அறக்கட்டளைச் சொற்பொழிவு


ந.மு.வேங்கடசாமி நாட்டாரின் பெயிரில் உள்ள அறக்கட்டளைச் சார்பில் இன்று சொற்பொழிவு நடைபெற்றது. பேராசிரியர் மா.அறிவு நம்பி அவர்கள் நாட்டாரின் கட்டுரைத் திறன் என்னும் தலைப்பிலும் பதினெண் கீழ்கணக்கும் நாட்டாரும் என்னும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்.

முதல் அமர்விற்கு துறைத்தலைவர் பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் தலைமையேற்றார்.

நாட்டாரின் இயற்பெயர் சிவப்பிரகாசம் என்னபதாகும்.இவருக்கு முன் பிறந்த இருவர் மரணம் எய்த,இக்குழந்தையைக் காப்பாற்ற வேண்டி திருவேங்கடப் பெருமானை வேண்டிக்கொண்டு பெயரை மாற்றி வேங்கடப் பெருமானின் நினைவாக வேங்கடசாமி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர்.என்று துவங்கினார்.

நாட்டாரின் கட்டுரையினை ஆய்து,கட்டுரை என்பதற்கு நாட்டார் கூறும் விளக்கம், சொற்களைப் பெய்துஉரைக்கும் திறன்,சொல்லவந்த கருத்தினை வலியுறுத்த அடுக்கி கூறும் உத்தி,அவர் எடுத்தாண்ட நூல்களை வகைபாடு செய்யும் முறை,எந்த நூலைப்பற்றி குறிப்பிட்டாலும் அந்நூலினை அடைகொடுத்து சிறப்பித்துக் கூறும் தன்மை,வினா விடையாக எழுதிச்செல்லும் பாங்கு,இசையில் அவருக்கிருந்த நுட்பமாக அறிவு போன்றவற்றை எடுத்துரைத்தார்.
இரண்டாம் அமர்விற்கு பேராசிரியர் மு.வள்ளியம்மை தலைமையேற்றார்.

பதினெண் கீழ்க்கணக்கும் நாட்டாரும் என்னும் தலைப்பில் நாட்டார் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுக்கு எழுதிய உரைக்ள,அவற்றுள் சிறப்பான பகுதிகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டினார்.

கருத்துகள்

முனைவர் மு.இளங்கோவன் இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் அம்மா
அ.அறிவுநம்பி என்று இருத்தல் வேண்டும்.
மு.இளங்கோவன்
புதுச்சேரி
துபாய் ராஜா இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லதொரு பகிர்வு. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
குப்பன்.யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
thanks for sharing professor ji.
குடுகுடுப்பை இவ்வாறு கூறியுள்ளார்…
நா.மு.வேங்கிடசாமி நாட்டாரின் கொள்ளுப்பேரன் என்னுடன் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாகப்படித்தவன். இப்போது தொடர்பில் இல்லை. உங்கள் இந்தப்பதிவு பழைய ஞாபகத்தை கிளறிவிட்டது.

புலவர் அரங்க அறமன்னனின்(தர்மராஜ்) மகன்.
Admin இவ்வாறு கூறியுள்ளார்…
அனைத்து நண்பர்களுக்கும்
பொங்கல் வாழ்த்த்துக்கள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......