இனக்குழு வாழ்வியலும் வரலாற்று எழுதுகையும்





உலக வாழ் இனக்குழு சமூகங்கள் தங்களுக்கெனத் தனித்த வாழ்வியல் முறைகளையும், பண்பாட்டுக்கூறுகளையும் கொண்டிருக்கின்றன. இன்று உலகமயமாக்கலில் தங்களுக்கான அடையாளங்களை இழக்க தொடங்கியிருக்கும் சூழலில் வாழ்ந்த தொன்ம கதைகளை வரலாறுகளை, பண்பாட்டு அசைவுகளை, கொண்டாட்ட முறைகளைப் பதிவு செய்யும் வேணாவளுடன் பல்வேறு ஆவணங்கள், கள ஆய்வுகள் ஆகியவற்றின்  அடிப்படையில்  பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும் என்னும் நூலை இரா. சுந்தரவந்தியத்தேவன் ஆவணப்படுத்தியுள்ளார். இதற்கு இவர் எடுத்துக்கொண்ட முயற்சி இவருடைய உடல் குறையையும் எண்ணாமல் ஒவ்வொரிடமாக கள ஆய்வு மேற்கொண்டு நடுநிலையோடு வழங்கியிருப்பது சிறப்பு. இவரோடு உரையாடிய பொழுது இவர் திரட்டிய ஆவணங்கள் சென்ற இடங்கள் குறித்து கேட்டு வியந்து போனேன்.  சு.வெங்கடேசன் , அனந்தபாண்டியன் மூவரும் சென்ற இடங்கள் தேடிய ஆவணங்கள், பரிமாறி கொண்ட கருத்தாடல்கள் அனைத்தையும் பகிர்ந்துகொண்டார்.  தமிழ்ச்சமூகம் கற்றபித்து இருக்க கூடிய இவ் இனக்குழு குறித்த பார்வையை மாற்றி அமைக்கிறது இந்நூல் .




முதல் பதிப்பில் ப. சரவணன் அவர்களால் எழுதப்பட்ட காடுகட்டி நாடாண்ட வரலாறும் குற்றப்பரம்பரையான கதையும் என்னும் முன்னுரை இரண்டாம் பதிப்பில் இடம்பெறவில்லை, இந்நூலின் ஆசிரியர் தமது கருத்துக்கு முரண்பட்டதாக இருப்பதால் எடுத்துவிட்டதாக கூறினார்.  அடிதளத்திலிருந்து அணுகுகின்ற  சிந்தனை, மானுடவியல் ஆய்வு போக்கு இந்நூலின் ஊடாக பயணித்திருப்பதை அறியமுடிகிறது. இந்நூல் இரண்டு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

கள்ளர்கள் வாழ்வும் பண்பாடும்
கள்ளர்கள் அரசியல் வரலாறு

கள்ளர்கள் வாழ்வும் வரலாறும் என்னும் பகுதியில் பண்டைய தமிழகமும் சாதி அமைப்பும், பண்டைய தமிழகத்தின் நாடுகள் அமைப்பும் கள்ளர் நாடுகளும், பிறன்மலை கள்ளர் பூர்வீகமும், புறமலைப் பகுதியில் குடியேறுதலும், இராஜதானி - எட்டுநாடு 24 உபகிராமங்கள் தெய்வங்கள் வழிபாடுகளும் சடங்குகளும், பழக்கவழக்கங்களும், திருமண உறவுமுறைகளும் பெயர் வைத்தலும், குடும்ப அமைப்பும், உறவு விளித்தலும், விவசாயமும் பிற தொழில்களும்.

 கள்ளர் அரசியல் என்னும் பகுதியில்

நாயக்கர் காலம், பாளையக்காரர் காலம், பிரிட்டிஷ் காலம், தற்காலம் என  பகுக்கப்ப்ட்டுள்ளது.

பொதுவாக அனைத்து சாதியினரும் அரச மரபு வழி வந்தவர்களாக நிறுவிகொள்ள முயலுகின்ற சூழலில் விவசாயிகளாய், காவல்காரர்களாய், வழிப்பறி கொள்ளைக்காரர்களாய்,  வாழ்ந்து, தங்களுக்கான தனித்த பண்பாடு அடையாளங்களைக் கொண்டிருக்கும் பிறமலை கள்ளர்களின் வாழ்க்கை முறையை முன் வைக்கின்றது இந்நூல்.

முக்குலத்தோர் என்ற அமைப்பு உருவாவதற்கான காரணம், அவர்கள் தொடர்பாக வாய்மொழியாக வழங்கி வரும் தொன்மகதைகளைத் தொகுத்து, கள்ளர் வாழ்கின்ற பகுதிகளை தொட்டுக்காட்டி பிறன்மலை கள்ளின் வாழ்வியல் முறைகளை விரித்துச் செல்கிறது. கள்ளர்கள் காஞ்சிபுரம் பகுதியில் இருந்து வந்து, இப்பகுதியில் குடியேறியவர்கள்  காஞ்சி என்னும் பெயரில் தெய்வத்திற்குப் பெயர் சூட்டி வழிபடுகின்ற நிலை எடுத்து காட்டியுள்ளார்.



                                                                                   

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல நூலை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி...

/// மேலும் வாசிக்க... /// இணைப்பு உள்ளதா...?
Studentsdrawings இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான பகிர்வு

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்