புலவர்கள் போற்றும் புலவர்கள்

சங்க பாடல்களைப் படிக்கும் போது ,அக்காலப் புவர்களிடையே எவ்விதமான காழ்ப்புணர்வுகளும் இல்லாமல் தம்மை ஒத்த புலவர்களை மதித்துப் போற்றும் பாங்கினைக் காணமுடிகின்றது.

புறநானூற்றில் பொறையன் என்னும் புலவர் குறிஞ்சி பாடல்களைப் பாடுவதில் சிறந்தவரான கபிலரைப் போற்றிப் பாடுகின்றார்.

செறுத்த செய்யுள் செய்செந் நாவின்
வெறுத்த கேள்ளவி விளங்கு புகழ்க் கபிலன்
இன்றுளன் ஆயின் நன்றுமன்!(புறம்,53)

கபிலர் பல பொருளையும் அடக்கிய செய்யுளை இயற்றும் செவ்விய நாவையும்,மிகுந்த அறிஞானத்தையும்,பல்லோர் புகழ்ந்து ஏத்தும் சிறப்பினையும் உடையவர் எனப் பாடுகின்றார்.


மாறோகத்து நப்பசலையார் என்ற புலவரும் கபிலரைச் சிறப்பித்துப் பாடுகின்றார்.

நிலமிசைப் பரந்த மக்கட் கெல்லாம்
புலனழுக் கற்ற் அந்த ணாளன்
இரந்துசெல் மாக்கட்க் இனியிடன் இன்றிப்
பரந்திசை நிற்கப் பாடினன்.(புறம்,126)

மண்ணில் பரவியுள்ள மக்களுக்கெல்லாம் புலமைக் குறை இல்லாத அந்தணனாகிய கபிலன்,இரந்து செல்லும் புலவர்களுக்கு இனி இடம் இல்லையாகப் பெருகிய புகழ் நிலைக்கப் பாடினான் என்று கபிலரின் கவி திறனைக் கண்டு வியக்கின்றார்.

பதிற்றுப் பத்தில் பெருங்குன்றூர் கிழார் கபிலரின் பாடலின் சிறப்பையும்,பாடலால் அவர் பெற்ற ஊர்களையும் பாடுகின்றார்.
அரசவை பணிய அறம்புரிந்து வயங்கிய
மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின்
உவலை கூராக் கவலைஇல் நெஞ்சின்
நனவினும் பாடிய நல்இசைக்
கபிலன் பெற்ற ஊரினும் பலவே.(பதிற்றுப்பத்து,85)
பகையரசர்களின் அவைகள் பணியவும்,அறத்தை விரும்பியும் அதற்கு இடையூறு ஏற்பட்டால்,அதனைக் காத்தற் பொருட்டு மறத்தை விரும்பி செயற்பட்டு விளங்கிய ,அவனது கொள்கையைச் செம்மை விளங்கிய நாவினாலும்,இழிவும் கவலையும் இல்லாத மனத்தினாலும் மெய்மயாய் பாடிய கபிலர் பரிசிலாகப் பெற்ற ஊர்கள் பல .


மதுரை நக்கீரனார் என்னும் புலவர் அகநானூற்றில் கபிலரின் வாய்மையைப் பாடுகின்றார்.

உலகுடன் திருதரும் பலர் புகழ் நல்லிசை
வாய்மொழிக் கபிலன்.(அகம்,78)
உலகுடன் இணைந்து வருகின்ற பல்லோர் போற்றும் சீர்த்தியைக் கொண்ட பொய்யாமொழிக் கபிலன் எனப் பாராட்டி உரைக்கின்றார்.


பெருஞ்சித்திரனார் புறநானூற்றில் மோசிகீரன் என்னும் புலவரைச் சிறப்பித்துப் பாடுகின்றார்.
.................திருந்துமொழி
மோசி பாடிய ஆயும் (புறம்,158)

அதுபோலவே அந்துவனாரை மருதன் இளநாகன் என்ற புலவர் அகநானூற்றுப் பாடலில் சிறப்பித்துப் பாடுகின்றார்.

அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை ( அகம்,59)

கருத்துகள்

ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி நடத்தும் கட்டுரை போட்டி பற்றி உங்களுக்கு தெரியும் என்றே நினைக்கின்றேன்...

சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி

உங்களிடமிருந்து கட்டுரைகளை எதிர்ப்பார்கின்றோம்... உங்கள் கல்லூரி மாணவர்களுக்கு தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்.... முடிந்தால் ஒரு இடுகை எழுதுங்கள்
மிக்க நன்றி அம்மா
Admin இவ்வாறு கூறியுள்ளார்…
மிகவும் பயனுள்ள ஒரு இடுகை, உங்கள் இடுகைகள் அனைத்துமே அருமை தொடருங்கள் வாழ்த்துக்கள்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் சேகரன் உங்கள் தளத்தில் கண்டேன்.மாணவர்களிடமும் இச் செய்தியினை அறிவிக்கின்றேன்.மிக்க நன்றி.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாருங்கள் சந்துரு உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல....
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
// முனைவர் சே.கல்பனா கூறியது...

வணக்கம் சேகரன் உங்கள் தளத்தில் கண்டேன்.மாணவர்களிடமும் இச் செய்தியினை அறிவிக்கின்றேன்.மிக்க நன்றி.//

நன்றி
குமரன் (Kumaran) இவ்வாறு கூறியுள்ளார்…
கபிலருக்கும் பாரிவேளுக்கும் இடையே இருந்த நட்பைப் பற்றி புறநானூற்றில் கிடைத்த பாடல்களைத் தரவுகளாகக் கொண்டு ஒரு தொடர் கதை எழுதினேன். அப்போது கபிலரைப் போற்றும் இந்தப் பாடல்கள் தெரியாமல் போய்விட்டது. இப்போதாவது நீங்கள் அறிமுகப்படுத்தியதால் தெரிந்ததே என்று மகிழ்கிறேன். நன்றி முனைவரே.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்