அங்கே போகாதே....

உளவியலின் தந்தை என்று போற்றப்படுபவரான சிக்மண்ட் ஃப்ராய்ட் ஒருமுறை தன் மனைவியுடனும் மகனுடனும் வெளியே சென்றார்.

குழந்தையை சற்று விளையாட விட்டு விட்டு ஃபாராய்டும் அவர் மனைவியும் தீவிரமாக எதைப் பற்றியோ பேசிக்கொண்டு இருந்தார்கள்.பேசிகொண்டு இருந்த ஆர்வத்தில் விளையாடிக்கொண்டு இருந்த மகனை கவனிக்க மறந்தனர்.

அவர்களுடைய உரையாடல் முடிந்து விளையாடியப் பையனைத் தேடினால் காணவில்லை.இருவரும் சேர்ந்து குழந்தையை எங்கே போயிருப்பான் என்று சுற்றும் முற்றும் தேடிப்பார்த்தனர்.கண்டுபிடிக்க முடியவில்லை.

அப்போது தன் மனைவியைப் பார்த்து ஃப்ராய்ட் கேட்டார்," நீ அவனை ஏதாவது ஒரு இடத்திற்குப் போக வேண்டாம் என்று கூறினாயா?" என்று கேட்டார்.

"ஆமாம் ! அருகில் உள்ள நீருற்றுன் பக்கத்தில் மட்டும் போகாதே என்று சொன்னேன்!" என்றார்.

இருவரும் அந்த இடத்திற்குச் சென்று பார்த்த போது,நீருற்றின் அருகே அவர்களது மகன் விளையாடிக் கொண்டிருந்தான்.இதைக் கண்ட அவரது மனைவிக்கு ஒரே ஆச்சரியம்!
" இங்கே தான் அவன் இருப்பான் என்று எப்படி யூகித்தீர்கள் " , என்று தன் கணவனைப் பார்த்துக் கேட்டார்.

அதற்கு அவர் சொன்னார்" நமது குழந்தைகள் நாம் எங்கு போகக் கூடாது என்று சொல்கிறோமோ அங்கு தான் முதலில் போவார்கள்! குழந்தைக்ள மட்டுமல்ல பெரியவர்களும் அப்படித்தான் " என்று கூறினார்.

கருத்துகள்

குப்பன்.யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
Yes Froid is perfectly correct. We human beings have more ego and hence will not listen to other's words.
அண்ணாமலையான் இவ்வாறு கூறியுள்ளார்…
உண்மைதான்
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி குப்பன்....
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க அண்ணாமலையான் உங்கள் கருத்துக்கு நன்றி....
கண்மணி/kanmani இவ்வாறு கூறியுள்ளார்…
ம்ம் அது தமிழர் குணம்னு நெனச்சேன்.உலகுக்கே பொதுவானது போலும் செய்யாதே என்றால் செய்வது
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
சில பொதுவான குணங்கள் உலகம் முழுதும் பொருந்தும் கண்மணி அவர்களே....
”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி இவ்வாறு கூறியுள்ளார்…
நம் அப்பாக்கள் சொல்வதைத் தான் ஃப்ராய்டும்
சொல்லியிருக்கிறார். எல்லா அப்பாக்களும் இப்படித்தான் சொல்வார்கள் போல...
ஆனால் இந்த 'டெக்னிக்' எல்லா இடத்திலும்
செல்லாது. என் பையனை படிக்காதே என்றேன்.
சமர்த்தாக சொன்னதைக் கேட்டான்.
”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி இவ்வாறு கூறியுள்ளார்…
நம் அப்பாக்கள் சொல்வதைத் தான் ஃப்ராய்டும்
சொல்லியிருக்கிறார். எல்லா அப்பாக்களும் இப்படித்தான் சொல்வார்கள் போல...
ஆனால் இந்த 'டெக்னிக்' எல்லா இடத்திலும்
செல்லாது. என் பையனை படிக்காதே என்றேன்.
சமர்த்தாக சொன்னதைக் கேட்டான்.
சு.செந்தில் குமரன் இவ்வாறு கூறியுள்ளார்…
உண்மை
முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பகிர்வு முனைவரே..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்