புத்தகக் கண்காட்சி 2010..


சென்ற ஞாயிற்றுக் கிழமை புத்தக்கண்காட்சி சென்று வந்தேன் .ஞாயிறு என்றதால் கூட்டம் அதிகமாக இருந்தது.அன்று மாலை கமல் வந்ததால் கூட்டம் வெளியில் சென்று விட்டது.உள்ளே சுமாரான கூட்டம்.சென்ற ஆண்டு 15000 ரூபாய்க்கு நூல்கள் வாங்கினேன் .இந்த ஆண்டு 3000 ரூபாய்க்குத் தான் நூல்கள் வாங்கினேன்.குடும்பத்துடன் வந்து மக்கள் நூல்களை வாங்கிய காட்சி மகிழ்ச்சியாக இருந்தது.

விடியல்,அடையாளம்,தமிழ்மண,மெய்யப்பன்,பாரி,காவ்யா,அன்னம்,நர்மதா,காலச்சுவடு,
உயிர்மை பதிப்பகங்களில் மட்டுமே நூல்கள் வாங்கினேன்.

கருத்துகள்

குப்பன்.யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி பகிர்ந்தமைக்கு.

நீங்கள் வாங்கிய நூல்கள் குறித்தும், நாங்கள் வாங்க வேண்டிய புத்தகங்கள் குறித்தும் விளக்கமாக பதிவிட வேண்டுகிறேன்.
செ.சரவணக்குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
நிச்சயம் மிகச் சிறந்த நூல்களை வாங்கியிருப்பீர்கள். வாசிப்பிற்குப் பின் அந்த நூல்களைப் பற்றிய பகிர்வை எதிர்பார்க்கிறேன். நன்றி
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க குப்பன்...கண்டிப்பாக நாளை காலை எழுதுகின்றேன்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க சரவணன் நூலைகளைத் தேர்ந்துதான் வாங்கியுள்ளேன் வாசிப்பிற்குப் பிறகு பகிர்ந்துகொள்வேன்....உங்கள் வருகைக்கு நன்றி..
சு.செந்தில் குமரன் இவ்வாறு கூறியுள்ளார்…
நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்


1) தகவல்பெறும் உரிமைச் சட்டம் பயன்படுத்துவது எப்படி?/ சிவ.இளங்கோ/மக்கள் சக்தி பதிப்பகம் info@makkalsakthi.net


2) கைதானால் உங்கள் உரிமைகள்/ மக்கள் கண் காணிப்பகம்/info@pwtn.net

3)சென்னை குடிசைப் பகுதிகளில் தீ விபத்துகள் மற்றும் இடம் பெயர்த்துக் குடியமர்த்தப்பட்டவர்களின் வாழ்க்கை நிலை/அ.மார்க்ஸ்/குடிசை மக்கள் வாழ்வுரிமை இயக்கம், 573, 9வது தெரு,சௌத்திரி நகர்,வளசரவாக்கம்,சென்னை 87


4) சர்வாதிகாரி ( The Great Dictator என்ற) சார்லி சாப்ளின் திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் கட்டுரைகள்(தமிழில்)/விஸ்வாமித்ரன்/கருத்துப்பட்டறை/ viswamithran@gmail.com


5)எம்.ஜி.ஆர் .கொலை வழக்கு(சிறுகதைகள்)/ஷோபா சக்தி/கருப்புப் பிரதிகள் பதிப்பகம்/shobasakthi@hotmail.com


6)தமிழகத்தில் என்கௌண்டர் (போலி மோதல்) என்ற அரச பயங்கரவாதம்/தமிழக மக்கள் உரிமைக் கழகம்/tprt@savukku.net


7)ஈழம் அழிப்பில் இந்தியா -- துணை போகும் ம.க.இ.க/அ.சின்னப்பா தமிழர்/ தமிழம்மா பதிப்பகம்/044 24753373


8)ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க/கோபினாத்/சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன் /sixthsensepub@yahoo.com


9)தினம் ஒரு தியான மலர்/தேவநாதசுவாமிகள்(காஞ்சிபுரம் கோயில் அல்ல)/ நர்மதா பதிப்பகம்,சென்னை/ 044- 24334397


10) Census of india/Dr.Chandra mouli/dcotn@vsnl.net


11)புதிய திருவிளையாடற்புராணம் - காஞ்சி ச்ங்கராச்சாரியார் கொலை வழக்கு --- ஏன்? எதற்கு? எப்படி?/கி.வீரமண /திராவிடர் கழக வெளியீடு,பெரியார் திடல், 50, ஈ.வி.கே சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 7 www.viduthalai.net


12) நடுங்கும் கடவுளின் கரங்களில் இருந்து/பின்னி மோசஸ்/வம்சி புக்ஸ் /vamsibooks @yahoo.com


13) எம்.ஜி.ஆர் .பேட்டிகள்/தொகுப்பு.எஸ்.கிருபாகரன்/ஆழி பப்ளிஷர்ஸ் /aazhieditor@gmail.com


14) நேர்காணல் --- காலாண்டிதழ் -- புஞ்சையிலிருந்து புரிசைக்கு/பவுத்த அய்யனார் /ayyapillai@gmail.com


15) மலச்சிக்கலைத் தவிர்க்க 6 வழிகள்/இயற்கைப் பிரியன் இரத்தின சக்திவேல்/ காளீஸ்வரி பதிப்பகம்/044- 24314347


16) நான் சந்தித்த மரணங்கள் /மரண கானா விஜி/கருப்பு பிரதிகள் / karuppu2004@rediffmail.com


17)துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்/புதிய கலாச்சாரம் வெளியீடு/044 -- 23718706, 28412367


18) பிரபாகரன் சிந்தனைகள்/ ஆரூர் தமிழ் நாடன் - இளைய செல்வன்/ நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் /044 --- 43993029


19) பாதுகாப்பைத் தேடும் மனம், 19அ)துக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியுமா?, 19 ஆ)போராட்டமின்றி வாழ முடியாதா?/ஜே.கிருஷ்ணமூர்த்தி/ krishnamurthy foundation of india publications@kfionline.com


20) செந்தமிழ் அகராதி (மாற்றுத் தமிழ்ச் சொற்கள்)/யோ.கில்பட்/தெய்வப் புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம்/stlouispress@gmail.com


21) ஈழம் மவுனத்தின் வலி/தொகுப்பு :த.செ. ஞானவேல்/ நல்லேர் பதிப்பகம்/ nallaerpathippagam@gmail.com


22)சூரிய கதிர் மாதமிருமுறை இதழ் ‍‍ (பிரபாகரன் கன்னத்தில் அறைந்தது யார்?கட்டுரைக்காக/editor@suriyakathir.com


23)உன்னதம் மாத இதழ் ‍‍ ( நாடு கடந்த அரசுகள் கட்டுரைக்காக)/ www.unnadhamblogspot.com


24) தமிழ் எழுத்துப் பயிற்சி /மதுரை பாபாராஜ் -- லட்சுமிப்ரியா/info@applebooks.com


ந‌ண்பர்களே !

புத்தகக் கண்காட்சிக்குப் போகும் வாய்ப்பு உங்களுக்கும் கிடைத்ததா? என்ன புத்தகம் வாங்கினீர்கள்?இது போல் , விரும்பினால் வாங்க முடியும் அளவுக்கு முழு விவரங்களோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்.

பரிமாறிப் பயன் பெறுவோம். வருக வருக!
விதுரன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆயிரத்தில் ஓருவன் படத்தில் கூறப்படும் சோழர் கதை சரியா
உங்கள் கருத்து


விதுரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......