திருமணத்தில்.......
சிலப்பதிகாரம் மூன்று கண்டங்களையும் 30 காதைகளையும் கொண்டுள்ளது.முதல் காதையான மங்கலவாழ்த்துப் பாடலில் கோவலனுக்கும் கண்ணகிக்கும் நடக்கும் திருமண நிகழ்ச்சியை விவரிக்கின்றார் இளங்கோவடிகள்.ஒரு திருமணம் என்றால் எப்படி நடக்கும்,அதில் யாரெல்லாம் பங்கு பெறுவார்கள்,அவர்கள் என்னென்ன செய்கின்றார்கள் என்பதை மிக அழகாக நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்திகின்றார். திருமண நாளில் முரசு முதலியன இயம்பின,மத்தளம் முதலியன அதிர்ந்தன,சங்கம் முதலியன முழங்கின,மங்கல அணி அரசன் வெண்குடை கீழ் உலா வருவது போல் அந்நகரினைச் சுற்றி எடுத்து வந்தனர். திருமண மண்டபத்தில் ஆழாகன பூவேலைபாடுகள் நிறைந்து,அப்பூவேலைப்பாடு செய்துள்ள தூண்களில் வயிரமணிகள் பதிக்கப்பெற்றுள்ளன.மண்டபத்தின் மேலே நீல பட்டினால் அலங்காரம் செய்யப்பெற்று அதில் முத்துக்கள் தொங்கவிடப்பெற்றுள்ளன. அம் மண்டபத்தில் அழகிய பெண்கள் தங்களை நன்றாக அலங்காரம் செய்து கொண்டு,மேனிமுழுதும் பொன்னாலாய நகையினை அணிந்திருப்பதால் விளங்குகின்ற மேனியை உடையராய் உள்ள அவர்கள் விரைந்து அங்கும் இங்கும் ஓடிக்கொண்டும்,மலர்களை கையில் ஏந்திகொண்டும்,தங்களுக்குள்ளே பேசிக்கொண்டும்,சிலர் பாடிக்கொண்ட...