பதிப்புத் துறையில் கால் பதித்து வெற்றி கண்டோர் பலர். ஆனால் தமிழ் உணர்வோடு ,மொழிப் பற்றோடு பதிப்புத்துறையில் ஈடுபட்டவர்கள் மிகக் குறைவே. தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ.இளவழகன் அவர்கள் தமது மொழி உணர்வாலும்,இன உணர்வாலும் ஈக்கப்பட்டு,தமிழுக்குத் தொண்டு செய்யும் நோக்குடன் பல அரிய பணிகளைச் செய்து வருகிறார்கள். நம் தமிழ் மண்ணின் பெருமையை,மொழியின் திண்மையா,இலக்கியச் செறிவினை, வெளிகொணர்ந்து ஆவணப்படுத்தும் எண்ணத்தில் தமிழில் எழுந்த நூல்களையெல்லாம் திரட்டி தொகுப்பு நூலாக்கி தமிழ்ச் சமுதாயத்திற்கு வழங்கிவருகிறார். தஞ்சை மண் ஊருக்குப் படியளந்து,உறவுக்குக் கை கொடுத்த மண் மட்டுமல்ல.தமிழ் வளர்த்த மண்.எத்தனையோ தமிழறிஞர்களை உருவாக்கிய மண்,பல கலைகளுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கிய மண்.இப்பெருமை மிகு தஞ்சை பகுதியில் தோன்றியவர் கோ.இளவழகனார்.03.07.1948 ஆம் ஆண்டு உரத்தநாடு வட்டம்,உறந்தையராயன் குடிக்காடு என்னும் ஊரில் திருமிகு அ.கோவிந்தசாமி,திருமதி அமிர்தம் அம்மையார் இணையருக்கு மகவாய் தோன்றினார். 1965 இல் பள்ளி மாணவராக இருந்த காலத்தில் இருந்தே மொழி மீது மிகுந்த பற்றுக் கொண்டு ,மொழிப்போராட்டங்களில் தீவிரமாகப் பங்கே...