சக்தி - தத்துவ நோக்கு

தனக்கு நிலைக்களமான பரப்பிரமத்தின் வெளித்தோற்றமே சக்தி என வழங்கப் படுகிறது. சக்தியை முக்குணங்களின் காமியாவஸ்தை என்றும் அவ்வியக்தம் என்றும் மூலப் பிரகிருதியான மாயையென்றும், சத்தான பிரமத்திற்கும் அசத்தான பிரபஞ்சத்திற்கும் விலட்சணமானது என்றும் கூறுவர். அதன் பொருள் யாவற்றையும் இயற்றும் திறமை என்பதாகும்.

இத்தன்மை வாய்ந்த சக்தியானது சத்துவ குணத்தையடைந்தால் காப்பாற்றும் சக்தியெனவும், இராசத குணத்தையடைந்தால் சிவராசிகளைப் படைக்கும் சக்தியெனவும், தாமத குணத்தையடைந்தால் அழிக்கும் சக்தியெனவும் அழைக்கப்பெறும். இதனால் மும்மூர்த்திகளின் ஆற்றல்களும் சக்திக்கு உண்டென்பது அறியவேண்டிய தத்துவமாகும்.

சக்தியைத் த்ததுவ நோக்கில் உணர்ந்து உபாசிக்கும் சாக்தர்கள் தம் வழிபாடு கடவுள் மனத்தால் நினைக்கவோ ,கண்ணால் காணவோ, இலக்கணங்களால் தெரிவிக்கவோ முடியாத சிறப்புடையது அப்பாலுக்கு அப்பாலான நிலையினையுடைய அரும்பொருளாக மதிக்கின்றனர். தொடக்கம் சக்திநடுநிலைமை, முடிவு என்ற மூன்றும் அற்றதாக அப்பொருள் இரிப்பினும், பெரும்பாலும்
சக்தி என்ற பெண்ணாலான சொல்லினாலே பக்தியுடன் வழங்கப் படுவதால் அது பெண்பாலாகவே கருதப்படுகிறது. பக்தர்களின் தத்துவம் உலகில் அருளியலில் பயன்படுவான் வேண்டிச் சாகதர்கள் சில அணுகுமுறையைப் பின்பற்றி வருகின்றனர்.

அறிகின்றான் , விரும்புகின்றான், முநல்கின்றான் என்ற வழக்குகளில் பிரமாணத்தினால் ஞானம், இச்சை, கிரியை என்ற வடிவமாயிருப்பதோடு , மகத்தத்துவம்,அகங்காரம், பஞ்ச பூதங்கள், ஞானேந்திரியங்கள், கன்மேந்திரியங்கள், மனம், பத்தி, பிராணன், கேட்டல், முகர்தல், சுவைத்தல், தொடுதல், பேசுதல், எடுத்தல், போதல், விடுதல் முதலிய பலவிதச் செய்கைகளும் இச்சக்தியின் வடிவங்களேயாகும். இவ்விதம் பலவாக திகழும் சக்தியின் நுட்பத்தினை ஆராய்ந்தறிவதே பந்தத்தினின்று விடுதலை பெறுவதற்குரிய வழியென்பது இவ்வுபாசகர்களுடைய சித்தாந்தமேயாகும்.

சக்தி, பல்வேறு வடிவங்களில் வழிபடப் பெறுவது பலரும் அறிந்ததே, சக்தி வழிபாட்டினரும் தத்தமக்குரிய சக்தியின் வடிவங்களை மனத்திலை கற்றபித்துக் கொண்டு அவற்றுக்கும் கலைவடிவந் தந்து, உபாசனை ஆர்வமுடன் புரிந்து, கோரிய பலன்களைப் பெற்று வருகின்றனர். தாம் கொண்ட தத்துவ அணுகுமறைக் கேற்றபத் தனிப்பட்ட முறையுலே மந்திரங்களையும் வழிபாட்டு விதிகளையும் அமைத்துக் கொண்டு சமயநெறியைப் போற்றி வருகின்றனர். சமய நூல்களிலே காணப்பெறும் மந்திரங்களைத் தாமாபக் கற்றால் ஒருவிதமான பலனும் கிடைக்காது எனக் கருதி, குருவின் உபதேச வாயிலாக முறையாக தீட்சை பெற்று, அதற்கேற்பச் சாதனங்களையும் அமைத்துக் கொண்டு, சக்தியை வழிபடுவதிலையே பெரிதும் நாட்டஞ் செலுத்தி வருகின்றனர். மேலும் தாம் வழிபடும் சக்தியாகிய கடவுளுக்குப் பல பண்புகளையும் பல திருவுருவங்களையும் கற்பித்துக் கொண்டு அர்ச்சா மார்க்கத்தையே மேலெனப் போற்றி வருகின்றனர். மந்திர - தந்திர - யந்திரத்தின் பெருமையையும் உணர்ந்து, பறர்க்கும் அப்பயன்பாட்டினை உணர்த்தி வருகின்றனர்.

சக்தி உபாசகர்களின் உட்பிரிவுகளையும் அவற்றின் தத்துவங்களையும் பற்றி மிக விளக்கமான கூறுகளைத் தத்துவ நூல்களாகிய ருத்திரயாமலம், ஞானார்ணவம், தந்திரராசம் ,சாரதாதிலகம், பிரபஞ்ச்சாரம், திரிபுரா ரகசியம், யோகினி ஹிருதயம், வாபகேச்வரதந்திரம், சதுமசதி, சூலசூடாமணி, மகாநிர்வாண தந்திரம், தந்திரலோகம், ஸ்ரீ நெந்திர தந்திரம், ஸ்ரீ வித்தயார்ணவம், காமகளா விலாசம் முதலியவற்றில் உள்ளன.

கருத்துகள்

Ahamed irshad இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் ப்ளாக்கை பார்க்கையில் இயல்பாக இருக்கிறது. பெயரும் வித்தியாசம்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி அஹமத்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்