நீண்ட நாட்களாக படிக்கவேண்டும் எண்ணிக்கொண்டிருந்த நூல் ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய வால்காவிலிருந்து கங்கை வரை என்னும் நூல். அண்மையில் அந்நூலைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.கோவை சென்றிருந்த பொழுது தோழி மணிமேகலை நூலினைக்கொடுத்தார். இந்நூலினை கண.முத்தையா அவர்கள் தமிழில் மொழிப்பெயர்ப்புச் செய்துள்ளார்கள்.இதுவரை இந்நூல் 28 பதிப்புகளைக் கண்டுள்ளது. தமிழ்ப்புத்தகாலயம் வெளியீடாக வந்துகொண்டு இருக்கின்றது. நூலின் நுவல் பொருள் கதையாக இருந்தாலும்,கற்பனையாக இருந்தாலும்,ஒரு சமுதாயம் என்பது இப்படி தான் உருவாக்கியிருக்க வேண்டும் என்னும் கருதுகோளை வைத்துக்கொண்டு அதனை நோக்கியே நகர்த்திச் செல்லுகின்றார் ஆசிரியர். தனி மனிதன் மட்டுமல்லாமல் ஒரு சமுதாயத்தின் படிநிலைகளையும் ,சமுதாயத்தில் மெல்ல மெல்ல நிகழ்ந்ந மாற்றத்தினையும் சுட்டிக் காட்டுக்கொண்டே செல்லுகின்றார். இந்நூல் புனைவாக இருந்தாலும் தர்க்க ரீதியாக,வரலாற்று நோக்கிலும் சில உண்மைகள் முன்வைத்துள்ளது என்பதை மறுக்க முடியாது. 20 தலைப்பில் கதைகள் இடம் பெற்று இருக்கின்றன. ஆரம்பக் கதைகளான நிஷா,திவா,அமிர்தாஸ்வன்,புருகூதன் என்ற நான்கு கதைகளும் கி.மு.6000 இல...