தையல் சிட்டும் நானும்
தாயின் பராமரிப்பிலிருந்து பறக்கும் நிலையில் பறக்க எத்தனித்த போது கீழே விழுந்து
கிடந்த தையல்சிட்டு குருவியைத் தமிழ்த்துறையின் நூலகர் திரு ஜோசப் அவர்கள் எடுத்துவந்து
(காலை 10மணி வாக்கில்) முனைவர்பட்ட மாணவர்களிடம் கொடுத்துள்ளார். தையல்சிட்டு வந்த
செய்தியை அறிந்து பார்க்க சென்றேன். அதனை உள்ளங்கையில் பொத்தி வைத்துக்கொண்டு இருந்தார்கள்.
அதனால் எதுவும் செய்ய இயலாது என்றார்கள். நான் அதனை வாங்கி கொண்டு வந்து சொட்டுச் சொட்டாகச்
சில சொட்டுகள் தண்ணீர் கொடுத்தேன். சிறிது நேரத்தில் கண்விழித்துப் பார்த்தது. அடுத்து
என் கையிலிருந்து என் மேலே ஏறியது. பையப்பைய நகர்ந்து தோளில் அமர்ந்து பிறகு என் கையில்
கட்டியிருந்த கடிகாரத்தின் சங்கிலியைப் இறுக பற்றிக்கொண்டது. இறங்கவேயில்லை. அப்படியே
ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றுவிட்டது. எனக்கு வகுப்பு இருந்தது. வகுப்பு எடுக்கச்
சென்றேன். எந்த சத்தத்திற்கும் அசங்கவில்லை. கண்விழித்து விழித்துப் பார்த்துவிட்ட
பழைய நிலைக்கே சென்றது. அது கையில் பிடித்திருந்த பிடியை நகர்த்தவே இல்லை. வகுப்பு
மாணவர்கள் பிடித்து இழுத்துப்பார்க்கின்றார்கள் எதற்கும் அசைந்து கொடுக்கவே இல்லை.
ஆனால் என் கையின் மீது கழிந்துவிட்டது. துடைத்துக் கொண்டேன்.
சிலர் கேட்டனர் இது என்ன பொம்மையா ? சிலர் அதனை மயக்கி வைத்துள்ளீர்கள் என்றார்கள்?
இப்படி அதைப்பற்றிய பேச்சாகவே அன்று இருந்தது. வகுப்புகள் முடித்துவிட்டு மதிய உணவுக்கு
வீட்டிற்கு வந்தேன். காரை நான் ஓட்டிக்கொண்டு வரும் பொழுது என் கையை விட்ட அசையவில்லை.
வீட்டிற்கு வந்தவுடன் தையல் சிட்டிடம் வீட்டிற்கு வந்துவிட்டோம் நீ என் கையைவிட்டு
அகலாமலே இருக்கிறயே. இறங்கிகொள்ளேன் என்று உணவு மேசையின்( உணவுநிலைமேடை) மீது விட்டேன்.
உடனே இறங்கிக்கொண்டது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதற்கு என்ன உணவு கொடுப்பது என்று
இணையத்தில் தேடினேன். இது போன்ற பறவைகளுக்கு அதனுடய அம்மா பூச்சி, புழு போன்றவற்றைக்
கொடுப்பதைப் பார்த்தேன். இது என்ன வம்பாகிவிட்டது இதற்கு எங்கே போவது என்று எண்ணிய
படியே. இடியாப்ப மாவை எடுத்து காய்ச்சி ஆற வைத்து ஆறிய பிறகு சிரிஞ்யில்( மருந்து உரிஞ்
குழல்) வைத்து அதற்கு கொடுத்தேன். உண்டது. உடனே வெளியேற்றவும் செய்தது. மேசையில் அங்கும் இங்கும் சிறிது நடந்தது. மின்விசிறியை
நிறுத்திவிட்டேன். சிறிது நேரம் கழித்து பறந்து மின்விசிறியின் மீது ஏறிக்கொண்டது.
ஏணியில் ஏறி அதனை எடுத்து அறையில் பாதுகாப்பாக வைத்தேன். அத்துடன் அதனுடன் உரையடத்
தொடங்கினேன்.
மதியுணவுக்குப்
பிறகு துறைக்குச் செல்லவேண்டுமே உன்னை என்ன செய்வது தனியாக விட்டுச் செல்ல முடியாதே.
என்னோடு நீ வருகிறாயா? என்று கேட்டேன். என் கையில் எடுத்தேன். என் இடது கையின் சுட்டு
விரலில் அமர்ந்தது. நான் கதவை பூட்டிவிட்டு படியில் இறங்க இறங்க என் விரலை முன்னைவிட
இறுகப் பற்றிக்கொண்டது. காரை (மகிழ்வுந்து) ஓட்டிக்கொண்டு துறைக்குச் செல்லும் போதும்
அப்படியே இருந்தது. மதியம் வகுப்பில்லாததால் நூலகத்திற்குச் சென்றேன். அது நடந்துகொண்ட
முறை பற்றி அங்குள்ளோரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். தீடிரென பறந்துவிட்டது. மின் விசி
ஓடிக்கொண்டிருக்கிறது. எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கத்திவிட்டேன். நான்கு
மணிநேரம் என்னோடு இருந்த ஒரு உயிர் போய்விடுமோ என்ற அச்சமும் பதட்டமும் ஏற்பட்டுவிட்டது.
மின்விசிறியில் பட்டு கீழே விழுந்தது. ஓடிச் சென்று பதட்டத்தோடு எடுத்தேன். நல்ல வேளை
அதற்கு ஒன்றும் ஆகவில்லை. சிறிது மயங்கியிருந்தது. தண்ணீர் கொடுத்தேன். மீண்டும் பழைய
நிலைக்குத் திரும்பியது. ஆசுவாசமடைந்தேன். என்னுடைய இடது கையின் சுட்டுவிரலைப் பற்றி
அமர்ந்தது. அது பறந்து செல்ல விரும்பினால் பறக்கட்டும் எனத் திறந்தவெளியில் வைத்துக்கொண்டிருந்தேன்.
ஆனால் செல்லவில்லை. நீ செல்ல விரும்பினால் செல் என்றும் கூறினேன். அதற்கிடையில் மாணவர்கெல்லாம்
அதனை வந்து பார்ப்பதும் பேசுவதுமாக இருந்தனர். மாலை நான்கு மணியாகிவிட்டது. வீட்டிற்குக்
காரில் திரும்பும் பொழுது, இருக்கையில் விட்டேன் உடனே இறங்கிவிட்டது. வீட்டிற்கு எடுத்து
வந்து சிறிது உணவு கொடுத்தேன். அப்படியே ஒரு மணிநேரம் உறக்கத்தில் கழித்தது.
சாரளத்தில் வைத்திருந்த பூந்தொட்டி அருகே
அதனைக் கொண்டு விட்டேன். ஏதேனும் பூச்சிகள் இருந்தால் பிடித்து உண்ணுமோ என்ற எண்ணத்தில்.
அவ்வபோது அதனைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். மாலை ஆறு மணி நெருங்கியது. அதனுடன் உரையாடிக்கொண்டிருந்தேன்.
உன்னை என்ன செய்வது என்று தெரியவில்லை. உன்னுடைய சுதந்திரத்தைத் தடுக்க மாட்டேன். நீ
போக விரும்பினால் போகலாம் என்று கூறிக்கொண்டிருந்தேன். அங்கும் இங்குமாகச் சிறிது நேரம்
பறந்து பறந்து திரிந்தது. பார்த்துக்கொண்டே நின்றேன். சிறிது நேரத்தில் விர்ரென பறந்து
எதிரில் இருந்த வேம்பு மரத்தில் சென்று அமர்ந்தது. அதன் பிறகு காணவில்லை. காலையில்
மரத்தடியில் சென்று பார்த்தேன்.
கருத்துகள்