நவ சக்திகள்

மனோண்மணி - பக்குவம் எய்திய உயிர்களை மலத்தினின்று நீக்கிச் சிவத்துடன் சேர்க்கும்

சர்வபூத்தமணி - உயிர்களிலெல்லாம் ஒன்றி உடன் கலந்து நின்று, அவற்றின் புண்ணிய பாவங்களை அகற்றுவிக்கும்.

பலப்பிரதமணி - சூரியனிடத்தில் பதிந்து நின்று தீய கிருமிகளை அழித்து, நல்ல பொருள்கள் பெருகி வளர்வதற்கு ஆக்கம் அளிக்கும்.

பலவிகரணி - சந்திரனிடத்தில் நிலைபெற்ற அமுதத் துளிகளைச் சொரிவித்துப் பயிர்பச்சைகளும் உயிர்த் தொகுதிகளும் தழைத்துச் செழித்தோங்க உதவி செய்யும்

கலவிசரணி - வானத்தில் இருந்த எல்லாப் பொருள்களையும் ஏற்று நின்று அவைகள் தன்னிற் கலந்து இணைய இடம் தந்து நிற்கும்.

காளி - காற்றின்கண் இனிது கலந்து பிராணமயமாய் விளங்கி, உயிர்களுக்கு நலம் விளைவிக்கும்.

இரவுத்திரு - நெருப்பின் கண் தங்கி அதற்கு வெப்பம் அளித்து நிற்கும்.

சேட்டை - நீரில் நிலைபெற்று அதற்றுகுக் குளிர்ச்சியையும் சுவையையும் உண்டாக்கும்.

வாமை - மண்ணில் விளங்கி ஐம்பூதங்களின் இயல்புகளும் செயல்களும் நிகழுமாறு செய்யும்.

கருத்துகள்

ராம்ஜி_யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான பதிவு

நன்றிகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்