இடுகைகள்

முல்லைப் பாட்டு

படம்
அண்மையில் அண்ணாமைலப் பல்கலைக்கழக மொழியியல் துறையும் இந்தியமொழிகளின் நடுவன் நிறுவனமும் இணைந்து நடத்திய குழந்தைகளுக்கான கதை எழுதுதல் பணிப்பட்டறைக்கு ஐந்திணைப் பதிப்பக உரிமையாளர் குழ. கதிரேசன் வந்திருந்தார்.  பத்துப்பாட்டிற்கு எளிமையான கவிதை வடிவில் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் எண்ணும் நோக்கத்தில் எழுதியிருப்பதாக  பத்துப்பாட்டு நூலினைக் கொடுத்தார். இந்நூல் பத்துப் பாட்டு குறித்த அடிப்படை புரிதலை உருவாக்கும். . அந்நூலில் இருந்து முல்லைப்பாட்டு. பாடிய புலவர் - காவிரிபூம்பட்டிணத்துப் பொருள்வாணிகனார் மகனார் நப்பூதனார். 103 அடியினைக் கொண்டது. பத்துப்பாட்டிலேயே மிகக் குறைந்த அடியினைக் கொண்ட பாடல்.  இதனை நெஞ்சாற்றுப் படை என்றும் கூறுவார்கள். பத்துப் பாட்டில் சிறியது முல்லை!- இதில் காதல் இன்ப நினைவுகள் கொள்ளை! நூற்று மூன்றே அடிகள் உடையது! - இது நப்பூத னாரின் நயமிகு படைப்பு! அகவல் பாவால் ஆகி வந்தது! - இது அகத்திணை ஒழுக்கம் பேணிக் காப்பது! குறித்த நேரம் தலைவன் வருவான் - எனத் தலைவனை நினைத்து ஆற்றி இருப்பது!

இனக்குழு வாழ்வியலும் வரலாற்று எழுதுகையும்

படம்
உலக வாழ் இனக்குழு சமூகங்கள் தங்களுக்கெனத் தனித்த வாழ்வியல் முறைகளையும், பண்பாட்டுக்கூறுகளையும் கொண்டிருக்கின்றன. இன்று உலகமயமாக்கலில் தங்களுக்கான அடையாளங்களை இழக்க தொடங்கியிருக்கும் சூழலில் வாழ்ந்த தொன்ம கதைகளை வரலாறுகளை, பண்பாட்டு அசைவுகளை, கொண்டாட்ட முறைகளைப் பதிவு செய்யும் வேணாவளுடன் பல்வேறு ஆவணங்கள், கள ஆய்வுகள் ஆகியவற்றின்  அடிப்படையில்  பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும் என்னும் நூலை இரா. சுந்தரவந்தியத்தேவன் ஆவணப்படுத்தியுள்ளார். இதற்கு இவர் எடுத்துக்கொண்ட முயற்சி இவருடைய உடல் குறையையும் எண்ணாமல் ஒவ்வொரிடமாக கள ஆய்வு மேற்கொண்டு நடுநிலையோடு வழங்கியிருப்பது சிறப்பு. இவரோடு உரையாடிய பொழுது இவர் திரட்டிய ஆவணங்கள் சென்ற இடங்கள் குறித்து கேட்டு வியந்து போனேன்.  சு.வெங்கடேசன் , அனந்தபாண்டியன் மூவரும் சென்ற இடங்கள் தேடிய ஆவணங்கள், பரிமாறி கொண்ட கருத்தாடல்கள் அனைத்தையும் பகிர்ந்துகொண்டார்.  தமிழ்ச்சமூகம் கற்றபித்து இருக்க கூடிய இவ் இனக்குழு குறித்த பார்வையை மாற்றி அமைக்கிறது இந்நூல் .

ஆனந்தவிகடன் - வலையோசை அறிமுகம்

படம்
இந்த வாரம் என் விகடன் வலையோசை பகுதியில் இவ் வலைப்பூவை அறிமுகப்படுத்தியமைக்கு ஆனந்தவிகடன் இதழுக்கு நன்றி பல. சென்ற மாதம் அவள் விகன் வலைப்பூவரசி என்னும் விருதினைக் கொடுத்து சிறப்பித்தது. விகடன் இணைய குட்பிளாக்கில் முன்பு இவ்வலைப்பூவிலிருந்து சில பதிவுகளை வெளியிட்டு குட் பிளாக் என அறிமுகப்படுத்தியிருந்தது. விகடன் குழுமத்திற்கு நன்றி. http://www.vikatan.com/anandavikatan/En-Vikatan---Pudhucherry-Edition/22614-valaiyosai.html

மு. அருணாசலம் - தமிழ் இசை இலக்கிய, இலக்கண வரலாற்று நூல்கள்

படம்
இருபதாம் நூற்றாண்டு தமிழியல் ஆய்வுகளை முன்னெடுத்தவர்களுள்  மு. அருணாசலம்  முக்கிய இடத்தை வகிக்கிறார். இவர் சமகால நிலையோடு பழந்தமிழ் மரபு சார் ஆய்வுகளை நிகழ்த்தியவர். இவருடைய தமிழ் இலக்கிய வரலாறு நூற்றாண்டு வாரியாக வெளிவந்து தமிழ்ச் சூழலில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது அறிந்ததே. வெறுங்கதைகளைத் தமிழகத்தில் குவித்துப் பயனில்லை, மக்கள் வாழ்க்கை முன்னேற வேண்டுமானால் எழுதும் திறமை வாய்ந்தவர்கள் முயன்று எழுதும்போது, தமிழர் அறிவுப் பெருக்கத்துக்கான நால்களைத் தான் எழுதவேண்டுமேயன்றி, வீண் பொழுதுப்போக்குக்கான புத்தகங்களை எழுதக்கூடாது.பொழுது போக்கிற்காக எழுதுவது தமிழுக்கும் சமூகத்தார்க்கும் பெருந்துரோகம் என்று நான் அக்காலத்தில் நான் தீவிர எண்ணம் கொண்டிருந்தேன் இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை என்று புத்தகமும் வித்தகமும் நூலில் தன் எண்ணத்தை வெளிப்படுத்தும் மு. அருணாசலம் அவர்கள் தமது ஒவ்வொரு எழுத்தும்  ஆய்வை நோக்கி உண்மையை அறிவதாக அமைத்துகொண்டு தமிழுலகிற்கு பல ஆய்வு நூல்களை வழங்கியுள்ளார்.  அவர் காலத்து வெளிவராமல் கையெழுத்துப் பிரதியாக இருந்த நூல்களைப் பேரா. உல பாலசுப்பிர...
படம்
அண்மையில்  பேஸ்புக்கில் வந்த புகைபடம்.  எவ்வளவு  நேர்த்தியான செயல்பாடு. கலைஞனின் கலை உள்ளத்தின் வெளிப்பாடு. அழகு.

தொல்காப்பியம்

படம்
1985 இல் திருப்பனந்தாள் அறக்கட்டளை வெளியீடாக அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்த டாக்டர் கு.சுந்தரமூர்த்தி அவர்கள் பேராசிரியர் உரையுடன் குறிப்புரையும்  சேர்த்து பதிப்பித்த தொல்காப்பியம் பொருளதிகாரம் பின் நான்கு இயல்களுக்கான(மெய்ப்பாட்டியல், உவமவியல்,செய்யுளியல், மரபியல்)  நூல் இப்பொழுது மறுபதிப்பாக கிடைக்கின்றது. நூலின் விலை 270 பாதிவிலையாக 135 க்கு கிடைக்கின்றது. வேண்டுவோர் அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிப்புத்துறையில் வாங்கி கொள்ளலாம்.

கூடுகள் சிதைந்த போது

படம்
புலம்பெயர் படைப்புகளில் அகிலின் கூடுகள் சிதைந்த போது என்னும் சிறுகதை கவனப்படுத்தப்படவேண்டிய சிறுகதையாக அமைகின்றது. வாழ்வின் ஊடாக தான் பெற்ற அனுபவங்ளைக் கதாபாத்திரங்களாக நூல் முழுதும் உலவ விட்டிருக்காறார் அகில்.இந்நூல் குறித்து பேராசிரியர் கா.சிவத்தம்பி , நவீன காலத் தமிழ் இலக்கியத்திலே சிறுகதை, பொலிவுடன் வளர்ந்துள்ள ஓர் இலக்கிய வகையாகும். புதுமைப்பித்தன் பரம்பரை என்றுகூடச் சொல்லலாம். அகிலிற்கு அந்த நீண்ட செழிப்பான தமிழ்ச் சிறுகதை பாரம்பரியத்தில் நிலையான இடம் வேண்டுமானால் தொடர்ந்து இத்தொகுதியிலே உள்ளன போன்ற சிறுகதைகளை எழுதுதல் வேண்டும்.                      கூறுவதற்கேற்ப அகிலிடமிருந்து இது போன்ற சிறுகதை தொகுதிகள் வரவேண்டுமென்ற எதிர்பார்ப்பை இந்நூல் உருவாக்கியுள்ளது.
படம்
.. தமிழ் சூழலில் சிறுகதை குறித்தான ஆய்வுகள் ,அவற்றை ஆவணமாக்கும் முயற்சிகள் குறைந்தளவே நிகழ்ந்துள்ளன. 1980 க்குப் பிறகு சிறுகதை பற்றிய ஆய்வுகள் பெரும்பாண்மை இல்லை என்றே கூறலாம் 1980 களில் இருந்து2010 வரைக்கும் வெளிந்த சிறுகதைகள். அனைத்தையும் தொகுப்பது என்பது எளிதன்று ஆனாலும் ஒரு வரையறைக்குள் நின்று தொகுத்துக்கொண்டு ,அவை பற்றிய புரிதலுக்கான வழி வகுப்பதாக தமிழில் சிறுகதை உருவாக்கத்தின் போக்குகள் - பரிமாணங்கள், பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள், இஸ்லாமிய எழுத்தாளர்களின் சிறுகதைகள், தலித் எழுத்தாளர்களின் சிறுகதைகள், சிறுகதை ஆளுமைகள் பற்றிய அறிமுகத்தோடு மாற்றுவெளியின் பத்தாவது ஆய்விதழ் சிறுகதை சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. சென்னை முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களின் சிறுகதை திரட்டல்/பட்டியலுக்கான  உழைப்பு  இவ்விதழுக்கு பெரிதும் உதவியுள்ளது.

சங்க காலத்தில் வழங்கிய சமஸ்கிருதச் சொற்கள்

சத்தாரணை மருந்து கொழம்பு

சத்தாரணை என்ற  ஒருவகைச் செடியுள்ளது. மருத்துவகுணம் நிறைந்த செடி. எங்கூர் பக்கம் அதனைப் பறித்து கொழம்பு வைப்பார்கள். சத்தாரணை இலை பூவரசு இலை போல இருக்கும் ஆனால் இலையின் ஓரத்தில் வளைவாக காணப்படும்.(ஊருக்குச் செல்லும் பொழுது அதனைப் படம் எடுத்துப் போடுகிறேன்). இணையத்தில் தேடினேன் அப்படி ஒரு பெயரே இல்லை. அது வேறு பெயரில் வழங்கப்படுகிறதா என்றும் தெரியவில்லை.அது ஒரு கொடி வகை. இலையைப் பறித்து நன்றாக அலசிவிட்டு நல்லெண்ணை வதக்கி எடுத்துக்கொண்டு அதனை அம்மியில் வைத்து அரைக்க வேண்டும் அரைக்கும் பொழுது மிளகு, சீரகம்,சோம்பு, மஞ்சள் வைத்து வழிக்கும்போது வெங்காயம் வைத்து வழித்து எடுத்துகொண்டு,  நல்லெண்ணை ஊற்றி அதில் வெந்தயம் போட்டு தாளித்து,சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி புளிகரைசலுடன் அரைத்து வைத்திருக்கும் விழுதையும் சேர்த்து மிளகாய் தூள், மல்லித்தூல் இரண்டையும் சேர்த்து , உப்பு போடவேண்டும். அதனுடன் முருங்கைக்காய் கத்தரிக்காய் சேர்த்து கொதிக்கவிட்டு வெந்த பிறகு இறக்கி, சாப்பிட்டால் அப்படித்தான் இருக்கும். இதில் கருவாடும் வேண்டுமென்றால் சேர்ப்பார்கள்.

கதைகதையாய் காரணமாம்...ஒக்கூர்(ஒக்காநாடு கீழையூர்)

ஊர் வரலாறு நாட்டுக்குள்ளேயும்நாலு நாடு நலம் பெறும் ஒக்கநாடு பச்சிலை பறிக்கா நாடு பைங்கிளி நோகாத நாடு கள்ளர் மரபு தவறாத நாடு கடல் தண்ணீயை வாட்டும் நாடு சொல்லுக்கும் பெரிய நாடு நிகழத்தால் பதில் சொல்லும் சுயமரியாதை உடைய நாடு   ஊர்ப்பெயர்கள்   பல்வேறு கதையாடல்களுக்கு நிலைகளனாக விளங்குகின்றன. ஒக்கூரும் பல தொன்மரபுகளையும் கதையாடல்களையும் கொண்டுள்ளதை மேற்கண்ட பாடல் மூலம் அறியலாம். இப்பாடலில் நாட்டுக்குள்ளேயும் நாலு நாடு என்று குறிப்பிடுவது காசவளநாடு, கோணூர்நாடு ,ஒக்கநாடு, பைங்காநாடு   என்னும் ஊர்களாகும். 10,11 ஆம் நூற்றாண்டுகளில் இது போன்ற அமைப்பு காணப்பட்டுள்ளது. பின்னால் ஒவ்வொரு நாட்டுக்குள் இருந்த ஊர்களும் பிரிந்து உள்ளன. ஒக்காடு என்னும் ஊர் பின்னால் மேலையூர் கீழையூர் என்றும் பிரித்துள்ளது.   இதில் நிகழத்தால் பதில் சொல்லும் நாடு என்பது பிற ஊர்களில் ஏதேனும் குற்றங்கள் நடந்தால் அது தொடர்பாக பஞ்சாயத்துக் கூட்டச் சொல்லி அனுப்படும் நாட்டோலையைக் குறிக்கும். இந்த ஊரில் நடக்கக் கூடிய வழக்குகளுக்கு மட்டுமல்லாமல் அவ்வூரைச் சுற்றி இருக்க கூடிய மற்ற ஊர்க...

குமட்டிக்கீரை

கார்த்திகை மார்கழி மாதங்களில் கொல்லையில்,வயல்களில் கடலை போடும் பொழுது அதனூடாக முளைக்கும் கீரை. இந்த கீரை எங்களூரில் அந்த காலங்களில்  மட்டும் தான் கிடைக்கும்.கடலை  களை வெட்டும்பொழுது அதுனூடாக இருக்கும்  இளங்கீரையாக இருக்கும் குமட்டிகீரையை மாலை நேரங்களில் பறித்துக்கொண்டு வந்து கொடுப்பார்கள்.வேரை மட்டும் கிள்ளிவிட்டு சிறது தண்ணீர் தெளித்து அடுப்பில் வைத்தால் ஒரே ஆவியில் வெந்துவிடும். எடுத்து கடைந்து கடுகு, காய்ந்த மிளகாய்,சின்னவெக்காயம், போட்டு தாளித்து சாப்பிட்டால் என்ன ஒரு சுவை. உண்மையாகவே இந்த கீரையின் சுவையைப் போல் வேறு எந்த கீரையின் சுவையையும் நான் அறிந்ததில்லை. அது பெரிதாகுமா என்பது எனக்குத் தெரியவில்லை.எங்களூரில் பெரிதாகி பார்த்தில்லை. இளங்கீரையாக கிடைக்கும் நாள்களில் பயன்படுத்துவதோடு சரி. இளம் குமட்டிக்கீரை அதை கடைந்து சாப்பிட்டால் அப்பப்பா... சொல்லி மாளாது சுவை...

வடமொழி அறமரபும் தமிழ் அறமரபும்

அறம் என்னும் மேற்கட்டுமானச் சிந்தனைப் போக்கு   வாழ்வின் ஊடாக நிகழும் அகம் புறம் சார் ஒழுங்கு / ஒழுங்கின்மைகான வரைவை உற்பத்தி செய்து, அது தொடர்பான கதையாடல்களையும் தொன்மங்களையும் விளைவிக்கிறது. அது சார்ந்து மனிதன் தன் வாழ்வில் போக்குகளைத் தீர்மானித்துக் கொள்ள முனைகின்றான். உலகம் முழுதும் இது போன்ற போக்குகள் காணப்படுகின்றன. வடமொழியில் வைதிகம் / அவைதிகம் சாரந்த அறங்கள் உருவாகியுள்ளன. வேதம் தொடர்பான அறங்கள் வைதிக அறங்கள் என்றும் அதற்கு மறுப்பாக எழுந்த சமண, பௌத்த அறங்கள் அவைதிக அறங்கள் என்றும் கூறப்படுகின்றன. தமிழில் சங்க இலக்கியங்களில் வாழ்வியலோடு இணைத்து பேசப்பட்ட அறம் சார் கோட்பாடுகள், பின்னாள் வடமொழி அறங்களை உட்செறித்து ஒர் இலக்கிய வகையாக மாறுகின்றது. வட மொழியில் அறம்சார் அறிவு செயல்பாடுகள் வேதங்களில் காணப்பட்டாலும் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு வரை பழமொழிகளின் வடிவிலும்(சூத்திம்) அதன் பிறகு எளிய வடிவிலான செய்யுள் நடையிலும் (சுலோகம்) கி.பி 9ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தன. இதே நேரத்தில் உரைகளும்(பாஷ்யம்) அதன் பிறகு அது சார்ந்த   தொகுக்கப்பட்ட   ஆராய்ச்சி நூல்களும்(நிபந்...