வள்ளுவம் இதழ் (1999 – 2003)
வள்ளுவம் இதழ் இரு திங்கள் இதழாக சனவரி
பிப்ரவரி 1999 இல் தொடங்கப் பெற்றது. பண்புடையார்ப் பட்டுண்டு உலகு என்னும் தொடரை முதன்மைபடுத்தி
வள்ளுவம் குறித்த கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 22 இதழ்கள் வெளிவந்துள்ளன.
சிறப்பாசிரியர் பேராசிரியர் ச. மெய்யப்பன்.
ஆசிரியர்கள் பல்லடம் மாணிக்கம், பேராசிரியர் இ. சுந்தமூர்த்தி, நெறியாளுகை குழு பேராசிரியர்
தமிழண்ணல், பேராசிரியர் ச.வே. சுப்பிரமணியம், புலவர் இரா. இளங்குமரன், பேராசிரியர்
தி. முருகரத்தினம், மருதமுத்து, ஆசிரியர் குழு க.ப. அறவாணன், ஈரோடு தமிழன்னபன், இரா.
இளவரசு, பா. வளவனரசு, சு. சண்முகசுந்தரம், இன்குலாப், கி. நாச்சிமுத்து வடிவமைப்பு
இராம. கண்ணப்பன், வே. கருணாநிதி, ஒவியர் ட்ராஸ்கி மருது, பல்லடம் மாணிக்கம் பண்பாட்டு ஆய்வு மையம் வழியாக வெளிவந்துள்ளது.
ஐந்தாவது இதழில் (செப்டம்பர்- அக்டோபர், 1999) ஒவியர் ட்ராஸ்கி மருதுவுடன் மாரிமுத்து,
புகழேந்தி இணைந்துள்ளனர். இதழ் வடிவாக்கம் வசந்தகுமார் என்று உள்ளது. 7வது இதழில்(சனவரி-
பிப்ரவரி 2000) ஓவியர் மாரிமுத்து மட்டும் இடம்பெறுகிறார். வடிவமைப்பில் வே. கருணாநிதி
மட்டும் உள்ளார். அதுபோல நெறியாளர் குழுவில் தமிழண்ணல், ச.வே. சுப்பிரமணியம், இரா.
இளங்குமரனார் ஆசிரியர் குழுவில் க.ப. அறவாணன்,
ஈரோடு தமிழன்பன், இரா. இளவரசு, சிற்பி, கி. நாச்சிமுத்து மட்டும் இடம்பெற்றுள்ளனர்.
எட்டாவது இதழில் (மார்ச்சு – ஏப்பரல், 2000) வடிவமைப்பு, இதழ் வடிவாக்கம் இல்லாமல்
அச்சாக்கம் என இரா. குருமூர்த்தி இடம்பெற்றுள்ளார். தொடர்ந்து வரும் 22 ஆம் இதழ் வரையிலும் இவர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்
அமைப்பு
இதழின் தொடக்கத்தில் வள்ளுவர் குறித்த கவிதை இடம்பெற்றுள்ளது. 20 ஆவது இதழைத்
தவிர மற்ற இதழ்களில் ஈரோடு தமிழன்பன், சிற்பி, மு. கருணாநிதி, கவிஞர் முத்துராமலிங்கம்,
நாச்சியார் முருகன், ரகுநாதன். மு.வே. கங்காதரன் ஆகியிரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
அதனை அடுத்து உள்ளடக்கம் மற்றும் ஆசிரியர் விவரங்கள், தலையங்கம், கட்டுரைகள், இதழின்
இறுதி பக்கத்தில் கவிதைகள் கொடுக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்ட ஆய்வறிஞர்கள்
திருக்குறள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளனர்.

கருத்துகள்