கணினி மற்றும் இணையத்தமிழ் கருத்தரங்கம்

பெரம்பலூர் பாரதிதாசன் கல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் 20,21-3-2009 ஆகிய இரண்டு நாள்கள் கணினி தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.இரண்டாம் நாள் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு வலைப்பூ உருவாக்கம் குறித்து ,பேராசிரியர் கணேசன் அவர்களின் தலைமையில் கட்டுரை வழங்கினேன்.இந்நிகழ்வால் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன்,பேராசிரியர் ப.டேவிட் பிரபாகர்,பேராசிரியர் நா.ஜானகிராமன் போன்றோரைக் கண்டு , கலந்து பேச வாய்ப்பு ஏற்பட்டது.
மேலும் நண்பர் முனைவர் இரா.குணசீலன் அவர்களையும் சந்தித்து க்கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் அமைந்தது.

கருத்தரங்கில் கலந்து கொண்டோர்.

கருத்துகள்

முனைவர் மு.இளங்கோவன் இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம்
தாங்கள் பெரம்பலூரில் கட்டுரை படித்தமை அறிந்து மகிழ்கிறேன்.
வாழ்த்துகள்.
மு.இளங்கோவன்
புதுச்சேரி
Thamizh இவ்வாறு கூறியுள்ளார்…
மக்களிடையே தமிழ்க்கணினி/ இணையம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணி மிகவும் தேவையான ஒன்று. கணினி அறிவினை ஊரக மக்கள் பெற நாம் இன்னும் பாடுபட வேண்டியுள்ளது. தங்களின் பணிகளுக்கு வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,
மா.தமிழ்ப்பரிதி
http://www.thamizhagam.net/

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......