விளக்கு.....விளக்கு...

பொதுவுடமைத் தோழர் ப.ஜீவானந்தம் ஒரு முறை ஒரு மண்டபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டுருந்தார்

அவர் பேசிக்கொண்டு இருக்கும் போது எதிர்பாராத விதமாக மின் தடை ஏற்பட்டது.

அப்போது அங்கு கூடியிருந்த மக்களில் பலர் விளக்கு விளக்கு என்று குரல் எழுப்பினர்.

அந்த இருட்டிலும் ஜீவா அவர்கள் நகைச்சுவையுடன் ' தோழர்களே ! நான் உங்களுக்குப் பல செய்திகளை விளக்குவதற்காக வந்திருக்கின்றேன்.இத்தனை நேரம் உங்களுக்கு அவைகளை விளக்குவதற்காக உரையாற்றி வருகின்றேன்.எரிந்த விளக்குகள் வராவிட்டால்கூட,நான் உங்களுக்கு விளக்குவேன்.ஆகவே,அணைந்து போன விளக்கு பற்றி கவலைப்படாமல் நான் விளக்குவதைக் கேளுங்கள் ' என்று கூறினாராம்.

உடனே கூட்டத்தில் இருந்து சிலர் விளக்கு இல்லை என்றால் நீங்கள் விளக்குங்கள் என்று குரல் கொடுத்தனர்.

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல இடுகை. பதிவின் பின்னூட்டமிடும் பகுதியை அழகான தமிழில் கொடுத்திருக்கிங்க. அருமை.

நீங்க சிதம்பரமா?
கண்மணி/kanmani இவ்வாறு கூறியுள்ளார்…
வார்த்தை விளையாட்டிலும் சமயோசிதத்திலும் தமிழர்களை வெல்ல முடியாது
முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பகிர்வு..
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க கே.வி.ஆர் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.ஆம் நான் சிதம்பரம் தான்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க கண்மணி உங்கள் வருகைக்கு நன்றி....நீங்கள் கூறுவது முற்றிலும் சரியே....
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி முனைவர் குணா...
துபாய் ராஜா இவ்வாறு கூறியுள்ளார்…
திரு.ஜீவா அவர்களின் இடத்திற்கேற்ற சிலேடைப் பேச்சு அருமை.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
கல்பனா, நானும் சிதம்பரம் தான். தற்பொழுது பணிநிமித்தம் ரியாத்தில்.
சு.செந்தில் குமரன் இவ்வாறு கூறியுள்ளார்…
'பாலின்றிப் பிள்ளையழும்
பட்டினியால் தாயழுவாள்
வேலையின்றி நாமழுவோம்‍ --- தோழனே
வீடு முச்சூடும் அழும் '

என்று
தமிழகத் தொழிலாளர்களின்
நிலையை த் தெளிவாக
விளக்கியவருக்கு
விளக்கில்லாமல்
விளக்குவதா சிரமம்?
ராம்ஜி_யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
good post, madam

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்