இணைமொழிகள்

கரவரிசையின் தொடர்ச்சியான இணைமொழிகள்.இது போன்ற இணைமொழிகள் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளலாமே.

காக்கனும் போக்கனும் கொள்ளை கொண்டு போனார்க்ள.
பிள்ளைக்ள காச்சுப்பூச்சென்று கத்திக்கொண்டு இருந்தார்கள்.
எங்கு பார்த்தாலும் காடும் செடியுமாய் இருக்கிறத்.
காடுமேடாய் அலைந்து திரிந்தான்.
காதிலே கழுத்திலே ஒன்று மில்லை,
காமா சோமா என்று கத்திக் கொண்டு இருந்தார்.
பயிர்கள் காய்ந்து கருகிவிட்டன.
காரசாரமற்ற பேச்சு.
கானான் கோனான் என்று நாதங்கி கடுக்கன் தொங்குகிறது.


கிட்டதட்ட அவன் சாயல்.
கிட்ட முட்ட அவனை வரவிடாதே.
கிண்டி கிளறி எடுத்தான்.
கிணறு குட்டை இருந்தால் குளிக்கலாம்.
கிழங்கெட்டை வீட்டில் இருப்பது நல்லது.

ஆடு கீரைகுழை தின்னும்.
கீரியும் பாம்பும் போலப் பகை.

குஞ்சுங் குழுவானுமாய் இருக்கிறது அவன் குடும்பம்.
குட்டி குறுமான் எல்லாம் வந்துவிட்டன.
குண்டக்கமண்டக்கமாய் அவனை கட்டித் தூக்கிக் கொண்டு போனார்கள்.
தரை குண்டும் குழியுமாய் இருக்கிறது.
குணங்குற்றம் யாருக்கும் உண்டு.
குணங்க குறிகளைக் கண்டுப்பிடிக்க வேண்டும்.
கால் குத்தலும் குடைசலுமாய் இருக்கிறது.
அரிசியைக் குத்திக்கொழித்து ஆக்கவேண்டும்.
வீடுவாசல் குப்பைக்குளமாய் கிடக்கிறது.
கும்பக் குழிய அளந்தான்.
கும்பிக் கொதித்து நின்றான்.
கும்பிட்டு கூத்தாடி வணங்கினான்.
குலங்கோத்திரம் பார்.
குலமும் குணமும் ஒத்த காதலர்.
குழந்தை குட்டி பெருத்தவன்.
குளங் குட்டையில் தண்ணீர் இல்லை.
குற்றங்க குறைகள் இருந்தால் பொறுத்துக் கொள்.
குற்றநற்றம் பார்க்க கூடாது.
குறுக்கு நெடுக்குமாக இருக்கிறது.
குறுக்கு மறுக்கும் திரிகிறான்.

கூட்டநாட்டம் இப்போது நடக்கிறதில்லை.
கூட்டிக் குறைத்து பேசுவான்.
கூடக்குறைய இருந்தால் சொல்.
கூடமாட வேலை செய்.
கூடிக்குலவி திரிகின்றனர்.

கெஞ்சிக்கெதறி கேட்பான்.

கேட்பார் கேள்வியில்லை.
கேடபாரும் மேய்பாரும் இல்லாமல் திரிகிறான்.
கேள்வி முறையில்லாமல் இருக்கிறது.
கேளும் கிளையும் கெட்டாருக்கு இல்லை.

கையும் களவுமாகப் பிடிப்பட்டான்.
கையுங்காலும் வைத்துக்கொண்டு சும்மாயிருக்க மாட்டான்.
கையுங்க காலுமாய் வந்து சேர்ந்தான்.
கையும்மெய்யுமாய் பிடிப்பட்டான்.

கொக்கு குருவி எல்லாம் போய்விட்டன.
கொஞ்சிக குலாவி பேசுகின்றனர்.
கொஞ்சநஞ்சமாவது பாத்துப் பேசு.
கொட்டுக்குழல் இல்லாமல் சடங்கு நடந்தது.
கொடிவழியில் கல்யாணம் செய்வார்.
கொடுக்கல்வாங்கல் நிறைய இருக்கிறது.
கொண்டான் கொடுத்தான் வீட்டில் நெடுநாள் தங்க கூடாது.
கொண்டு கொடுத்து வாழவேண்டும்.
வறியவர் கொத்தடிமை குலவடிமையாய் வாழ நேர்ந்தது.
காயை கொத்திக்குதறி வைத்திருக்கிறான்.
கொத்தோடு குலையோடு கொண்டு போனான்.
மரம் கொப்பும் குலையுமாக தழைத்திருந்தது.
கொள்வினைக் கொடுப்பினை அவர்களிடம் இல்லை.

கோட்டை கொத்தளமெல்லாம் காவல் செய்யப்பட்டன.
தெருக்கள் கோணல் மாணலாக உள்ளன.
கோயில் குளம் செல்லவேண்டும்.
கோலுங்க கொடுக்குமாய் கட்டிக்கொண்டு திரிகிறான்.
கோள்குண்டுணி சொல்கிறவனை நம்பாதே.
(பாவாணர் நூலில் கண்டது)

--------------------தொடரும்.

கருத்துகள்

Admin இவ்வாறு கூறியுள்ளார்…
தெரியாத பல இணை மொழிகளை அறியக் கிடைத்தது நன்றிகள். தொடருங்கள். வாழ்த்துக்கள்...
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வருகைக்கு நன்றி சந்ரு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......