தேங்காய் எதற்கு தெரியுமா?.

ஒருமுறை கரந்தை கவிஞரான வேங்கடாசலம் பிள்ளை ஒரு நாள் தன நண்பர்களுடன் உரையாடிக் கொண்டு இருக்கும் போது,

"திருமணத்தில் ஏன் தேங்காய் போட்டு தாம்பூலம் கொடுக்கிறார்கள் தெரியுமா ? " என்று புதிராக கேள்விக்கணையைத் தொடுத்தார்.காரணம் தெரியாது நண்பர்கள் விழிக்க,

நகைப்புடன் அதற்கான விளக்கத்தை அவர் பாணியிலேயே கூறினார்.

" தேங்குதல் என்றால் தங்குதல் என்று பொருள்.தேங்காய் என்றால் இவ்விடத்தில் தங்கியிருக்காதே என்று பொருள்.திருமண வீட்டில் நம் கையில் தேங்காயைக் கொடுத்து விட்டால் போய்வாருங்கள் என்று கூறுவதாகப் பொருள்" என்று விளக்கமளிக்க அங்கு கூடியிருந்த நண்பர்கள் அவரின் நயமானப் பேச்சினைக் கேட்டு மகிழ்ந்தனர்.

கருத்துகள்

அண்ணாமலையான் இவ்வாறு கூறியுள்ளார்…
அப்படியா?
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆம் அண்ணாமலை இப்படியும் பொருள் கொள்ளலாம்....
அண்ணாமலையான் இவ்வாறு கூறியுள்ளார்…
சரி கொண்டுக்கறேன்...
கண்மணி/kanmani இவ்வாறு கூறியுள்ளார்…
அட தேவுடா யூனிவர்ஸ்ட்டி பேரைக் கெடுக்கிறாரே இப்படி தமிழ் எழுதி இந்த அண்ணாமலையான்
சு.செந்தில் குமரன் இவ்வாறு கூறியுள்ளார்…
மாட்டுத் தொழுவத்திற்குத் தொழுவம் என்று பெயர் வரக் காரணம் , நமக்காக
உழைக்கும் மாடுகளைத் தொழுது வணங்க வேண்டும் என்பதற்காகத்தான்.
யேசு நாதரே தான் பிறக்கத் தேர்ந்தெடுத்த இடம் மாட்டுத் தொழுவம் தானே.
ஒருவனை அடைந்த உடன்
' எப்போது அவனை விட்டு செல்வோம் செல்வோம்' என்று முயல்வதால்தான்
செல்வம் என்றே பெயர்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்