திருக்குறள் பரிதியார் உரையும் மொழிப்பெயர்ப்புச் செயல்பாடும்

தமிழ் உரைமரபு மையம் கொண்டிருந்த இடைக்காலத்தில் திருக்குறளுக்குப் பல்வேறு உரைகள் தோன்றின. திருக்குறளுக்கு பதின்மர் ஊரையெழுதினர் என்னும் செய்தியைத் தனிபாடல் கூறுகின்றது. ஆனால் இன்று ஐவர் உரைகளே கிடைத்துள்ளது. 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த பரிதியார், அவர் காலத்தின் தேவைக்குக்கு ஏற்பவும், திருக்குறள் கருத்தினை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்திலும், வைதிகச் சமயம் சார்ந்தும் எழுதியிருப்பதை அவருரையினிருந்து அறியமுடிகின்றது. இவர் உரை பெரும்பான்மை வடமொழி கலந்தே காணப்படுகின்றது. காலனிய காலத்தில் தொடங்கிய திருக்குறள் மொழிப்பெயர்ப்புச் செயல்பாடுகள் பெரும்பான்மை உரைகளைத் தழுவியே மொழிப்பெயர்ப்புச் செயல்பாடுகள் நிகழ்ந்துள்ன. இச் செயல்பாட்டுகளுக்குப் பரிமேலழகரையினையும் மணக்குடருரையினையும் பெரும்பான்மை தழுவினர் என்றாலும் சில இடங்களில் பரிதியின் உரையினைத் தழுவியும் மொழிப்பெயப்புச் செயல்பாடுகள் நிகழ்த்தியுள்ளனர்.
வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை


என்னும் குறளினை மொழிப்பெயர்க்கும் ட்ரு விருப்பு வெறுப்பு இல்லாதவன் பாதம் சேர்ந்தார்க்குத் துன்பம் இல்லை என்னும் பரிதியின் உரையினைப் பின்பற்றி மொழிப்பெயர்க்கின்றார்.

To those who mediate the feet of him who is void of desire or aversion, evil shall never come.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்குக் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது (8)

தன்ம மென்னுஞ் சமுத்திரமாகவுள்ள பரமேசுவரன் பாதத் துணையில்லா பாவக் கடலை நீந்த மாட்டார் என்னும் பரிதியாரின் உரையைப் பின்பற்றி ட்ரூ

பிறவாழி என்பதற்கு Sea of vice என மொழிப்பெயர்க்கின்றார் .

தம்மிற்றம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது ( 68)

தம்மிலும் புலவர் அறிவினராகில் உலகத்தார்க்கெல்லாம் இனிமையாம் என எழுதும் பரிதியின் உரையைப் பின்பற்றி போப், ட்ரூ ஆகியோர்

Their childern’s wisdom greater than their own confessed through the wide world is sweet to every breast – pope

That their children should possess knowledge is more pleasing to call men of this great earth than to themselves – Drew

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று (307)

கோபத்தைப் பொருளென்று கொண்டார்க்குக் கேடுவராது தப்பாது. அஃது எப்படி என்றால் நிலத்தில் அடித்த கை தப்பது போல் என்னும் பரிதியின் உரையைப் பின்பற்றி,

....... hand that sinites the earth unfalling feels the sting
என்று போப் எழுதுகின்றார்.

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல் (254)

அருள், அருளல்லது எனப் பரிதியும் பரிமேலழகரும் பிரித்து பொருள் கூறும் முறையைப் பின்பற்றி ட்ரூ

If it be asked what is kindness and what its opposiate, the answer would be preservantion and destruction of life.

என மொழிப்பெயர்க்கிறார்.

அரம்பொருத பொன்போல்த் தேயும் உரம்பொரு
துட்பகை யுற்ற குடி (888)

பொன் என்பதற்குப் பரிமேலழகர் இரும்பு எனப் பொருள் கூறுகின்றார். மணக்குடவரும் பரிதியும் பொன் என்றே கொள்கின்றனர்.
பெரிய அரத்திலே அராவின பொன்போலத் தேயும் உட்பகையுள்ள குடி என்ற பரிதியின் கருத்தையே போப், வி.ஆர்.ஆர் ஆகியோர் மொழிப்பெயர்க் கின்றனர்.

As gold with which the life contents is worn away – pope

Just like pure gold filed away by an iron file – V.R.R


தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு(1103)

தாமரைக் கண்ணான் உலகு என்பதற்குச் செங்கண் மாலுலகம் என்று பரிமேலழகரும் வைகுண்டம் எனப் பரிதியும் பொருள் காணுகின்றனர்.

இவர்களைப் பின்பற்றி,

Lotus vishnu’s heaven

என ட்ருவும்

Lotus – eyed Lord

எனப் பிறரும் மொழிப்பெயர்கின்றனர்.

ஆக பரிதியாரின் உரையைப் பொறுத்தவரை பொழிப்புரை என்றோ, விளக்கவுரை என்றோ கூறவியலாத நிலையில் இருப்பினும், குறட்கருத்தை அறிந்துகொண்டு தம் விருப்பத்திற்கேற்ப, மிகுத்தும் குறைத்தும் பொருள் கூறுகின்றார். சில இடங்களில் குறள் கருத்துக்கும் இவரது விளக்கத்திற்கும் தொடப்பில்லாத நிலையைக் காணமுடிகின்றது. இதனையே ச. தண்டபாணிதேசிகர் குறளுக்கும் பரிதியார் உரைக்கும் ஒற்றுமைப்படுத்தி, கருத்தை அறிந்துகொள்ளுதல் ஒரு கயிற்றாலாகிய பாலத்தில் காவிரியைக் கடக்க நினைத்தலை ஒக்கும் என்று கூறுவது நினைக்கத்தக்கது. ஆயினும் பரிதியின் உரையில் எளிதில் பொருள் விளங்க வைக்கும் தன்மை இருப்பதைக் காணலாம். ஆகையினால் தான் பிறகாலத்தில் திருக்குறளை மொழிப்பெயர்ப்புச் செய்தவர்கள் பெரும்பான்மை பரிமேலழகரைப் பின்பற்றினாலும் சில இடங்களில் பரிதியின் உரையைப் பின்பின்பற்றி இருப்பதைக் காணமுடிகின்றது.

கருத்துகள்

ஜோதிஜி இவ்வாறு கூறியுள்ளார்…
தள மாறுதல் மற்றும் தெளிவான நோக்கமும் என்னை வியப்பில் ஆழ்த்திக் கொண்டுருக்கிறது. தொடருங்கள். தொடர்கின்றேன். முடிந்தால் தமிழ்மணம் வருகின்ற 27 அன்று வருகை தாருங்கள்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் ஜோதி உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி. வருகின்றேன் ஏதேனும் சிறப்பா.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்