திருநாவுகரசு சுவாமிகள் வரலாறு

என்கடன் பணிசெய்து கிடப்பதே என்னும் கொள்கையில் உறுதியாக நின்று உழவாரப்பணி மேற்கொண்டு, சமணத்தில் இருந்து சைவத்திற்கு மாறிய போது தன்னை துன்புறுத்திய மகேந்திர பல்லவ மன்னனைச் சைவ சமயத்தின் பால் ஈடுபடவைத்து,பாம்பு தீண்டி இறந்த அப்பூதியடிகளின் மகனை உயிர்பெற்று எழச்செய்து,திருமறைக்காட்டில் பாடியே கோயில் வாசலை திறக்கச்செய்து,எனப் பல செயற்கரிய செயல்களைச் செய்து 80 வயது வரை திணைத்துனையும் இறைபற்று நீங்காமல்,

‘சிவனென்னும் ஓசை யல்ல தறையோ வுலகில்
திருநின்ற செம்மை யுளதே’

என இறைதொண்டு ஆற்றி, இறையடி அடைந்தவர் மருள் நீக்கியார் என இயற்பெயர் கொண்டு ,இறைவனால் நாவுக்கரசர் எனவும் திருஞானசம்பந்தர் பெருமானால் அப்பர் எனவும்,தமது வாக்குத் திறத்தால் வாகீசர் எனவும்,தாண்டகம் என்னும் பாவகையைச் சிறப்பாக பாடியதால் தாண்டக வேந்தர் எனவும் அழைக்கப்பெற்ற திருநாவுகரசர் ஆவார்.
திருமனைப் பாடி என்னும் நாட்டில் உள்ள திருவாமூர் என்னும் ஊரில் வேளாண் மரபு குடி வழிவந்த புகழனார் ,மாதினியார் என்னும் இணையருக்கு மூத்த பெண்ணாக திலகவதியார் என்னும் புகழ்ச் செல்வியார் தோன்றினார். அவர் பிறந்து சில ஆண்டுகள் கழிந்து ஒளி விளங்கு கதிர் போல ஒரு ஆண்மகவு பிறந்தது.அவருக்கு மருள் நீக்கியார் எனப் பெயரிட்டுப் போற்றி வளர்த்தனர்.

தமக்கை திலகவதியாருக்கு மண வயது வந்தவுடன் பெற்றோர்கள் மண முடிக்க விழைந்தனர்.அவ்வமயம் கலிப்பகையார் என்னும் வேளாண்குடி தலைவர் திலகவதியாரை மணந்து கொள்ள விரும்புவதாக சிலரைத் தூது அனுப்பினார். திலகவதியார் பெற்றோரும் ,அதற்கு இசைவு தெரிவித்தனர்.

கலிப்பகையார் நாடாளும் வேந்தனுக்கு ஊற்றுழி உதவும் நோக்கில்,மன்னரை எதிர்த்த பகை நாட்டை வெல்லும் பொருட்டுச் சேனைத் தலைவராக பொறுப்பேற்றுப் படை நடத்திச் சென்றார். இடையில் திருயாவுகரசரின் தந்தையார் நோய்வாய்பட்டு இறையடிசேர,அவர்தம் மனைவியாரும் கணவன் பிரிவைத் தாளாது தன் இன்னுயிரை நீத்தார்.
போருக்குச் சென்ற கலிப்பையாரும் தம் வீரம் புலப்படும் படி போராடி, நாடுக்காக தன் உயிரை இழந்தார். பெற்றோரை இழந்து துன்புற்றிரிந்த திலகவதியாருக்கு இச்செய்தி பேரிடியாக இருந்தது.தாயும் தந்தையும் அவருக்கே கொடுப்பதா இசைந்தார்கள்,அதனால் அவர்குரியவளாவேன்,என் உயிரும் அவருக்கே எனத் தன்னுயாரை மாய்த்துக் கொள்ள துணிந்தார்.அப்பொழுது அவர் தம்பியாராகிய மருள் நீங்கியார், தந்தையும் தாயும் இல்லாத நிலையில் என்னை விட்டு நீங்களும் நீங்கினால் நான் என்ன செய்வேன்,என்னை கைவிட்டுச் செல்லவேண்டும் என் எண்ணினால் உங்களுக்கு முன்னால் நான் உயிர் துறப்பேன் என்று கூற,திலகவதியார்,தன் தமயனின் நிலையை எண்ணி ,தனது இன்பங்களை எல்லாம் துறந்து,தமது தம்பிக்காக வாழத்துவங்கினார்.திலகவதியார் தாயும் தந்தையுமாக இருந்து தமயனைப் பேணி வளர்த்தார்.

திருநாவுகரசு சுவாமிகள்,


எம்மை யாரிலை யானும் உளனலேன்
எம்மை யாரும் இதுசெய வல்லரே
அம்மை யாரெனக் கென்றென் றரற்றினேன்
கம்மையாரைத் தநாதார் ஆரூர் ஐயரே

எனத் திருவாரூர் திருக்குறுந்தொகையில் பெற்றோரை இழந்து ஆதரவற்று இருந்த நிலையில் ,தாயக இருந்து என்னை போற்றி பாதுகாக்க அம்மாயாரைத் தந்து அருள் புரிந்தாய் என்று பாடுகின்றார்.

திலகவதி அம்மையாரால் சீரும் சிறப்புமாக வளர்க்கபெற்ற மருள்நீங்கியார், இளமையிலேயே நிரம்பிய அறிவு பெற்று,உலகிலுணர்ந்து,யாக்கை ,செல்லவம் நிலையில்லாதது என உணர்ந்து,தன்னால் இயன்ற நல்லறங்களை மக்களுக்கு செய்ய வேண்டுமென எண்ணினார்.

வெயிலின் வெம்மை தணியச் சோலைகள் , உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத நல்ல நீர் நிறைந்த குளங்கள் தோண்டுதல், ,வறிய இரவலர்களுக்கு இல்லையெனாது பொருள்வழங்கி மகிழ்தல்,விருந்தினரை பண்போடு உபசரித்தல்,செந்தமிழ் நாவலர்களுக்கப் பரிசு பொருள்கள் நல்க்குதல், எனப் பிறருக்காக வாழும் நன்னெஞ்சினராய் திகழ்ந்தார்.


இவ்வாறு வாழ்ந்து வரும்காலை,சமணசமயத்தின் பால் ஈடுபாடு ஏற்பட்டு, சைவசமயத்தினின்று நீங்கி சமணசமயத்தில் இணைந்தார்.சமணசமயத்தில் பால் சென்ற மருள்நீங்கியார்.அச்சமயத்தில் உள்ள அரிய பல நூல்களையும் கசடற நன்கு கற்றுத் தேர்ந்து,புத்தசமயத்தின் ஒருசாரராகிய தேரர்களை வாதில் வென்று,தனது புலமையை வெளிப்படுத்தியதால்,அவருக்கு அம்மத்தின் உயர்ந்த பதவியான தருமசேனர் என்னும் பட்டம் வழங்கப்பெற்றது.

சிவநெறி நீங்கி சமணநெறி புகுந்த தம்பியாரை எண்ணி துன்புற்று,திருவதிகை வீரட்டானத் திருக்கோயிலை அடைந்து,அங்குள்ள கோயில் பணிகளை மேற்கொண்டு,தம்முடைய தம்பியார் மீண்டும் சைவசமத்திற்கு திரும்ப வேண்டுமென இறைவனை பலமுறை இறைஞ்சினார்.

திலகவதியாரின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ‘நீ உன்னுடைய மனக்கவலையைத் தவிர்பாயாக,உன்னுடன் பிறந்த தம்பி முன்னமே முனியாகி எமையடையத் தவமுயன்றான்,அன்னவனை இனிச் சூலைநோயைத் தந்து ஆட்கொள்வோம்’என இறைவன் அருள்செய்து,அவ்வண்ணமே தருமசேனர் வயிற்றில் சூலைநோயைத் தந்தார்.


சூலைநோயால் மிகுந்த துன்பத்திற்கு ஆளான மருள்நீங்கியாரின் நோயைத் தணிக்க சமணர்கள் எவ்வளவோ முயன்றனர். நோய் அதிகரித்ததே ஒழிய குறையவில்லை.இனி இந்நோயை நம்மால் போக்கமுடியாது எனச் சமணர்கள் கைவிட்டனர்.இந்நிலையில் மருள்நீங்கியார்,தம்முடைய தமக்கையாரின் நினைவுவர அவரிடம் சென்று,தம்முடைய துன்பநிலையைக் கூறும்படி தமது பணியாளிடம் கூற, அவர் சென்று திலகவதியாரிடம் கூறுகின்றார்.

உடனே திலகவதியார் ‘நன்றறியார் அமண்பாழி நண்ணுகிலேன் என்ற மறுமொழியை நீ சென்று அவனுக்கு உரைப்பாயாக’ என்று கூற அவரும் அங்கிருந்து மீண்டு தருமசேனரை அடைந்து தமக்கையார் கூறியதனைத் தெரிவித்தார்.

இச்செய்தியினைக் கேட்ட தருமசேனர்,தம்முடைய தமக்கையாரைச் சென்றடைந்து, திருவடிகளை வீழ்ந்து வணங்கி,தனது சூலைநோயினை நீக்கும்படி மன்றாடினார்.தம்பியின் துன்பநிலையைப் போக்க திருவதிகை வீரட்டான திருக்கோயிலுக்கு அழைத்துச்சென்று ,கயிலைப்பெருமானை மனதுள் நினைத்து,அவனது திருவருள் வண்ணமாகிய திருநீரினைத் திருவைந்தெழித்து ஓதி கொடுத்தருளினார்.நீரணிந்த மருள் நீங்கியார் சூலைநோயைப் போக்கும் பொருட்டு,திருவதிகை பெருமானை உள்ளத்துள் நினைத்து,


கூற்றாயின வாறு விலக்க கிலீர்
கொடுமை பல செய்தன நான்றியேன்
ஏற்றாயடிக்கே யிரவும் பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றினகம் படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் னடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத் துறையம் மானே
எனத் தொடங்கும் திருப்படிகத்தைப் பாடி போற்றினார்.இத்திருப்பதிகத்தைப் பாடிமுடித்தவுடன் அவருடைய துன்பநோய் ஞாயிற்றைக் கண்ட பனிபோல விலகியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்