காக்கையைச் சமைத்து....


நகைச்சுவை நடிகரும்,தமது படங்களின் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவருமான கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு படத்தில் நடிக்கும் போது'காக்கையைச் சமைத்து கருவாடு மென்று தின்பார்கள் படித்தவர்கள்' என்றார்.

இதைப் பார்த்த அவர் நணபர் ஒருவர் அவரிடம் கேட்டார்,நீங்கள் படத்தில் கொடுத்துள்ள விளக்கம் வேடிக்கையாக இருக்கிறதே! அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.காக்கையைப் பொதுவாக கறியாக சமைத்துச் சாப்பிடுவதில்லை,கருவட்டை மென்று பொதுவாக தின்பதில்லையே? கடித்து தான் தின்பார்கள்.


அதற்கு கலைவாணர் விளக்கம் கூறினார். உணவு பற்றாக்குறை நாட்களில் அதிகம் உண்ணக் கூடாது என்று கருதி படித்தவர்கள் கால் (பங்கு)காயை மட்டுமே கறி சமைத்து உண்பார்கள்.கால் + காய் - காக்காய்

அந்த கால் காயாவது உண்ணாவிட்டால் அவர்களது உடம்பு வாடிவிடும் என்பதற்காக அதை உண்பார்கள்.'கரு' பிறந்த உடம்பு 'வாடும்' எனுற தின்பார்கள். கரு + வாடும் + மென்று = கருவாடுமென்று தின்பார்கள் என்று விளக்கம் அளித்தாராம்.

விளக்கம் கேட்ட நண்பர் பொருள் புரிந்து அமைதியாக சென்றாராம்.

கருத்துகள்

passerby இவ்வாறு கூறியுள்ளார்…
இது கலைவாணரின் சொந்தமாக வடிக்கப்பட்ட சொற்களா என்பதில் எனக்கு ஐயமே.

இச்சொற்கள் தமிழகத்தில் தொன்றுதொட்டு நின்று நிலவும் ஒரு வழக்கமானவையே.

இது ஒரு பிராமணன் எப்படி வாழவேண்டும் என சாத்திரங்கள் சொன்னதாக எடுத்துக்காட்டுபவை. ‘காக்காய் கறி சமைத்து கருவாடுமென்று தின்பான் பிராமணன்’ என்பதுதான் அது.

ஒருவேளை உண்பவன் யோகி.
இருவேளை போகி
மூவேளை ரோகி.

பிராமணன் தன் பிராமணத்துவத்தை பிச்சையெடுத்து உண்பதிலேதான் காப்பாற்ற முடியும். அப்பிச்சையும் கேட்டுப்பெறுவதல்ல. கொடுப்பதை வாங்கி மனமகிழ்ச்சியில் உண்பதே அது. அது எப்போது, எங்கே எவரிடம் என்றெல்லாம் வரையறுப்பவை சாத்திரங்கள். (எடுத்துக்காட்டாக, இரவிலோ, பொழுது சாயும் வேளையிலோ பிச்சைக்குச் செல்லக்கூடாது. இரவு உணவு பிராமணனுக்குத் தடுக்கப்பட்டது. அது அவன் சத்துவகுணத்துக்கு இடுக்கண்ணாக இருக்குமென்பதால்.)

இதன்படி, ‘ஒரு காயை, முழுவதும் உட்கொள்ள அவாக்கொள்ளாமல், பாதியாககூட உண்ண மறுத்து, கால் பகுதியை மட்டும் சமைத்து, அஃதை உட்கொள்ளினும் கூட, அஃது ஒரு போகமாகி விடுமோ (கருவாடுமோ?) எனவஞ்சி வாழ்பவனே பிராமணன்.

கால்காய் கறிசமைத்து, அதைசாப்பிடாலும்கூட தன் கருவாடும் எனவஞ்சி வாழ்பவர்.

கொச்சைத்தமிழில், ‘காக்காய் கறிசமைத்து, கருவாடுமென்று தின்பான்’ எனவாகிறது.

பாராட்டுகள் போய்ச்சேரவேண்டியது நகைச்சுவை நடிகருக்கல்ல ! பண்டைக்காலத்தில் வாழ்ந்த முகந்தெரியா யாரோ ஒருவருக்கு!!
rathinapugazhendi இவ்வாறு கூறியுள்ளார்…
இதுபோன்ற வழக்காறுகளை இன்னும் பதிவிடுங்கள் தோழி.
வாழ்த்துகள். கள்ளபிரானின் கருத்துரையும் கவ்னிக்கத்தக்கதுதான்,அது இப்பதிவிற்கு கூடுதல் பலம்தான்.
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பகிர்வு
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க கள்ளபிரான் நீங்கள் தந்த தகவலுக்கு நன்றி...
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சேகரன்...
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க புகழேந்தி உங்கள் வருக்கைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்