எனக்குத் தெரியாது
ஒருமுறை தமிழறிஞர் மறைமலை அடிகளார் தமிழாசிரியர் வேலைக்கு விண்ணப்பம் அனுப்பியிருந்தார்.பள்ளி நிர்வாகியினர் அவரை நேர்காணலுக்கு அழைத்துள்ளனர்.அவர்மு சென்றார்.அப்பொழுது அங்கு அவரிடம் ஒரு வினா எழுப்பப்பட்டது.
'குற்றியலுகரத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டுக்களைக் கூறுவும்'என்பதே அவ்வினா.
மறைமலை அடிகள் 'எனக்குத் தெரியாது 'என்று அமைதியாக கூறினார்.
வினா கேட்டவர் மீண்டும் அவருடம் 'எங்களது வினாவிற்கு என்ன விடை ' என்று வினவினர்.
மறுமுறையும் அடிகளார் அவர்கள் 'எனக்கு தெரியாது 'என இரண்டு சொற்களுக்கும் இடைவெளிவிட்டு அழுத்திக் கூறினார்.
வினாகேட்டவர்களின் மத்தியில் இருந்த மற்றொரு தமிழ் புலவர் அடிகளார் கூறும் பதிலினைப் புரிந்து கொண்டு புன்னகைபுரிந்து கொண்டு .அங்கிருந்த மற்றவர்களுக்கு அவர் கூறிய பதிலை விளக்கினார்.
'எனக்கு' 'தெரியாது' என்னும் இரண்டு சொற்களுமே குற்றுகரச் சொற்கள்தான் என்றார்.அதற்குப் பிறகு அடிகளாரைக் வினா விடுக்கவும் அஞ்சி பேட்டியை முடித்துக்கொண்டனர்.

கருத்துகள்
முதல்முறையாக உங்கள் இணையதளத்தைப் பார்த்தேன். சிறப்பாக உள்ளது. உங்கள் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துகள்...
சீ.பிரபாகரன்
புதுச்சேரி.
இது போன்ற இடுகைகளை இன்னும் எதிர் பார்க்கிறேன் :)
வாழ்த்துகள் சகோதரி
அன்புடன்
கி. விசுவநாதன்