இடுகைகள்

அண்ணா கருத்தரங்கம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையின் சார்பாக அண்ணா நூற்றாண்டினைக் கொண்டாடும் வகையில் இரண்டுநாள் கருத்தரங்கினை ஏற்பாடு செய் பட்டிரு ந்தது.அது தொடர்பான கருத்தரங்க முதல் நாள் நிகழ்வு இன்று நடைப்பெற்றது. துணை வேந்தர் ,மொழிப்புல முதன்மையர்,சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர் குத்து விளக்கு ஏற்ற விழா இனிதே தொடங்கியது.மொழிப்புல முதன்மையர் அனைவரையும் வரவேற்று, அண்ணாவைப் பற்றி சிறந்த அறிமுகவுரை நல்கினார்கள். தலைமையுரை மாண்பமை துணைவேந்தர் இராமநாதன் வழங்கினார்கள்.சிறப்பு விருந்தினர் பேராசிரியர் மா.நன்னன் தமிழுலகம் நன்கறிந்த தமிழறிஞர் அவர் தமது உரையின் தொடக்கத்தில் ‘வணக்கம்’ என்று நான் கூறமாட்டேன் வாழ்த்து எனக் கூ றினார்.அதற்கு அவர் அளித்த விளக்கம் சிந்திக்க வைப்பதாக இருந்தது.நம்முடைய சங்க இலக்கியங்களில் மன்னர்களை வாழ்த்துகின்றார்களே ஒழிய வணங்கவில்லை.வணங்குதல் என்பது பிற்காலத்தில் தோன்றியது எனக் கூறினார்.மேலும் அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். உணவு இடைவெளிக்குப் பிறகு பேராசிரியர் முனைவர் சி.மறைமலை அவர்கள் அண்ணாவைப் பற்றி சிறப்புச் சொற்பொழிவாற்றினார்கள்.ஆய...

ஏ.ஆர்.ரஹ்மான்

படம்
பலருக்கு கனவாக இருக்க தமது உழைப்பாலும் முயற்சியாலும் நனவாக்கி இரண்டு ஆஸ்கார் அவார்டுகளைப் பெற்று ,தமிழினத்துக்குப் பெருமைத் தேடி தந்த ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கருத்தரங்கம்

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நாளை அண்ணா நூற்றாண்டு தொடர்கான கருத்தரங்கு இரண்டு நாள்கள் நடைப்பெறவுள்ளது.
படம்

நான் கடவுள்

படம்
‘அகம் ப்ரமாஸ்மி ‘ இது தான் இப்படத்தின் மூலம்.இந்த அடியைப் பார்த்தவுடன் திருமூலரின் திருமந்திரப் பாடல் ஒன்று நினைவில் வந்தது எண்ணாயிரம் ஆண்டு யோகம் இருக்கினும் கண்ணார் அமுதனைக் கண்டறிவா ரில்லை உண்ணாடி உள்ளே ஒளிபெற நோக்கின் கண்ணாடி போலகலந்து நின்றானே. இறைவனால் படைக்கப் பட்ட ஒவ்வொரு உயிருக்குள்ளும் இறைவன் இருக்கிறான் யார் ஒருவர் உணர்ந்து அறிந்துகொள்கிறார்களோ அவர்கள் இறைவனாகிறார்கள். தமிழ் சினிமாவுலகை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றார் இயக்குனர் பாலா. இப்படம் தமிழின் வெளிவந்த சிறந்த படங்களின் வரிசையில் வைத்து எண்ணத் தக்கது.பல்வேறு விருதுகளுக்குத் தகுதியுடைய படம். திரைப்படம் என்றால் கதாநாயகன்,நாயகியைச் சுற்றியே அமைய வேண்டும் என்ற மரபினைப் பாலா கட்டுடைத்து,அப்படத்தில் வரக் கூடிய ஒவ்வொரு பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழச்செய்துள்ளார் வாழ்வின் சிறு சிறு நிகழ்வுகளையும் திரைக்கதைக்குள் கொண்டு வந்து அழகான நாவல் படிப்பது போன்ற உணர்வினையும் தோற்றிவித்து, ஆழமாக காட்சிப்படுத்தி முடியும் என்பதை உண்மையாக்கியுள்ளார் இயக்குனர் பாலா விளிம்பு நிலை மாந்தர்களின் மீது இயல்பாக ஏற்படக் க...

கருத்தரங்க அறிவிப்பு மடல்

நாகை அ.ம.து.மகளிர் கல்லூரியுடன் இணைந்து-திருவையாறு தமிழய்யா கல்விக்கழகம் நடத்தும் ஏழாவது அனைத்துலக வரலாற்றுத் தமிழ் ஆய்வு மாநாட்டுக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.இக்கருத்தரங்கிற்கு தமிழ்மொழி வரலாறு,தமிழின வரலாறு,தமிழ் மன்னர் வரலாறு,தமிழர் பண்பாட்டு வரலாறு,தமிழ் இலக்கிய வரலாறு,தமிழ் இலக்கண வரலாறு,தமிழர் சமய வரலாறு,தமிழர் அறிவியல் வரலாறு,தமிழ் கவிஞர்-எழுத்தாளர் வரலாறு,திழ் அறிஞர்கள்-நினைவுச்சின்னங்கள் வரலாறு என்ற மையப் பொருண்மையில் அமைந்த கட்டுரைகளை எழுதலாம்.சிறந்த 50 கட்டுகளைத் தேர்ந்தெடுத்து கட்டுரையாளர்களுக்கு செந்தமிழ்ச் சுடர் என்ற பட்டம் வழங்கப் பெறுகின்றது.சிறந்த படைப்பு ஒன்றைத் தேர்வு செய்து 1000ரூபாயும் செந்தமிழ் வேந்தர் பட்டமும் வழங்கப்பெறுகிறது. பதிவுக்கட்டணம்---ஆய்வு மாணவர்களுக்கு 500 மற்றவர்களுக்கு-550 காசோலை எடுக்க வேண்டிய முகவரி கண்ணகி கலைவேந்தன் என்ற பெயரில் பாரத வங்கி,இந்தியன் வங்கி,லெட்சுமி வங்கி,கார்பரேசன் வங்கி,கூட்டுரவு வங்கி ஆகிய வங்கிகளில் எடுத்து அனுப்பலாம்.பணவிடையாகவும் எடுத்து அனுப்பலாம். கட்டுரை அனுப்பவேண்டிய முகவரி முனைவர் மு.கலைவேந்தன் தலைவர் தமிழய்யா கல்விக் கழ...

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

மனித வாழ்வினை மேம்படுத்தி நல்ல ஒழுக்கத்தையும் மனவலிமையையும் விரிந்த அறிவையும் சுயவலிமையையும் தருவது கல்வி. அண்ணல் காந்தியடிகள் கல்வியைப் பற்றி கூறும்போது ’குழந்தைகளிடமிருந்தும் சரி உடல்,உள்ளம்,ஆன்ம உணர்வு ஆகியவற்றில் சிறந்தவற்றை ஒருங்கே வெளிக்கொணர்வது தான் கல்வி என நம்புகிறேன்’ என்பர். கல்வி ’வாழவின் அணியாகவும் தாழ்வின் துணையாகவும் விளங்குவது’ எனக் கல்வியின் சிறப்புரைப்பர் அரிஸ்டாட்டில். நுண்ணறிவுப் பயிற்சியோடு மனத் தூய்மையையும் ஆன்மீக நெறியையும் கற்பிப்பது கல்வி என மொழிவர் டாக்டர் இராதாகிருஷ்ணன். இக் கட்டுரை மேம்பட்ட செம்மையான மானுடவாழ்விற்குத் தோன்றாத் துணையாகத் திகழும் சிறப்புமிக்க இக்கல்வி தமிழகத்தில் வளர்ந்தநிலையினைத் தமிழ் இலக்கிய சான்றுகளுடன் குறிப்பாக செவ்விலக்கியமாகத் திகழக்கூடிய எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றிச் சான்றுகளை மையமிட்டு அமைந்துள்ளது. காட்டுமிராண்டியான மனிதன் விலங்குகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள எழுப்பிய ஒலி கருத்துடன் கூடியதல்ல. இந்நிலையில் மற்றவர்களின் துணையை நாடிய போது கூடி வாழும் நிலை ஏற்பட்டது.அப்போதுதான் ஒருவர் கருத்தை மற்றவர் புரிந்து கொள்ள...

கருத்தரங்கம்

கணிணி மற்றும் இணையத்தமிழ் என்னும் தலைப்பில் பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம் 27,28.02.2009ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. பதிவுக்கட்டணம் ஆய்வாளர்க்ளுக்கு 100 விரிவுரையாளார்களுக்கு 200.ஆகும்.கட்டுரை16.02.2009தேதிக்குள் அனுப்ப வேண்டும். முனைவர் இரா.குணசீலன் பகுதியில் கண்டது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களைப் பொறுக்க முடியாமல் தன் இன்னுயிரைத் துச்செமென நினைத்துத் தீக்குளித்து உயிர் விட்ட தோழர் முத்துகுமாரனுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் வகுப்புக்களைப் புறக்கணித்தனர்.தோழர் முத்துக்குமரனின் இறுதி ஆசை நிறைவேறுமா?

குடியரசுத் தின வாழ்த்துக்கள்

இணைய நண்பர்கள் அனைவருக்கும் குடியரசுத் தின வாழ்த்துக்கள்.

பார்க்கும் இடங்களெல்லாம் பல்கலைக்கழகம்

பார்க்கும் இடங்களெல்லாம் பல்கலைக்கழகம் பார்வை சரியாக இருந்தால் என்பர் புலவர் இரா.இளங்குமரனார்.ஆம் நம்மை சுற்றி ,நாம் காணும் இடங்கள் அனைந்துமே நமக்கு ஏதோ ஒரு வகையில் பாடங்களைக் கற்றுக்கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன.அண்மையில் தஞ்சைக்கு அருகில் உள்ள ஒக்கநாடு கீழையூர் என்னும் ஊரில் 80 வயது மதிக்கதக்க பெண்மணியைச் சந்தித்தேன்.அவர் 1920 இல் பர்மாவிலிருந்து இந்த ஊருக்கு வந்தவர்.அவரிடம் பேசிக்கொண்டு இருந்த போது அங்கு 8ஆம் வகுப்பு வரை படித்ததை நினைவு கூர்ந்தார்கள்.அவர்களிடம் பல செய்திகளை அறிந்து கொண்டேன்.பள்ளிக்குப் போனப் பின்னும் உணவு இடைவெளியின் போதும் ,மாலை வீடி திரும்பும் பொழுதும்,ஆசிரியர்களை எவ்வாறு வணங்கி விடைபெறுவார்கள் என்பதைக் கூறினார்கள்.இந்த வயதிலும் அவர்கள் படித்த குமரேச வெண்பா ,நீதி நெறிகள்,கம்பராமாயணம் போன்றவற்றை நினைவி நிறுத்தி நன்கு கூறுகின்றார்கள்.அதற்கு அவர்கள் கூறும் காரணம் சிறுவயது முதற்கொண்டே பாடங்களை நன்கு மனனம் செய்ததே என்கிறார்.உரு போடாத மனம் உருப்படாது என்பார்கள் அது உண்மை தான் .ஆனால் இன்று மனனம் செய்வதே குறைந்து வருகிறது. காலை வந்தவுடன் காலையில் எழுந்திருந்து கால்கை ...

ஆசிரியப்பணி

ஆசிரியப்பணி என்பது மிகப் புனிதமான பணி.அங்கு நமது விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை.ஒவ்வொரு மாணவர்களுமே நம்முடைய குழந்தையைப் போல நடத்த வேண்டுமே ஒழி,பிடித்த மாணவர்களிடம் ஒரு மாதிரியாகவும் பிடிக்காதவர்களிடம் ஒரு மாதிரியாகவும் நடந்து கொள்வது ஆசிரியர் பணிக்குச் சிறப்பில்லை.எனக்கு தெரிந்த ஒரு மாணவி.அவள் நன்கு படிக்க கூடியவள்.எல்லா ஆசிரியர்களிடமு நல்ல பெயரும் வாங்கியிருந்தாள். இதை பொறுத்துக்கொள்ள முடியாத ஆசிரியர் ஒருவர் மட்டும்,அவளுடைய பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கிலே செயல்பட்டு,மற்ற ஆசிரியர்களிடம் இல்லாததை சொல்லி அவள் மேல் மற்றவர்களும் வெறுப்புக் கொள்ளும் சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டார்.இத்தகைய செயல் ஆசிரியர் தொழிலுக்கு நன்றா?தன்னுடைய மாணவர்கள் என்ன தவறு செய்திருந்தாலும் அவர்களைத் தனியே அழைத்துத் திருத்துவது தானே ஆசிரியர் கடன்.இதனை ஏனோ அவர் மறந்தார்.மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஒரு சிறந்த முன் மாதிரியாக இருக்க வேண்டும்

வகுப்பு புறக்கணிப்பு

இன்று அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கையில் போரினை நிறுத்தக் கோரி தங்களது வகுப்புக்களைப் புறக்கணித்தனர்.

மொழிப் போரில் அண்ணாவின் மொழியாளுமை

குள்ள உருவம்; குறும்புப்பார்வை; விரிந்த நெற்றி; பரந்த மார்பு; கறைபடிந்த பற்கள்; கவலையில்லா தோற்றம்; நறுக்கப்பட்ட மீசை; நகை தவழும் முகம்; சீவாத தலை; சிறிதளவு வெளிவந்த தொப்பை; செருப்பில்லாத கால்; பொருத்தமில்லாத உடைகள்; இடுப்பில் பொடி மட்டை; கையில் வெற்றிலை பாக்கு பொட்டலம்; இத்தோற்றத்தோடு காட்சியளித்து நின்கிறாரே அவர்தான் அண்ணா, என நாவலர் நெடுஞ்செழியன் காட்சிப்படுத்தும், இந்த உருவம் தான் 1937 இன் தொடக்க காலக்கட்டங்களிலும்,பிந்திய காலங்களிலும் தாய் மொழி தமிழ் அழியும் நிலை ஏற்பட்ட பொழுது,‘ நம்முடைய தமிழ் மொழி பிழைத்தால்தான் நம்முடைய இனம் பிழைக்கும்! நம்முடைய நாடு நமக்குக் கிடைத்தால்தான் நாம் தலை நிமிர்ந்து வாழமுடியும்’எனச் தமிழ் சமுகத்தை நோக்கி அறைகூவல் விடுத்தார். அதன் விளைவாக எண்ணிறந்தோர் மொழிகாக்க வீறு கொண்டு எழுந்தனர்.அவ்வாறு அவர்கள் வீறுகொண்டு எழுவதற்குக் காரணம்,அண்ணாவின்,மொழியாளுமை என்றால் மிகையில்லை. பழுத்த அறிவு,கூரிய அறிவு நுட்பம்,அகன்ற காட்சியறிவு அகியவை அவர் தம் நடையினை அணி செய்கின்றன.அவர் தம் ஆளுமையும் முனைப்பாகப் புலப்படுகின்றது. கருத்து முதன்மையும் முழுமையும் கருத்து வெளிப்பாட...

குமரகுருபரின்-மீனாட்சியம்மை குறம்

தென்பாண்டியில் உள்ள தென்கைலாயத் தலத்தில்,வேளாளர் குலத்தில் திருவாளர் சண்முக சிகாமணிக் கவிராயருக்கும்,திருவாட்டி சிவகாமியம்மையாருக்கும் மகவாய் தோன்றியவர் குமரகுருபர்.ஐந்து வயதுவரை ஊமையாக இருந்து,முருகன் அருளால் பேசும் திறனைப் பெற்ற குமரகுருபர்,முருகன் மேல் முதன்முதலில்’கந்தர் கலிவெண்பா’ என்ற நூலை அருளினார்.அதன் பிறகு மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்,முத்துசுவாமி பிள்ளைத்தமிழ்,மதுரைக்கலம்பகம்,நீதிநெறி விளக்கம்,மதுரை மீனாட்சியம்மை குறம் போன்ற பல புகழ் பெற்ற இலக்கிய வகைகளைத் தமிழுலகுக்கு வழங்கியுள்ளார். அவற்றுள் மதுரை மீனாட்சியம்மை குறம் 51 பாடல்களைக் கொண்டு,இலக்கிய நயத்துடனும்,பக்தி செறிவாயும் இலங்குகின்றது. இந்நூல் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது. குறம்-குறவஞ்சி .தொன்மையில் வழங்கிவந்த குறி சொல்லும் வழக்கமே பிற்காலத்தில் குறவஞ்சி இலக்கியமாக எழுந்தது என்றும், சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான கலம்பக உறுப்புகளுள் ஒன்றாக இருந்த குறம்,பிற்காலத்தில் குறவஞ்சி இலக்கியமாக மலர்ந்தது என்றும் கூறுவர்.ஒரு குறத்தி குறி கூறுவதாக அமையும் பிரபந்தம் குறமென்றும் வழங்கும் என்பர் உ.வே.சா.குறத்தி ஒருத்தியின...

சிதம்பரத்தில் நாளை ஆருத்ரா தரிசனம்

பஞ்சபூத தலங்களுள் ஆகாயத் தலமாக விளங்கக் கூடியது தில்லையம்பதியாகும். இவ்வூர் சைவபெருமக்களால் கோவில் நகரம் எனவும் அழைக்கப் பெறும் சிறப்புடையது.மேலும் ஞானகாசம், பொன்னம்பலம் எனப் பல பெயர்கள் வழங்கப் பெறுகின்றன.இக் கோயிலில் சிற்றம்பலம்,பேரம்பலம்,பொன்னம்பலம்,நிருத்தசபை,இராஜசபை என ஐந்து சபைகள் உள்ளன. பொன்னம்பல இராஜசபையில் தூக்கயாடிய காலுடன் உலக இயக்கத்தினை உணர்த்திக்கொண்டிருக்கும் ஆதிகூத்தனுக்கு ஒவ்வொரு நாளும் ஆறுகால பூசையும்,வருடத்திற்கு ஆறுமுறை திரு நீராட்டும் நடைபெறும்.ஆறுமுறை நடைபெறும் திருநீடாட்டில் இரண்டு முறை மட்டும் இறைவனும்,இறைவியும் தேரேறி மக்களைக் காண வருவர்.இங்கு என்ன சிறப்பென்றால் மற்ற கோவில்களில் உற்சவ மூர்தியைத் தேரேற்றுவர் ,ஆனால் சிதம்பரத்தில் இராஜ சபையில் இருக்க கூடிய மூலவரான அம்மையும்,அப்பனுமே தேருலா வருவர். திருவாதிரை நட்சத்திற்கு உரியவனாகிய சிவனை ஆதிரையான் எனப் போற்றுவர்.வருடத்திற்கு இரண்டு முறை அதாவது ஆனி உத்திரத்தன்றும்,மார்கழி திருவாதிரையன்றும் தேருலா நடைபெறும்.பிறகு இறைவனும் இறைவியும் ஆயிரங்கால் மண்டத்தில் எழுந்தருளி திருமஞ்சனம் ஏற்று அடியவர்களுக்குத் தரிசனம் தருவர்....

பழமொழி

அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் விடாப்பிடியாக உதைத்தால், குற்றம் புரிந்த குற்றப் பரம்பரையினர் பெரும்பாலும் உண்மை உரைப்பர் என்று கூறுவதைவிட,குற்றம் புரிந்தவர்களிடம் கேள்விமேல் கேள்வி கேட்டு உண்மையை வரவழைக்க முடியும் என்பதே பொருத்தமாக உள்ளது. கேள்விமேல் கேள்வி கேட்க்கும் பொழுது அவர்கள் முன்னுக்கு பின் முரணாகக் கூறி உண்மையைக் கூறிவிடுவர் என்பது இன்று நாம் காணும் உண்மை.

சொற்பொழிஞர் அண்ணா

நாமொழியால் நானில மக்களின் உள்ளத்துள் எழுச்சியை ஏற்படுத்தி,எண்ணத்துள் பகுத்தறிவு சிந்தனையைச் செதுக்கிய சிந்தனைச் சிற்பிகள் பலர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பேரறிஞர் அண்ணா என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பெறும் சி.என்.அண்ணாதுரையாவர். இவர் தம் நாமொழியால் தமிழ்நிலத்தை அசைத்துப் பார்த்தவர். பொதுமக்களிடம் மட்டுமின்றி வருங்கால இளைய சமுதாயத்தினரிடமும் பகுத்தறிவுச் சிந்தனையை வித்திட்ட பண்பாளர்.இவருடைய மேடைப் பொழிவினைக் கேட்பது திருவாடுதுறை இராஜரத்தினம் அவர்களின் நாதசுரத்தில் தோடியைக் கேட்பதை ஒக்கும் என்பர். நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் அண்ணாவின் பொழிவினைக் குறிப்பிடும் பொழுது ‘சிறந்த பேச்சாளர் பட்டியலின் முன்னணியில் டொமஸ் தெனியைக் கொண்டு வந்து நிறுத்துகிறது கிரேக்க நாடு; எட்மண்ட் பர்க்கைக் கொண்டு வந்து நிறுத்துகிறது இங்கிலாந்து;ராபட் கீரின்,இங்கர்சாலைக் கொண்டு வந்து நிறுத்துகிறது அமெரிக்கா;சிறந்த பேச்சாளர் வரிசையில் முதலிடத்தில் திராவிடம் நிலை நிறுத்துவதற்குரிய ஒரே ஒருவர் அறிஞர் அண்ணாதான்.இவரது சொற்பொழிவு சலசலவென்று ஓடும் சிற்றருவியின் பாங்கு போலவும் சொற்கள் நாணயச் சாலையில் அடிப்பட்டு ஒன்றன் ப...

கருத்தரங்கம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அண்ணாவினுடைய நூற்றாண்டைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்நாளில், அவருடைய இலக்கியப் பங்களிப்பினைக் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் நோக்கில் கருத்தரங்கம் நடைப்பெறவுள்ளது.அது தொடர்பான கட்டுரைகள் 7-1-௨௦௦௮- க்குள் அனுப்பவும்.அனுப்ப வேண்டிய முகவரி பதிவாளர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அண்ணாமலை நகர்-608002. பேராளர் கட்டணம்-400
படம்