நட்பு................

நட்பு என்பதற்கு அன்பு,ஒத்த கருத்து,நலன்,அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் உறவினர் அல்லாதவருடன் கொள்ளும் உறவு என க்ரியாவின் தற்காலத் தமிழ் அகாரதியும், நட்பு,தோழமை என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும்.வயது,மொழி,இனம்,நாடு என எந்த எல்லைகளும் இன்றி,புரிந்து கொள்ளுதலையும்,அனுசரித்தலையிம் அடிப்படையாகக் கொண்டது நட்பு.நண்பர்கள் ஒருவருக்கொருவர் அனுசரித்துத் தங்களின் தனிப்பட்டு விருப்பு வெறுப்புக்களை மறந்து கொள்ளவார்கள்.நண்பர்கள் ஒருவருக்கொருவர் உண்மையாக நடந்து,இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவார்கள் என விக்கீப்பீடியாவும் பொருள் கூறுகின்றன.
க்ரியா உறவினர் அல்லாத ஏற்படும் உறவு நட்பு எனக் கூறுகின்றது. விக்கிபீடியாவோ பொதுவாக இருவரிடம் தோன்றும் உறவு என்று கூறுகின்றது.
நட்பினை ஆணுக்கும் ஆணுக்கும் ஏற்படும் நட்பு பெண்ணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் நட்பு ,பெண்ணுக்கும் ஆணுக்கும் ஏற்படும் நட்பு என்று வகைப்படுத்துகின்றனர்.சங்க இலக்கியத்தில் பார்க்கும் போது ‘பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே’ என்னும் அடி ஆண்பெண் நட்பைக் கூறுவதைக் காணலாம்.இங்கு காதலை நட்பாக கூறப்பட்டுள்ளதையும் அறியலாம்.
நட்பின் பெருமையை உணர்ந்த திருவள்ளுவரும் நட்பு ,நட்பாராய்தல்,பழமை,தீ நட்பு,கூடா நட்பு என ஐந்து அதிகாரங்களில் நட்பினைப் பற்றி பேசுகின்றார். ஆய்து ஆய்து தெளிந்து நட்பு கொண்ட பிறகு, அந் நட்பினை எவ்வாறு பேணவேண்டும் என்பதைப் பற்றியும் பேசுகின்றார்.
நட்பு என்ற சொல்லுக்கு வேர் சொல் ‘நள்’ என்பதாகும்.’நள்’ என்றால் செறிந்த என்பது பொருளாகும். கருமையால் செறிந்த இரவினை நள்ளிரவு என்று கூறுவதைப் போல அன்பினால்,கருத்தினால் செறிந்தவர்களை நண்பர்கள் என்று கூறலாம்.
நண்பர்கள் இல்லாத வாழ்க்கை நரம்பற்ற வீணைக்குச் சமம்,நண்பர்கள் இல்லாத வாழ்க்கை சாட்சி இல்லாத மரணத்துக்குச் சமம். (ஊருக்கு நல்லது சொல்வேன் ,தமிழருவி மணியன்)நரம்பில்லாத வீணை இனிய இசையை கேட்கமுடியாது,அது போலவே நண்பர்கள் இல்லாத வாழ்வு அவ்வளவு இனிமையுடையதாக இருப்பதில்லை.
நல்ல நட்பு ஒருமனிதனுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றத்தையே உண்டு பண்ணும்,தீய நட்பு அவன் வாழ்க்கையே அழித்துவிடும்.கண்டவுடன் தோன்றும் நட்பும்,காதலும் நீடிப்பது இல்லை.நட்பை ஆய்ந்து ஆய்து கொள்ளவேண்டும் என்பர் வள்ளுவர்.
நிலத்தினும் பெரிதாய் ,வானினும் உயர்ந்த்தாய்,கடலினும் ஆழமாதாய்,தாமரைத் தண்தாதூதி மீமிசைத் சாந்தின் தொடுத்த தீந்தேனாய் நட்பு இருந்தாலும் அங்கு சுயநலம் என்பது தலைகாட்டாமல் அன்பில் கனிந்த நட்பாக இருக்க வேண்டும்.ஒருவருக்காக ஒருவரை இழக்க துணியவேண்டும்,புரிதல் வேண்டும் ஒன்றாய் உண்டு ,களித்து,ஊர் சுற்றுவதல்ல நட்பு.அகத்து ஒன்றாய் பிறருடைய கருத்தை மதிக்க கூடியவராய் இருக்கவேண்டும் . நண்பனுக்குத் துன்பம் நேர்கையில் ,அவனை விட்டு நீங்காது அத்துன்பத்தைப் போக்கி,அவனைத் தேற்றி நல்லவழியில் செலுத்தி,தன்னால் உதவி செய்யமுடியவில்லை என்றாலும்,
அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்
அல்லல் உழப்பதாம் நட்பு (787)

நட்டாருக்கு அழிவுவந்தவிடத்து,அவர் துன்பத்தை நீக்கி,நல்ல நெறியின்கண் செலுத்தித் தாங்கி,தன்னால் செயலற்றவிடத்து அவரோடு ஒக்கத் தானும் துன்பம் உழப்பது நட்பு எனுற விளக்கம் தருவர் மணக்குடவர்.
நல்ல நட்பு உன் உள்ளத்தையும் உடலையும் வளர்க்கும்.நட்பைத் தேடுவதில் நிதானமாகச் செயல்படவேண்டும்.கிடைத்த நட்பை பொக்கிஷம் போல் பாதுகாத்துக்கொள்.சாக்கரட்டீஸ்.
வள்ளுவரும் நட்பை ஆய்ந்தாய்ந்து கொள்ளவேண்டும் என்கின்றார். அப்படி கொள்ளத நட்பு சாகும் காலம் வரை துன்பத்தைத் தரக்கூடியதாகவே இருக்கும். ஆகையின் நண்பராக தேர்ந்துகொள்ளுவதற்கும் பல முறை சிந்தித்து நட்பு கொள்ளவேண்டும்.

கருத்துகள்

செ.சரவணக்குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான இடுகை முனைவரே, தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி.
குப்பன்.யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான பதிவு மேடம்.

அதனால்தான் ஸ்ரீரங்கத்து கம்பர், வாலி இப்படி எழுதினார் போல-

நட்பை கூட கற்பை போல எண்ணுவேன்- தளபதி திரைப்படம்
முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல இடுகை.

//நட்பு என்ற சொல்லுக்கு வேர் சொல் ‘நள்’ என்பதாகும்.’நள்’ என்றால் செறிந்த என்பது பொருளாகும். கருமையால் செறிந்த இரவினை நள்ளிரவு என்று கூறுவதைப் போல அன்பினால்,கருத்தினால் செறிந்தவர்களை நண்பர்கள் என்று கூறலாம்.//

மிக நன்று!!
வாய்மை இளஞ்சேரன் இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழும் தமிழ்ப் பண்புகளும் என்றும் நிலைத்திருக்க இத்தகு இடுகைகள் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.
நன்று.நன்றி தங்கையே

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்