இசை...

இசைக்கு இசையா உயிர் உண்டா? இசை மனதைப் பக்குவப்படுத்தும்,நம்மை வேறு உலகில் சஞ்சரிக்க செய்யும்,உணர்வுகளைத் தூண்டி இன்ப நாட்டத்தைக் கொடுக்கும், மேலும் நம்மை வயப்படுத்தி தன்மயமாக்கும் தன்மையும் அதற்குண்டு.எப்பொழுது என்றால் செவி வழிப் புகுந்து இதய நாடிகளைத் தடவி உயிரினங்களை இயைவுப் பொருந்தவும் வைக்கின்ற இனிய ஒலிகளாக மாற்றும் பொழுது.

நுண்கலைகளுள் மிக நுட்பம் வாய்ந்த இசைக்கலை என்பர் ஹெர்பட் ஸ்பென்சர்.
இசையின் பெருமையினை

பாலுண் குழந்தை யொடுநற் பசுவும் பணியும்இனும்
ஞாலத் துயர்பண் டிதரும் நல்கியோகியர் ஞானியரும்
கோலத் தமரரும் நானுமுகன் முக்கணன் கோவலனும்
சாலச் சுகமுற ஓங்கிய நற்கலை சங்கீதமே

எனப் பாடுகின்றது தனிப்பாடல்.

ஏழு சுரங்களுக்குள் இசையினை அடக்கினர். வடமொழியில் சட்ஜம்,ரிஷபம்,காந்தாரம்,மத்திமம்,பஞ்சமம்,தைவதம்,நிஷாதம் எனவும், தமிழில் குரல்,உழை, கைக்கிளை, துத்தம், இளி, விளரி, தாரம் எனவும் அழைக்கப்பெறுகின்றது.

இந்த ஏழிசைகள் பிறக்கும் இடங்களை குறிக்கையில் மிடற்றால் குரலும், நாவால் துத்தமும், அண்ணத்தால் கைக்கிளையும், சிரத்தால் உழையும் நெற்றியால் இளியும், நெஞ்சத்தால் விளரியும் மூக்கால் தாரமும் பிறக்கும் எனத் தேர்ந்து புலப்படுத்தியுள்ளனர்.

குரல் முதலிய ஏழு சுரங்களுக்கு ஓசை உவமை குறுகையில் மயில், இடபம், ஆடு, கொக்கு, குயில், குதிரை, யானை ஆகியவற்றின் ஓசையை இயைபுபடுத்தி சுட்டியுள்ளனர்.

சுவைஉவமை கூறுகையில் பால், தேன், கிழான், நெய், ஏலம், வாழை, மாதுளங்கனி அகியவற்றையும் வாசனை மணம் உவமை கூறுகையில் மௌவல், முல்லை, கடம்பு, வஞ்சி, ;நெய்தல், பொன்னாவிரை, புன்னை அகியவற்றையும் ,
தமிழில் அச்சரங்களைக் கூறுகையில் ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ,ஔஉ ஆகியவற்றை இயைபு படுத்தியும்,

மாத்திரை கூறுகையில் குரலுக்கு 4 துத்தத்துக்கு 4, கைக்கிளைக்கு 2, உழைக்கு 3 இளிக்கு4, விளரிக்கு 3, தாரத்துக்கு 2 எனக் கணக்கிட்டும் கூறியுள்ளனர்.

இவற்றுள் ஸ(குரல்) ப (இளி) அகிய இரண்டு சுரங்களும் ப்ருக்ருதி சுரங்கள் எனப்படும் அதாவது எவ்வித மாறுதலும் இல்லாதது என்று பொருள். இச்சுரங்கள் எப்பொழுதும் மாறுபடாது. மற்ற சுரங்கள் விக்ருதி சுரங்கள் என அழைக்கப்பெறுகின்றன. இவை மாறும் சுரங்களாகும்.

கருத்துகள்

துபாய் ராஜா இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான விளக்கங்களுக்கு நன்றி.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க துபாய் ராஜா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ஆரூரன் விசுவநாதன் இவ்வாறு கூறியுள்ளார்…
nice article....greetings
பாலராஜன்கீதா இவ்வாறு கூறியுள்ளார்…
//சுவைஉவமை கூறுகையில் பால், தேன், கிழான், நெய், ஏலம், வாழை, மாதுளங்கனி அகியவற்றையும் வாசனை மணம் உவமை கூறுகையில் மௌவல், முல்லை, கடம்பு, வஞ்சி, செய்தல், பொன்னாவிரை, புன்னை அகியவற்றையும் //
கிழான் மற்றும் செய்தல், பொன்னாவிரை சொற்களைப் பற்றி மேலதிகத் தகவல் இருப்பின் அறியத் தந்தால் நலம்.
Vijiskitchencreations இவ்வாறு கூறியுள்ளார்…
கல்பனா உங்களுக்கு முதலில் வனக்கம். நான் முதல் முறையாக வந்துள்ளேன். நிறய்ய படிக்க வேண்டியுள்ளது இசை மட்டும் தான் இன்று படிக்க முடிந்தது. நல்ல விளக்காம எழுதியிருக்கிங்க. மேலும் மேலும் வருகிறேன்
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ஆருரன்...
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க கீதா நலமா? மன்னிக்கவும் நெய்தல் தவறுதலாக செய்தல் என்று வந்துவிட்டது.கிழான் என்றால் தயிர் என்று பொருள்.பொன் ஆவிரை பொன்போன்ற ஆவாரத்தைக் குறிக்கும்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க விஜி உங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி அடிக்கடி வாங்க.
Nilavan இவ்வாறு கூறியுள்ளார்…
உங்களுக்குள் இப்படியொரு இசை ஞானமா ?! ... ம்.. வாழ்த்துக்கள்..
Nilavan இவ்வாறு கூறியுள்ளார்…
உங்களுக்குள் இப்படியொரு இசை ஞானமா ?!
முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
இசைக்குறிப்புகள் அருமை..
முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
அப்படியே தமிழில் ஆங்காங்கே இருக்கும் இசை மருத்துவக்குறிப்புகளையும் சொல்லுங்களேன்.
அத்திவெட்டி ஜோதிபாரதி இவ்வாறு கூறியுள்ளார்…
குறிப்புகளுடன் விளக்கங்கள்!

அருமை!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
"This is my initial submit on this site and all i can say is thank you for all these useful details! Should you enable, I would like to use some of your content material. I publish articles or blog posts for write-up directories as my portion time task. I'm willing to refernce your site in these articles. Kindly get again to me by way of e-mail ASAP. "

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்