இயற்கைப் புனைவு


குறிஞ்சிப்பாடுவதில் வல்லவரான கபிலர், அகநானூற்றில் ஒரு பாடலில் இயற்கையை வெகு அழகாக காட்சிப்படுத்துகின்றார்.அப்பாடலைப் படிக்கும் போது குறிஞ்சி நிலப் பகுதிக்குச் சென்று வந்ததைப் போன்ற உணர்வு நமக்குத் தோன்றும்.


கண்ணிற்கும் மனதிற்கும் விருந்தளிக்க கூடிய பசுமையான மலைப் பகுதி ,அங்கு உள்ள மூங்கில் மரங்களை வண்டுகள் துளைத்துள்ளன.அத் துளையின் வழியே காற்றுப் புகுவதால் ஒலி எழுகின்றது.அவ்வொலி குழலிசையாக ஒலிக்கின்றது.அருவியில் இருந்து வீழும் நீரின் ஓசை இனிய முழவின் ஒலியை ஒத்து இருக்கின்றது.மலைப் பகுதியல் விளையாடும் மான் இனங்கள் எழுப்பும் ஒலிபெருவங்கியத்தின் இசையாக விளங்குகின்றது.அங்கு பறந்து திரியும் வண்டுகள் எழுப்பும் ஒலி யாழிசையாக மயக்குகின்றது.இவற்றையெல்லாம் ,அக்காட்டில் உள்ள குரங்குகள் வியந்து நோக்க ,பக்கத்து மலைகளில் தோகை விரிந்நு ஆடும் மயில்கள் விறலியர் போன்று தோன்றுகின்றனவாம்.

எத்தனை அழகான காட்சி.நம்முடைய முன்னோர்கள் இயற்கையோடு ஒன்றி ,அதனோடு வாழ்ந்து படைப்புக்களைப் படைத்துள்ளார்கள் பாருங்கள்.

ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கின்,
கோடை அவ்வளி குழலிசை யாகப்
பாடின் அருவிப் பனிநீர் இன்னிசைத்
தோடமை முழவின் துதைகுர லாகக்
கணக்கலை இகுக்கும் கடுங்குரல் தூம்பொடு
மலைப்பூஞ் சாரல் வண்டியாழ் ஆக,
இன்பல் இமிழிசை கேட்டுக் கலிசிறந்து,
மந்தி நல்லவை மருள்வன நோக்கக்
கழைவளர் அடுக்கத்து இயலிஆ டும்மயில்
நனவுப்புகு விறலியின் தோன்றும் நாடன்(அகம் 82;1-10)

கருத்துகள்

குப்பன்.யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
மிக அருமை, பகிர்தலுக்கு நன்றிகள் பல.

குப்பன்_யாஹூ\
குப்பன்.யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
புனைவு என்பது வர்ணனை வகை சாருமா அல்லது கற்பனை என அர்த்தமா.

குப்பன்_யாஹூ
Admin இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லதொரு இடுகை நல்ல பல விடயங்களை அறிந்து கொள்ள முடிந்தது நன்றிகள்....
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
//புனைவு என்பது வர்ணனை வகை சாருமா அல்லது கற்பனை என அர்த்தமா.// வாங்க குப்பன் உங்கள் வருகைக்கு நன்றி.

கற்பனை என்பது ஒன்றைப் புதிதாகப் படைக்கும் அல்லது உருவாக்கும் ஆற்றல்.அல்லது இல்லாதவற்றை இருப்பதாக நினைத்துப் பார்த்தல்.புனைவும் கற்பனை அடிப்படிப்படையில் உருவாக்குவதுதான்.
வர்ணனை என்பது நேரில் சென்று பார்ப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்துவது.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வருகைக்கும் கருத்துக்கும் நனிற சந்ரு.
Ezhilan இவ்வாறு கூறியுள்ளார்…
இயற்கை இனிமையாக விவரிக்கப்பட்டுள்ளது.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கு நன்றி அரசு.
கோவி.மதிவரன் இவ்வாறு கூறியுள்ளார்…
சிறப்பான பதிவு. சங்க இலக்கியத்தை அறிந்து கொள்ள நல்லதொரு வாய்ப்பு. தொடருங்கள்

தமிழால் ஒன்றுபடுவோம்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் கோவி.மதிவரன் அவர்களே உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி........

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்