கடலூரில் இணையப் பயிற்சி
கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப் பயிற்சி 17.03.2009 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிமுதல் 6.30 மணி வரை நடைப்பெற்றது.இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்டம் சார்ந்த கிளை நூலகர்கள்,ஊர்ப்புற நூலகர்கள்,இணைய ஆர்வலர்கள் கொண்டனர்.பேராசிரியர் மு.இளங்கோவன் அவர்கள் இணையம்,மின் நூலகம்,மின் இதழ்கள்,தமிழ் இணைய வளர்ச்சி குறித்த பயிற்சி வழங்கினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நூலக அலுவலர் திரு சி.அசோகன் அவர்களும் மாவட்ட மைய நூலகர் திரு.சு.பச்சையப்பன் அவர்களும் சிறப்பாகச் செய்திருந்தனர்.
கருத்துகள்