்கின்றார்கள்.இச் சமயத்தில் வரிகட்டவில்லை என அரசாங்க ஆள் வந்து வரிப்பணம் கேட்கின்றான்.

இவை இவ்வாறாக இருக்க குடியானவனுதைய குலகுரு
தமக்கு அவ்வாண்டு கொடுக்க கூடிய காணிக்கைப்பொருள் தரவில்லை என்று அதனைக் கேட்டு வந்தார்.புலவர்கள் இருவர் இச்சமயத்தில் குடியானவன் மீது சில செய்யுள்களை இயற்றிக்கொண்டு வந்து நன்கொடை கேட்கின்றார்கள்.இவ்வாறு வரிசையாக துன்பம் வந்து சேரும் போது ,குடியானவன் அடைந்த துன்பத்தை கூறவும் வேண்டமோ?

கருத்துகள்

சுபானு இவ்வாறு கூறியுள்ளார்…
என்ன இது.. இப்படியெல்லாம் நடக்குமா.. ?
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆம் சிலர் வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடக்கதான் செய்யுது........
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
அய்யோ... இது என்ன சோகம்...
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
உப்பு விற்கப்போனால் மழை பெய்யும்
மாவு விற்கப்போனால் காற்று வீசும் .அந்த மாதிரி துன்பம் தொடர்ந்து துன்பம் .
வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சியது போல் உள்ளது ..நல்ல படைப்பு .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்