வாழ்வியல் அறம்
வாழ்க்கையின் நெறியை ,வாழும் முறையை நல்லந்துவனார் கலித்தொகைப் பாடலில் மிக அழகாக வடித்துக்கொடுத்துள்ளார்.வாழ்க்கை என்பது எப்படியெல்லாம் வாழ்வது என்பதில்லை,இப்படிதான் வாழவேண்டும் என்பதை வரையறுத்துக் கொண்டு வாழ்வது.அவ் வாழ்க்கை கலையினை அறிந்து நாம் வாழ்ந்தால் மண்ணுலகம் பொன்னுலகமாக மாறும்.அவ்வாறு வாழும் கலையைக் கொண்டு இலங்குவது தான் சங்க இல்க்கியப் பாடல்கள்.இதோ .......படியுங்கள்
இல்வாழ்க்கை வாழுகிறேன் என்பதன் பயனே பொருள் அற்ற வறியவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியினைச் செய்தல்.
ஒன்றைப் பாதுகாத்தல் என்பது கூடியவரைப் பிரியாமல் இருப்பது தான்.
மக்களுக்குரிய உயர்ந்த பண்பு என்பது உலக ஒழுக்கம் அறிந்து நடத்தலே.
அன்பு என்பது தன் சுற்றத்தாருக்கு தீங்கிழைக்காமல் இருத்தல்.
அறிவு என்பது என்ன தெரியுமா? அறியாமல் ஒருவர் நம்மிடம் தவறான சொற்ளைப் பயன்படுத்தி பேயுகிறார் என்றால் அதனைப் பொறுத்து போதல் தான்.
உறவு என்பது நெருக்கமுடையவர்கள் கூடியவர்களின் சொற்களை மறுக்காது இருத்தல்.
நிறை என்பது பிறரைப் பற்றி சொல்லக்கூடாத செய்திகளைப் பிறர் அறியாமல் காத்தல்.
முறை என்பது நமக்கு வேண்டியவர் தவறு இழைத்தால் இவர் நம்மவர் தானே என்று கண்ணோட்டம் காட்டாமல்,அவர் செய்த குற்றத்திற்கு ஏற்ப தண்டனை வழங்குதல்.
பொறை என்பது பிறர் செய்த பிழைகளைப் பொறுத்துச் கொள்ளுதல்.
இதோ அந்த கலித்தொகைப் பாடல்.
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தார்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பு எனப்படுவது பாடறிந் தொழுகுதல்;
அன்பு என்பது தன் கிளை செறாமை
அறிவு எனப்படுவது பேதையர் சொல் நோன்றல்
செறிவு எனப்படுவது கூறியது மறாமை
நிறை எனப்படுவது மறைபிறர் அறியாமை
முறை என்ப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்;
பொறை என்ப்படுவது போற்றாரைப் பொறுத்தல்.

கருத்துகள்
நன்றாகவுள்ளது..
கலித்தொகை என்பது கவித்தொகை என்று உள்ளது...