இணைமொழிகள்

சகர வரிசையில் தொடங்கும் இணைமொழிக்ள.

சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்.
சண்டு சருகு அரிக்கின்றாள்.
சண்டை சச்சரவு இருக்க கூடாது.
சண்டை சல்லியத்திற்குப் போகமாட்டான்.
சந்தி சதுக்கங்களில் சிலை நிறுத்தப்பெறும்.
சந்துபொந்தெல்லாம் தேடிப்பார்த்தான்.
சப்புஞ் சவரும் வாங்கிக்க கொண்டு வந்திருக்கான்.
சவண்டு துவண்டுகிடக்கிறத்.
சளித்துப் புளித்துப் போயிற்று.
சழிவு நெளிவு இல்லாத பெட்டியாய் வாங்கு.


சாக்குப் போக்குச் சொல்லக் கூடாது.
சாகப்பிழைக்க கிடந்தான்.
சாடைமாடையாகப் பேசுகிறான்.
சுவர் சாய்ந்து சரிந்து கிடக்கிறது.
வேலையை சாயலாய் மாயலாய் செய்துவருகிறான்.
அவனைச் சாவிழவு தள்ளவைத்திருக்கிறது.

சிக்கி முக்கியாய்க் கிடக்கிறது.
உடம்பெல்லாம் சிக்குஞ் சிரங்குமாய் இருக்கிறது.
சிட்டிசிரட்டை யெல்லாம் தண்ணீர் ஊற்றிவைத்திருக்கிறது.
சிந்திச் சிதறி சீரழிக்கின்றான்.
சிந்தமணி சிதறுமணியெல்லாம் பொறுக்கிக் கொண்டாள்.
சிறுதனம் சீராட்டு அவளுக்கு நிரம்பக் கிடைத்தது.
சின்னது சிறியதிற்கு ஒன்றுங் காட்டக்கூடாது.
சின்னாபின்னமாக்கச் சிதறிகிடக்கிறது.

சீட்டுநாட்டுப் போட்டு வைத்திருக்க வேண்டும்.
சீத்துப் பூத்து என்று இரைக்கின்றது.
சீராட்டிப்பாராட்டி
வளர்த்தார்கள்.
சீரியரும் பூரியரும் வந்தனர்.
சீருஞ் சிறப்புமாக இருந்தான்.
சீருஞ்செட்டுமாய் வாழவேண்டும்.
சீவிசிக்கெடுத்துச் சடை பின்னினாள்.
சீவிசிங்காரித்து வந்தாள்.
சீறிசினந்து விழுந்தான்.

சுள்ளி சுப்பல் பொறுக்கி எரிக்கின்றாள்.
படுக்கையைச் சுற்றிச் சுருட்டிக் கொண்டு போனான்.
சுற்றுமுற்றும் பார்த்துப் பேசு.

செடிகொடி போட்டால் காய்க்கும்.
செடி செத்தையெல்லாம் அகற்ற வேண்டும்.

strong>சொத்து சுகம் அவனுக்கு ஒன்றுமில்லை.
சொள்ளை செட்டை ஏதாவது சொல்லுவான்.

கருத்துகள்

குப்பன்.யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
அருமைங்க, நன்றிகள் பல,

தினமும் நான் புதிதாக நிறைய கற்கிறேன் உங்கள் பதிவில் இருந்து.

குப்பன்_யாஹூ
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க குப்பன் உங்கள் வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி.
பழமைபேசி இவ்வாறு கூறியுள்ளார்…
//சீறுஞ் சிறப்புமாக இருந்தான்//

சீர்² 1. Prosperity, wealth; செல்வம்.

நிறைய கற்கிறேன்...நன்றி!
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க பழமை எழுத்து மாறி விட்டது.......சுட்டியமைக்கு நன்றி.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்