மு. அருணாசலம் - தமிழ் இசை இலக்கிய, இலக்கண வரலாற்று நூல்கள்







இருபதாம் நூற்றாண்டு தமிழியல் ஆய்வுகளை முன்னெடுத்தவர்களுள்  மு. அருணாசலம்  முக்கிய இடத்தை வகிக்கிறார். இவர் சமகால நிலையோடு பழந்தமிழ் மரபு சார் ஆய்வுகளை நிகழ்த்தியவர். இவருடைய தமிழ் இலக்கிய வரலாறு நூற்றாண்டு வாரியாக வெளிவந்து தமிழ்ச் சூழலில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது அறிந்ததே.

வெறுங்கதைகளைத் தமிழகத்தில் குவித்துப் பயனில்லை, மக்கள் வாழ்க்கை முன்னேற வேண்டுமானால் எழுதும் திறமை வாய்ந்தவர்கள் முயன்று எழுதும்போது, தமிழர் அறிவுப் பெருக்கத்துக்கான நால்களைத் தான் எழுதவேண்டுமேயன்றி, வீண் பொழுதுப்போக்குக்கான புத்தகங்களை எழுதக்கூடாது.பொழுது போக்கிற்காக எழுதுவது தமிழுக்கும் சமூகத்தார்க்கும் பெருந்துரோகம் என்று நான் அக்காலத்தில் நான் தீவிர எண்ணம் கொண்டிருந்தேன் இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை என்று புத்தகமும் வித்தகமும் நூலில் தன் எண்ணத்தை வெளிப்படுத்தும் மு. அருணாசலம் அவர்கள் தமது ஒவ்வொரு எழுத்தும்  ஆய்வை நோக்கி உண்மையை அறிவதாக அமைத்துகொண்டு தமிழுலகிற்கு பல ஆய்வு நூல்களை வழங்கியுள்ளார்.

 அவர் காலத்து வெளிவராமல் கையெழுத்துப் பிரதியாக இருந்த நூல்களைப் பேரா. உல பாலசுப்பிரமணியன்  அவர்கள் தேடி தொகுத்து தமிழுலக்கு வழங்கியுள்ளார்.

தமிழி இசை இலக்கிய வரலாறு  தமிழ் இசை மரபினை ஆதி இசை தமிழ் இசையாக இருந்துள்ளது என்பதை தக்க விளக்கங்களுடன் முன்வைக்கின்றது. அடிப்டையாக தமிழ் இசை இதன் தொன்மை, இடைகாலத்தில் மாற்றபட்ட நிலை குறித்த புரிதலை இந்நூல் உருவாக்குகிறது.



கிடைக்குமிடம்

கடவு பதிப்பகம்
1/ 239 எ, சூரியகாந்தி தெரு, வேல் நகர்
திருப்பாலை(அஞ்சல்)
மதுரை - 625 014
பேச -9443123644
 விலை மூன்று புத்தகங்களும் சேர்த்து - 1700



கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லதொரு தகவல்...

பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா...
முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
பயனுள்ள செய்தி முனைவரே
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி தனபாலன் சார்
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி குணா...
இந்த புத்தம் வேண்டுமென்றால் வாங்கிகொள்ளுங்கள் பயனுடைய புத்தகம்
நம்மிடம் அவசியம் இருக்க வேண்டிய நூல்
நாய் நக்ஸ் இவ்வாறு கூறியுள்ளார்…
விருப்பம் இருப்பின் சந்திக்கலாம்....
மெயில் பண்ணவும்....
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல தகவல்களுக்கு நன்றீங்க...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்