பலருக்கு கனவாக இருக்க தமது உழைப்பாலும் முயற்சியாலும் நனவாக்கி இரண்டு ஆஸ்கார் அவார்டுகளைப் பெற்று ,தமிழினத்துக்குப் பெருமைத் தேடி தந்த ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
மனித வாழ்வினை மேம்படுத்தி நல்ல ஒழுக்கத்தையும் மனவலிமையையும் விரிந்த அறிவையும் சுயவலிமையையும் தருவது கல்வி. அண்ணல் காந்தியடிகள் கல்வியைப் பற்றி கூறும்போது ’குழந்தைகளிடமிருந்தும் சரி உடல்,உள்ளம்,ஆன்ம உணர்வு ஆகியவற்றில் சிறந்தவற்றை ஒருங்கே வெளிக்கொணர்வது தான் கல்வி என நம்புகிறேன்’ என்பர். கல்வி ’வாழவின் அணியாகவும் தாழ்வின் துணையாகவும் விளங்குவது’ எனக் கல்வியின் சிறப்புரைப்பர் அரிஸ்டாட்டில். நுண்ணறிவுப் பயிற்சியோடு மனத் தூய்மையையும் ஆன்மீக நெறியையும் கற்பிப்பது கல்வி என மொழிவர் டாக்டர் இராதாகிருஷ்ணன். இக் கட்டுரை மேம்பட்ட செம்மையான மானுடவாழ்விற்குத் தோன்றாத் துணையாகத் திகழும் சிறப்புமிக்க இக்கல்வி தமிழகத்தில் வளர்ந்தநிலையினைத் தமிழ் இலக்கிய சான்றுகளுடன் குறிப்பாக செவ்விலக்கியமாகத் திகழக்கூடிய எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றிச் சான்றுகளை மையமிட்டு அமைந்துள்ளது. காட்டுமிராண்டியான மனிதன் விலங்குகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள எழுப்பிய ஒலி கருத்துடன் கூடியதல்ல. இந்நிலையில் மற்றவர்களின் துணையை நாடிய போது கூடி வாழும் நிலை ஏற்பட்டது.அப்போதுதான் ஒருவர் கருத்தை மற்றவர் புரிந்து கொள்ள...
சங்கதமிழ் இலக்கியங்கள் காதல்,வீரம்,கொடையை மட்டுமன்றி இல்லறத்துக்குரிய அறங்களுள் ஒன்றாக விருந்தோம்பலையும் சிறப்பித்துக் கூறுகின்றன.விருந்தோம்பலில் தமிழரே பேர் பெற்றவர்கள். பழந்தமிழர் விருந்தோம்பலை வாழ்க்கையின் உயிர் நாடியாகக் கொண்டமை, அக்கால நூல்களால் நன்கு தெரிகிறது.பழந்தமிழ் நூல்களில் விருந்து மணமே பெரிதும் கமழ்ந்து கொண்டிருந்தது.விருந்தோம்பலின் அருமையை அறிந்து வள்ளுவர் விருந்தோம்பலுக்கென்று தனியோர் அதிகாரத்தைப் படைத்துள்ளார். 'விருந்து' என்ற சொல் புதுமையைப் குறித்துப் பின்பு ஆகுபெயராய் விருந்தினரைக் குறித்து வழங்கலாயிற்று. 'விருந்து தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே'(பொருளதிகாரம்,237) என்ற தொல்காப்பிய நூற்பா மூலம் அறியலாம். இல்லற நெறி 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே' இல்லறத்தின் தலையாய நெறியாகும். விருந்தோம்பல் இல்லாத வாழ்க்கை இல்வாழ்க்கை ஆகாது. விருந்தோம்பலில் பெண் பெரும் பங்கு பெறுகிறாள்.ஆதலின் 'நல்விருந்தோம்பலின் நட்டாள்' எனத் திரிகடுகம் கூறும். தொல்காப்பியமும் மனைவிக்கு உரிய மாண்புகளாக விருந்தோம்பலையும் சுற்றம் ஓம்பலையும் சுட்டுகிறது. \ 'வி...
இரண்டாம் ஆண்டு – நான்காம் பருவம் 19ITAMC41 – சங்க இலக்கியமும் செம்மொழி வரலாறும் திணை முதற்பொருள் ( நிலம், பொழுது) உரிப்பொருள் கருப்பொருள் (தெய்வம், மக்கள்) குறிஞ்சி மலையும் மலை சார்ந்தும் கூடலும் கூடல் நிமித்தமும் முருகன் (தெய்வம்) குளிர் காலம் முன்பனி (பெரும் பொழுது) யாமம் (இரவு 10 முதல் 2 மணி வரை) சிறு பெழுது குறவன், குறத்தி (மக்கள்) முல்லை காடும் காடு சார்ந்தும் இருத்தலும் இருத்தல் நிமித்தமும் திருமால் கார்காலம் மாலை (முன்னிரவு 6 முதல் 10 வரை) ஆயர், ஆய்ச்சியர் மருதம் வயலும் வயல்சார்ந்தும் ஊடலும் உடல் நிமித்தமும் இந்திரன் ஆறு பெரும் பொழுதுகளும் வைகறை (பின்னிரவு 2 முதல் 6 வரை) உழவர், உழத்தியர் நெய்தல் கடலும் கடல் சார்ந்தும் இரங்கலும் இரங்கல் நிமித்தமும் வருணன் ஆறு பொழுதுகளும் எற்பாடு (பிற்பகல் 2 முதல் 6 வரை) பரதர், பரத்தியர் பாலை...
கருத்துகள்