இகிரு (வாழ்தல்)
மனித மனத்தின் நுண்ணுணர்வை திரைமொழியாக்கும் ஜப்பானிய இயக்குநர் அகிரா குரேசவாவின்
படம் இகிரு. பணியாற்றும் காலத்தில் பிறருக்கு எந்த வகையிலும் பயன்படமால் முப்பது ஆண்டுகளாக
அரசு பொதுப்பணித்துறையில் விடுப்பே எடுக்காத, தொடர்ந்து பணிப்பாதுப்பை மட்டுமே முன்னிருத்தி
எப்பொழுதும் வேலை செய்துகொண்டிருப்பது போல தோற்றத்தைக் கொடுத்து, தலைமை அலுவலராக உயர்ந்து,
சில மாதங்களில் ஒய்வு பெற இருக்கும் நிலையில், குடல் புற்று நோயால் சில மாதங்களில்
இறந்துவிடுவோம் என்று தெரியும் போதும் தன் மகனால் புறக்கணிக்கப்படும் நிலையில் ஒரு
மனிதன் எப்படியான முடிவை நோக்கி நகர்வான் என்பதையும் அதனூடாக அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின்
செயல்பாடுகளையும் பேசுகிறது இகிரு .
படத்தின் தொடக்கத்தில் ஒரு ஊடுகதிர் (எக்ஸ்ரே) காட்டப்படுகிறது. பின்னணியில்
நமது கதாநாயகனுக்கு வயிற்றில் புற்று நோய் என்பதை அறியாமல். தன் பணியில் முழுமையாக
செய்து கொண்டிருக்கிறார் என ஒலிக்கிறது.
கதாநாயகன் வடனபே பொதுப்பணித்துறையில் தற்போது தலைமை அதிகாரியாகப் கடந்த முப்பதாண்டுகளாகக்
கடமையே கண்ணாக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் வேலை செய்கிறார் ஆனால் கோப்புகள் குவிந்து
கிடக்குதே ஒழிய அதற்கான எந்த முடிவுகளும் எடுக்கப்படாமலே அவர் நாடகள் கழிந்துவிட்டன
(மக்களுக்கான பணிகள் நடப்பதைவிட பணிபாதுகாப்பு மட்டும் தானே முதன்மை) . அவர் மட்டுமல்ல
அங்கிருக்கும் அலுவலர் பலர் அப்படித்தான் இருக்கின்றனர். வடனபேக்குத் தன்னைச் சுற்றி
என்ன நடந்தாலும் எவ்வித் எதிர்வினையையும் காட்டதாவர். சிரிப்பைத் தொலைத்தவர். அந்த
அலுவலகத்தில் ஒரு பெண் பணிபுரிகிறார். அவள் மட்டும் எப்பொழுதும் ஏதாவது நகைச்சுவை சொல்லி
சிரித்துக்கொண்டிருப்பாள். அன்று அவள் சிரித்துக்கொண்டிக்கும் பொழுது எதற்காக சிரிக்கிறாள்
என்று கேட்டவுடன் அவள், ஒருவர் தினமும் அலுவலகத்திற்கு வேலையிக்குப் போகக் கூடிய தன்
நண்பனிடம் கேட்கிறார். நீ தினமும் இவ்வளவு ஆர்வத்துடன் ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல்
வேலைக்குப் போகிறயே? உன் அலுவலகத்தில் நீ இல்லாமல் வேலை எதுவும் நடக்காதா என்ன? என்று
கேட்க. நீ வேற நான் போகமலிருந்தால் இந்த வேலை எவ்வளவு எளிது என்று அறிந்துகொள்வார்கள்
நான் வேலை பளு என்று கூறியதெல்லாம் பொய்யாகிவிடும், அது எனக்கு ஆபத்து என்றானாம் என்று
கூறுகிறாள். அந்த அலுவலகத்தில் உள்ளோர் தங்களை நோக்கி கூறப்பட்டதாகவே நினைக்கத் தொடங்கினர்.
அத்தருணத்தில்,
அப்பகுதியைச் சேர்ந்த சில பெண்கள், தாங்கள் வசிக்கும் பகுயில் குப்பைக் குளங்களும்
கழிவுகளும் நிறைந்து குடிநீரில் கலப்பதாகவும் கூறியதுடன் அப்பகுதியைச் சுத்தப்படுத்தி
குழந்தைகளுக்கான பூங்கா அமைத்து தரும்படியும் மனு கொடுக்க வருகிறார்கள். இது எங்கள்
அலுவலகத்திற்குத் தொடர்பில்லை கட்டம் கட்டு அலுவலகத்தில் கொடுங்கள் என்கிறார்கள். அங்கு
சென்றால் வேறு இடம் அனுப்புகிறார்கள் இப்படியாக பல அலுவலகங்களுக்கு அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
இறுதியாக அவ்வூர் மேயரிடம் செல்கிறனர். அவர்
மீண்டும் பொதுப்பணித்துறைக்கே அனுப்பி வைக்கிறார்.
அப்பெண்கள் மீண்டும் மனுவை பொதுப்பணித்துறைக்கே எடுத்துவருகின்றனர். அன்று நம் கதாநாயகன் விடுப்பில் சென்று விடுகிறார்.
அம்மக்கள் கோபம் கொண்டு கத்துகிறார்கள். அங்கு
பணியாற்றும் ஊழியர் தலைமை அதிகாரி வந்தவுடன் மனுவைக் கொடுத்துவிடுவதாக கூறுகின்றனர்.
அலுவலக ஊழியர்கள் முப்பது ஆண்களாக விடுப்பே எடுக்காத மனிதர் எதற்காக விடுப்பு
எடுத்துள்ளார் என ஆளுக்கு ஒன்றாகப் பேசுகிறனர். ஒருவர் அவருக்கு மிக மோசமான உடல் நிலை,
ஒருவேளை மரணித்துக்கூட விடுவார் என்கின்றார். மற்றொருவர் அவரின் இடத்துக்குத் தான் வந்துவிடலாம் என்று பேசி சிரித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இன்னொருவர் நான் கூட அந்த பதவிக்கு வந்து விடலாம் என்று கூற. உடனே பெண் ஊழியர்
உனக்கு முன் நான்கு பேர் இறந்தால் தான் அந்த பதவிக்கு வரமுடியும் என்று நக்கலாகக் கூறுகிறாள்.
வடனபே மருத்துவமையில் ஊடுகதிர் எடுத்துவிட்டு மருத்துவரைப் பார்க்க காத்திருக்கிறார்.
அப்பொழுது ஒருவர் அவரிடம் மருத்துவர்கள் வயிற்றில்
புற்று நோயை வந்தால் எல்லாம் சரியாகவிடும் கவலைப் படாதீர்கள் வயிற்றுப்புண் என்று கூறுவார்கள்
என எதிர்மறையாகக் கூறிக்கொண்டிருக்கிறார். அது பிடிக்காமல் விலகி அமர்கிறார் வடனபே.
மருத்துவரைப் பார்க்க உள்ளே சென்ற போது மருத்துவர் உங்களுக்கு வயிற்றுப்புண் விருப்பமான
உணவினை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். அவருக்குப் புரிந்துவிடுகிறது சில
மாதங்கள் மட்டுமே உயிர் வாழ்வோமென. அங்கிருந்த மருத்துவர்கள் ஆறு மாதங்கள் மட்டுமே
உயிர்வாழ்வார் எனத் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர்.
வீட்டிற்கு அவருடைய மகனும் மருமகளும் வருகிறனர். வீடு இருளடைந்து காணப்பெறுகிறது.
இருவரும் வீடு வேறு வாங்குவது குறித்துப் பேசிக்கொண்டே வருகின்றனர். தன்னுடைய தந்தையின் ஒய்வு காலத் தொகை
தனக்குக் கிடைக்கும் என்று மனைவியிடம் கூறிக்கொண்டு விளக்கைப் போட அங்கு வடனபே அமர்ந்திருப்பதைப்
பார்த்தவுடன் துணுக்குறுகின்றனர். எதனால் தனது தந்தை விளக்கை கூட போடமால் இருளில் தன்
அறையில் காத்திருக்கிறார் என்ற கூட சிந்திக்காமல் ஏன் எங்கள் அறையில் வந்து அமர்ந்திருக்கிறீர்கள்
உங்கள் அறைக்குச் செல்லுங்கள் என மகன் விரட்டுகிறார்.
தன் அறைக்குத் திரும்பிய வடனபே தனது
இறந்த மனைவியின் புகைப்படத்துக்கு முன் நின்று பழைய நினைவுகளில் மூழ்குகின்றார். அவருடைய
நண்பர் மனைவி இறந்தவுடன் வேறு திருமணம் செய்துகொள்ள கூறுகிறார் வடனபே தன் மகனைக் காக்கும்
பொறுப்புத் தனக்கு உள்ளது வேறு திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று மறுக்கிறார். அவரின்
நண்பர் உன் மகனுக்குத் திருமணமான பிறகு உன்னை
நினைக்க மாட்டான் அப்பொழுது நீ தனிமையை உணர்வாய் என்கின்றார்.
அவர் விடுப்பு எடுத்துக்கொண்டு வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு போகிறார். அவரின்
அப்பாவின் போக்கு புரிந்துகொள்ளத பையன் அப்பாவின் நண்பரிடம் போய் சொல்ல உன் அப்பா இளமை
திரும்பி விட்டது போல.
அவர் பணத்தை எடுத்துக்கொண்டு பாருக்குப் போகிறார். அங்கு ஒரு எழுதாளரைசந்திக்கிறார்.
எனக்குத் தூக்கம் வராது தூக்கமாத்திரை வேண்டும் என்கிறார். தூக்க மாத்திரை இப்பொழுது
கிடைக்காது என்று கூற. அப்பொழுது கதாயாநகன் தூக்க மாத்திரை கொடுக்கிறார். எழுத்தாளரிடம்
தன் கதையைக் கூற, எனக்கு இப்பொழுது எயிறு அல்ல மனம் வலிக்கிறது. என்னை என் பையன் இப்பொழு
பாரமாக நினைக்கின்றான். நான் என் செய்வது எனக்கு செலவு கீட செய்யத் தெரியாது என்ன செய்வது.
இருவம் சேர்ந்து பெண்கள் நடமாடு இடம் பல இடங்களுக்குச் செல்கினாறர்கள். ஒரு பெண் அவருடைய
தொப்பியைத் தூக்கிச்செல்கிறார். அதனை
ஒரிடத்தில் பாடகர் பாட்டுப்பாடிக்கொண்டிருக்கின்றனர். ஒரு சோகமான பாடல் வாழ்க்கை
மிக குறுகியது. அதற்குள் உனக்குப் பிடித்தபடி பிறர்க்கு பயன்படும்படி வாழ்ந்துவிடு.
அலுவலகத்தில் இவரைப் பற்றிய பேச்சுகள் தொடர்கிறது. அந்த மனிதருக்கு ஒழுங்காக
சாப்பிடுவதில்லை. டொய்யோ பெண் அந்த வேலை பிடிக்காமல் வேலை விட்டு நிறுத்த விரும்புகிறாள்
அதற்கு கதாநாயகன் கையெழுத்துப் போடவேண்டும். அப்பொழுது அவரைச் சந்திக்கிறாள். எனக்கு
உங்களுக்கு கையெழுத்து வேண்டும் என்று கேட்கிறாள். சீல் வீட்டில் இருக்கிறது வருகிறாயா
என்று கேட்கிறார் அவளும் வருகிறளாள். அப்பொழுது வீட்டாரால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.
அந்த பெண்ணிடம் சீல் வைத்து கொடுக்கிறார்.அ ப்பொழுது அவளுடைய காலைக் கவனிக்கிறார் அவளுடைய
காலுரை கிழிந்துள்ளது. நானும் வெளியில் வருகிறேன் என்று வருகிறார். அப்பொழுது அங்கு
ஒரு கடையைப் பற்றிக் கேட்கிறார். அங்கு அவளுக்கான உடைகள் அனைத்துப் பொருட்களையும் வாங்கி
கொடுக்கிறார். பிறகு உணவு விடுதிக்குச் செல்கின்றனர். அவளுடன் சுற்றுவது அவளுக்குப்
பிடிக்கும். அன்று அவள் சொன்ன நகைச்சுவை அவளுக்குப் பிடிக்கும் என்று கூறுகிறார். நிறைய
விருதுகள் கிடைத்துள்ளது ஆனால் ஒரே போராக இருந்துள்ளது.
பலருக்கு பல பெயர் வைத்துள்ளேன் என்று சொல்கிறாள். உங்களுக்குக் கூட பேர் உண்டு.
சொல் என்று கேட்கிறார். மம்மி என்று பெயர் சொல்கிறாள்.
திரைப்படத்திற்குச் செல்கின்றனர். வீட்டிற்கு வந்தவுடன் மகன் திட்டுக்கிறான்.
வேலையை செய்யும் பெண்கள் கூட மோசமாகப் பேசுகிறார்கள்.
அடுத்த நாள் அந்த பெண் வேறு வேலையில் சேர்ந்துவிடுகிறாள். அந்த இடத்திற்கு அவர்
சென்று தன்னுடன் வருமாறு அந்த பெண்ணைக் கூப்பிடுகிறார். அவள் அரசு அலுவலகம் போல இல்லை
இது இங்கு வேலை செய்ய வேண்டு என்று கூறுகிறள். வற்புறுத்தி கூற வெளியில் செல்லுகிறள்.
ஒரு உணவு விடுத்திக்குச் செல்கின்றனர் அங்கு பிறந்த விழா கொண்டாட்டம் ஒன்று நடக்கிறது.
அங்கு இருவரும் பேசிக்கொண்டிருப்பர்.அ ப்பொழுது அந்த பெண் ஏன் தன்னை அழைத்துக்கொண்டு
வருகிறார் என்ற கேள்வி எழுகிறது. அப்பொழு அவள் கேட்கிறாள் நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய்
என்ன செய்கிறாய் தனக்குப் புற்றுநோய் என்று கூற
மீண்டும் வேலைக்குப் போகிறார். அங்கு முன்பு மக்கள் கொடுத்த அந்த மனுவை மறுபரீசிலனைச்
செய்கிறார். மனுவைத் தானே எடுத்துக்கொண்டு
போகிறார் மற்றவர்கள் இயலாது என்று கூற அவர் மேற்கொள்கிறார். ஐந்து மாதம் கடந்துவிடும்.
அவர் இறந்துவிடுவார்.
இறந்த நிகழ்வில் அனைவரும் பேசுகின்றனர். அங்கு வந்த பொறியியல் மைதானம் அமைக்கும்
தலைவர்கள் அனைவரும் தங்கள் தான் காரணம் என்று பேசிவிட்டுச் செல்கிறார்கள். ஆனால் அவர்கள்
அலுவலகத்தில் பணிபுரிந்த அலுவலர்கள் பேசிக்கொள்ளுவார்கள் எவ்வளவு பொறுமையாக விடாப்பிடியாக
காத்திருந்து வாங்கி அத்தனை சாதாரண அலுவர்களிடமும் வணங்கி வாங்கினார் இறுதியாக மேயரிடம்
செல்ல அவரும் திட்ட. போகாமல் அங்கேயே நின்று தொடர்ந்து தொந்தரவு செய்ய அருடைய டல்நிலை
சரிநிலையில்லாத காரணத்தினால். அத்துடன் தேர்தல் நெருங்கி வருவதால் கையெழுத்தும் இட்டுக்
கொடுக்கின்றனர். அந்த இடத்தில் பெரும் பணக்காரன் ஒருவன் வாங்கி வேறு தொழிலைப் தொடங்க
நினைத்து அவரை மிரட்டுகின்றான். கொன்றுவிடுவேன் என்று கூறுகிறான். அதற்கும் அஞ்சாமல்
தொடர்ந்து மேற்கொள்கிறார். அப்பொழுது அங்கு உள்ள மக்கள் தெய்வ நிலைக்கு வணங்கிச் செல்வார்கள்.
காவல்துறை அதிகாரி ஒருவர் அவருடை தொப்பியை எடுத்துக்கொண்டு வருவார். அவர் ஊஞ்சலில்
ஆடிக்கொண்டு இனி இறந்தால் கூட கவலையில்லை என்று பாடிக்கொண்டு இருந்தார். வாழ்க்கை மிகச்
சிறியது நேசியுங்கள் என்று கூறுகிறார். ஒரு கடிதம் விட்டுச் செல்கிறார். அதனுள் அவருடைய
சொத்து முழுவதும் தனது மகனுக்காக என்று எழுதியிருந்தார். தன் மகன் வறுத்தப் படுகின்றனர்.
அரசு அலுவலர்கள் அனைவரும் அவரைப் போல வேலை செய்யவேண்டும் என்று முடிவு செய்கின்றனர்.
அதில் பேசிய ஒருவர் தலைமைக்கு வருகின்றார். அப்பொழுது ஒருவர் ஒரு மனுவை கொடுக்க பழைநிலை
போல ஒவ்வொரு இடமாக இருக்கின்றனர். அங்கு அவர் மீது மரியாதையுள்ள ஒருவர் கோபம் கொண்டு
எழுந்திரிக்க அவர்களை மாற்ற முடியாது என்று நினைத்து அமர்ந்துவிட்டது. அந்த குழந்தைகள்
விளையாடு மைதானத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்

கருத்துகள்