காந்திக்குச் சட்டை

ஒருமுறை மாகாத்மாகாந்தி ஒரு பள்ளிக்குச் சென்றிருஃந்தார்.காந்தியைக் கண்டதும் மாணவர்கள் எழுந்து நின்று வணங்கினார்கள்.காந்தி சட்டைப்போடாமல் இருந்ததைக் கண்ட ஒரு சிறுவன் 'பாபு! உங்களுக்குச் சட்டைக் கிடையாதா? என் அம்மா அழகான சட்டைத் தைத்துத் தருவார்கள் .உங்களுக்கும் ஒரு சட்டை தைத்துத் தரட்டுமா?' என்று வெகுளிஃத்தனமாக துணிச்சலுடன் கேட்டுவிட்டான்.

ஆசிரியர்களும் அதிகாரிகளும் காந்தி என்ன நினைப்பாரோ என்று பதறினபோனார்கள்.

காந்தியடிக்ள சிரித்துக்கொண்டே 'தம்பி எனக்கு 40 கோடி சகோதரர்கள் இருக்கின்றார்கள்.அவர்கள் அனைவருக்கும் ஆளுக்கு ஒரு சட்டை தைத்துத் தர உன் அன்னையால் முடியுமா? அப்படியானால் நானும் சட்டைப் போட்டுக் கொள்கின்றேன்'என்றார்.

இதைக் கேட்ட சிறுவன் என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் திகைத்து நின்று விட்டான்.

இப்படி இன்றுள்ள அரிசியல் வாதிகளைக் கேட்டால் என்ன சொல்லுவார்கள்?

கருத்துகள்

ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
பகிர்வுக்கு நன்றிங்க
குப்பன்.யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
குறை சம காலத்து அரசியல் வாதிகள் மீது அல்ல.

காந்தி காலத்தில் வாக்காளர்கள் கொள்கை, வேட்பாளர்கள் தகுதி திறமை பார்த்து வாக்கு அளித்தரகள.

இன்று சம கால வாக்காளர்களாகிய நாம் ஜாதி, மதம் பார்த்து வாக்கு அளிக்கிறோம், எனவே தவறு நம் மீதே.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சேகரன்...
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உண்மைதான் குப்பன்...நாளை கிடைக்கும் பலாபழத்தை விட இன்று கிடைக்கும் கிளாக்கனியே மேலென்று மக்கள் எண்ணத்தில் பதிந்துவிட்டதால்...
சு.செந்தில் குமரன் இவ்வாறு கூறியுள்ளார்…
தேர்தலுக்கு முதல் நாள் வந்து, '' ஓட்டுப் போடறியா தர்றேன் ''என்பார்கள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்