அரசர் முத்தைய வேள் ஆய்வரங்க நிறைவு விழா


அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறை மாணவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் அரசர் முத்தையா வேள் ஆய்வரங்கம் தொடங்கப் பெறும்.இவ் ஆய்வரங்கம் மாணவர்கள் தங்களது பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் களமாத் திகழ்கின்றது.இந்த ஆண்டும் இவ்வாய்வரங்கம் தொடங்கப்பெற்று மாணவர்கள் தங்களது பன்முக ஆற்றலை வெளிப்படுத்தினர்.அதன் நிறைவு விழா 30-3-2009 அன்று நடைபெற்றது.


நிறைவுவிழாவில் மாண்பமை துணைவேந்தர்,பதிவாளர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் . துறைத்தலைவர்&மொழிப்புல முதன்மையர் பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக தமிழகம் அறிந்த பேரறிஞர் பழ.கருப்பையா கலந்துகொண்டு காலமெனும் நதியினிலே கவிதை ஓடம் என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.சங்க இலக்கியம் முதல் இன்று வரை செய்யுள் என்னும் கவிதைகள் வடிவம் பாடுபொருளிலும்,வடிவத்திலும் எவ்வாறு மாறுதல் அடைந்து வந்துள்ளன என்பதை எடுத்துரைத்தார்.திரைப்பட பாடலைப் பற்றி குறிப்பிடும் பொழுது பழைய பாடல்கள் மெதுவா தொடலாமா மேனியில் கை படலாமா என பெண்ணிடம் ஆண் அனுமதி வாங்கினான்.ஆனால் இப்பொழுது பெண் கட்டிப் புடி கட்டிப்புடிடா கண்டப்படி கட்டிப்புடியா,அழகிய அசுரா அழகிய அசுரா அத்துமீற ஆசையில்லையா பெண் கேட்பதாகக் கூறினார்.


இந்த பாடல்கள் அனைத்தும் யாரால் இயற்றப்பட்டது? ஆண்களால் அல்லவா எப்பொழும் ஆண்களால் அல்லவா பெண்ணுலகம் கட்டமைக்கப்படுவதாக இருக்கிறது.இதை ஏனோ கூற மறந்தார்.


பேராசிரியர் கொளஞ்சி ஒருங்கிணைப்பாளராக இருந்து நிகழ்வினை சிறப்பாக நடத்திச் சென்றார்கள். அரசர் முத்தையா வேள் ஆய்வரங்கில் கலந்து கொண்டு வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பெற்றன.இறுதியாக ஒருங்கிணைப்பாளர் அனைவருக்கும் நன்றி நவின்றார்.விழா இனிதே நிறைவுற்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்