இடுகைகள்

நவம்பர், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காக்கையைச் சமைத்து....

படம்
நகைச்சுவை நடிகரும்,தமது படங்களின் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவருமான கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு படத்தில் நடிக்கும் போது'காக்கையைச் சமைத்து கருவாடு மென்று தின்பார்கள் படித்தவர்கள்' என்றார். இதைப் பார்த்த அவர் நணபர் ஒருவர் அவரிடம் கேட்டார்,நீங்கள் படத்தில் கொடுத்துள்ள விளக்கம் வேடிக்கையாக இருக்கிறதே! அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.காக்கையைப் பொதுவாக கறியாக சமைத்துச் சாப்பிடுவதில்லை,கருவட்டை மென்று பொதுவாக தின்பதில்லையே? கடித்து தான் தின்பார்கள். அதற்கு கலைவாணர் விளக்கம் கூறினார். உணவு பற்றாக்குறை நாட்களில் அதிகம் உண்ணக் கூடாது என்று கருதி படித்தவர்கள் கால் (பங்கு)காயை மட்டுமே கறி சமைத்து உண்பார்கள்.கால் + காய் - காக்காய் அந்த கால் காயாவது உண்ணாவிட்டால் அவர்களது உடம்பு வாடிவிடும் என்பதற்காக அதை உண்பார்கள்.'கரு' பிறந்த உடம்பு 'வாடும்' எனுற தின்பார்கள். கரு + வாடும் + மென்று = கருவாடுமென்று தின்பார்கள் என்று விளக்கம் அளித்தாராம். விளக்கம் கேட்ட நண்பர் பொருள் புரிந்து அமைதியாக சென்றாராம்.

வானத்தில் எவ்வளவு தூரம்...

மேலைநாடு சென்று இந்திய ஆன்மீகத்தின் புகழை நிலைநிறுத்திய சுவாமி விவேகானந்தர் தத்துவஞானி மட்டுமல்லாது,நல்ல திறமிக்க உடற்கட்டையும்,கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்டவர். ஒருமுறை கல்கத்தா நகர வீதியில் சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது வெறிபிடித்த முரட்டுக்காளை ஒன்று துள்ளிக் குதித்து ஆர்பாட்டமாக பாய்ந்து வந்தது.அதனைக் கண்டோர் அனைவரும் நாலாதிசையிலும் பறந்தோடினர்.எதிர்பட்டவர்களை அக்காளை துவம்சம் செய்து வந்துகொண்டு இருந்தது. எதிர்பாராத நிலையில் அக்காளை விவேகானந்தருக்கு நேர் எதிரே வந்து நின்றது.அதனைச் சற்றும் எதிர்பார்க்காத விவேகானந்தர் சிறிதேனும் கலக்கம் கொள்ளவில்லை.இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு அந்த காளையின் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டு சற்று நேரம் நின்று கொண்டு இருந்தார். பாய்ந்து வந்து காளை இவரின் தீட்சண்யமான பார்வையைக் கண்டதும் ஏதோ ஒன்றுக்கு கட்டுப்பட்டதைப் போல அசைவற்று நின்றது.பின்னர் வந்த வழியே அமைதியாகத் திரும்பி போய்விட்டது. இக்காட்சியைக் கண்டோர் வியந்து,விவேகானந்தரிடம் காளை உங்கள் எதிரில் வந்த போது நீங்கள் என்ன நினைத்தீர்கள் என்று கேட்டனர். அதற்கு விவேகானந்தர் சொன்னார...

எனக்குத் தெரியாது

ஒருமுறை தமிழறிஞர் மறைமலை அடிகளார் தமிழாசிரியர் வேலைக்கு விண்ணப்பம் அனுப்பியிருந்தார்.பள்ளி நிர்வாகியினர் அவரை நேர்காணலுக்கு அழைத்துள்ளனர்.அவர்மு சென்றார்.அப்பொழுது அங்கு அவரிடம் ஒரு வினா எழுப்பப்பட்டது. 'குற்றியலுகரத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டுக்களைக் கூறுவும்'என்பதே அவ்வினா. மறைமலை அடிகள் 'எனக்குத் தெரியாது 'என்று அமைதியாக கூறினார். வினா கேட்டவர் மீண்டும் அவருடம் 'எங்களது வினாவிற்கு என்ன விடை ' என்று வினவினர். மறுமுறையும் அடிகளார் அவர்கள் 'எனக்கு தெரியாது 'என இரண்டு சொற்களுக்கும் இடைவெளிவிட்டு அழுத்திக் கூறினார். வினாகேட்டவர்களின் மத்தியில் இருந்த மற்றொரு தமிழ் புலவர் அடிகளார் கூறும் பதிலினைப் புரிந்து கொண்டு புன்னகைபுரிந்து கொண்டு .அங்கிருந்த மற்றவர்களுக்கு அவர் கூறிய பதிலை விளக்கினார். 'எனக்கு' 'தெரியாது' என்னும் இரண்டு சொற்களுமே குற்றுகரச் சொற்கள்தான் என்றார்.அதற்குப் பிறகு அடிகளாரைக் வினா விடுக்கவும் அஞ்சி பேட்டியை முடித்துக்கொண்டனர்.

அந்தமான் நிழற்படங்கள்

படம்

அந்தமான் -பகுதி 2

அச்சிறிய தீவில் முன்பு ஆங்கிலேயர்கள் நீர் சுத்திகரிப்பு செய்வதற்கும்,ஓய்வெடுப்பதற்கும் இராணுவங்களை அங்கு வைத்திருப்பதற்கும் பயன்படுத்தியுள்ளார்கள்.அந்த கட்டிடங்கள் எல்லாம் இடிந்து மரங்கள் வளரந்து காணப்பெறுகின்றன.அங்கு ஒரு கிருத்துவ ஆலயமும் இருக்கின்றது.மான்கள் நிறைய காணப்பட்டன. அத்தீவில் இளநீர் குடித்தோம், இளநீர் நிறைய இருந்து. விலை 20 ரூபாய்.சுவை நன்றாக இருந்தது என்று சொல்லமுடியாது. அங்கு எங்களுக்குத் துணையாக வந்த அந்தமான் நண்பர் அத்தீவினைப் பற்றியும் அந்தமானைப் பற்றியும் விவரித்தார்.அந்தமான் விமானநிலையத்திற்குச் சுதந்திர போராட்ட வீரர் சவர்கரின் பெயர் சூட்டப்பெற்றுள்ளது.அவர் அத்தீவில் பட்ட இன்னல்களை எடுத்துரைத்தார்.சுமார் 200 மேற்பட்ட தீவுக்ள அங்கு இருப்பதாகவும்,அதில் பழங்குடியினர் சில பகுதிகளில் வாழ்ந்துகொண்டு இருப்பதாகவும்,சில பழங்குடியினர் நாகரிக மாற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும் ,இன்னும் சில பழங்குடியினர் மாறாமல்,நாகரிகத்தை வெறுப்பதாகவும்,வெளியாட்கள் யாரும் வருவதை அவர்கள் விரும்பாத செய்தியினையும் தெரிவித்தார். அங்கு ஆல்,தென்னை அதிகம்,வேறு சில மரங்ளும் காணப்பெற்றன.இராணுவம் பயன...

விடுகதை

விடுகதையை விரும்பாதவர்களே இருக்க முடியாது பெரியவர்கள் முதல் குழந்தைக்ள வரை அனைவரும் விரும்பக்கூடியது .உலகின் பண்பட்ட பண்படாத அனைத்து மொழிகளிலும் விடுகதைகள் காணப்பெறுகின்றன.விடுகதையை ஒரு இலக்கியமாகே கொண்டு போற்றப்பெறுகின்றது.விடுகதைகள் சிந்தனைக்கு விருந்தாவும்,நகைப்பிற்றகுக் களமாகவும் விளங்குகின்றன.இவ்விடுகதையில் உயர்ந்த வேதாந்த கருத்துக்கள் தொடங்கி எளிய உலக வாழ்க்கைப் பொருள் வரையிலும் இடம்பெற்றிருக்கும்.தொல்காப்பியர் விடுகதையைப் பிசி என்று கூறுகின்றார்.இப்படி அறிவுக்கு விருந்தாக அமையும் விடுகதை இன்று அருகி வருகின்றது. உங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு விடுகதை கூறுகின்றேன் அதற்கு விடை கூறுங்களேன். ஒரு விடுகதை பார்ப்போமா? அங்காடி கொள்ளப்போய் யானை கண்டேன் அணிநகர் மன்றிலே சேனை கண்டேன் கொங்காரும் முத்தரசர் தம்மைக் கண்டேன் கொடித்தேரும் பரிமாவும் கூடக் கண்டேன் அங்கிருவர் எதிர்நின்று வெட்டக் கண்டேன் அதுகண்டு யான் தலையைத் தாழ்த்த லுற்றேன் -----நான் யார்? கூறுங்கள்.

அந்தமான்.........

படம்
அந்தமான் சென்று வந்து 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது .அந்தமான் பயண அனுபவத்தை உடனே எழுத வேண்டும் என்று எண்ணினேன் நேரம் வாய்க்கவில்லை.இப்பொழுது நேரம் கிடைத்து உங்களுடன் என் பயண அனுபவத்தைப் பகிர்ந்தகொள்ளலாம் என்று எண்ணுகின்றேன். அக்டோபர் மத்தியில் விடுமுறைநாளின் மதியநேரத்தில் அலைபேசியில் ஒரு அழைப்பு அந்தமான் வருகிறீர்களா என்று?ஏன் என்னு வினாவினேன் அந்தமானில் திருக்குறள் சிலைத்திறப்பு மற்றும் மாநாடு நடக்கவுள்ளது அதில் கலந்துகொள்ள அழைப்பு வந்துள்ளது ,ஆனால் கட்டுரை இரண்டு பக்க அளவில் ஒரே நாளில் கொடுக்கவேண்டும் என்று கூறினார். போய்வரலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது(என்னிடம் கடவுச்சீட்டு கிடையாது இனிதான் எடுக்கவேண்டும்,அந்தமான் இந்தியாவின் ஒருபகுதி அதனால் அங்குச் செல்வதற்குக் கடவுசீட்டுத் தேவை இல்லை) சரி என்றேன்(என் கணவர் போய்வா என்று கூறுவார் என்ற நம்பிக்கையில் அவர் மறுக்க மாட்டார் என்பது வேறு,அவரிடமும் கேட்டனேன் அவரையும் அழைத்தேன் அவருக்கு வேலையிருந்ததால் நீ சென்று வா என்றார்) சரி வருகிறேன் என்று கூறிவிட்டு அருவினை என்ப உளவோ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதினேன். துணைக்கு யாரை வேண்டும் என்றாலும் அழ...

அந்தமான் பயணம்....

படம்

அந்தமானில் திருவள்ளுவர் சிலைத் திறப்பு அழைப்பிதழ்

படம்
வி.ஜி.பி உலகத் தமிழ்ச்சங்கமும் அந்தமான் தமிழர் சங்கமும் இணைந்து அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலைத் திறப்பு விழா மற்றும் 9 -ஆவது திருக்குறள் மாநாடு எதிர் வரும் நவம்பர் 6,7,8 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது.அதனுடைய அழைப்பிதழ். அம்மாநாட்டில் நானும் கலந்துகொள்ள செல்லுகின்றேன்.

வஞ்சினம்

பழந்தமிழரின் காதலையும் வீரத்தையும் பறைசாற்றுவன சங்க இலக்கியங்கள். சங்க மக்கள் வீரம் செறிந்தவர்களாக, பழிகண்டு நாணுபவர்களாக,பழியைப் போக்கிக் கொள்ள வஞ்சினம் கூறி அதனை நிறைவேற்றியுள்ளார்கள். காதலிலும் அதுபோன்றே நிகழ்ந்துள்ளது. (உண்மைதான் படித்துப் பாருங்களேன். இப்பொழுதும் தான் இருக்கின்றோமே) பூதபாண்டியன் என்னும் மன்னன் பாண்டியருக்குரிய ஒல்லையூரைப் பகைவரிடமிருந்து வென்று கொண்ட சிறப்பால் ஒல்லையூர் பூதபாண்டியன் என்று சிறப்பிக்கப்பட்டான். அவன் மனைவி பெயர் பெருங்கோப் பெண்டு.இருவரும் புலமையில் வல்லவர்கள். ஒத்த கருத்துடைய இருவரும் அன்பெனும் பிடிக்குள் சிக்கி இனிய இல்லற வாழ்க்கையை மேற்கொண்டனர். ஒருமுறை சேர ,சோழ மன்னர்களுக்கும் இவனுக்கும் பகைமை உண்டாயிற்று. இரு வேந்தர்களும் ,பாண்டியனுடன் போரிட வந்தனர்.அதனை அறிந்து மிக்க சினமுற்ற பாண்டியன் அவ்விரு மன்னர்களையும் துன்புற்று வருந்தும் படி தாக்கி, தேரோடு புறங்காண ஓட வைப்பேன் .அப்படி செய்யேன் ஆயின் பெரிய மையுண்ட அழகான கண்களை உடைய என் துணைவியைப் பிரிவேனாக என்றும், ஆரமர் அலறத் தாக்கி தேரொடு அவர்ப்புறம் காணேன் ஆயின்,சிறந்த பேரமர் உண்கண் இவளினும் பிரிக.(புற...

வஞ்சப் புகழ்ச்சி

இலக்கணத்தில் வஞ்சப்புகழ்ச்சியணி (irony)என ஒன்று உண்டு.சங்க இலக்கயத்தில் இவ்வணி பயின்று வந்துள்ளது. வஞ்சப் புகழ்ச்சி அணி என்பது ஒருவரைப் புகழ்வது போல இகழ்வதும்,இகழ்வது போல புகழ்வதும் ஆகும்.(இன்றைய சூழலை புகழவேண்டியவரை இகழ்வதும்,இகழவேண்டியவரைப் புகழ்வதும் தானே நடந்து கொண்டு இருக்கிறது.பல இடங்களில்,சரி செய்திக்கு வருவோம்) புறநானூற்றில் நெட்டிமையார் என்னும் புலவர் முதுகுடுமிப் பெருவழுதியை இகழ்வதுப் போல புகழுகின்றார். முதுகுடுமி பகைவர்களை வென்று அவர்களுடைய நாட்டில் இருந்து பல பொருள்களைக் கவர்ந்து வந்து பாணர் புலவர் போன்றோருக்கு வழங்குகின்றான்.அச்செயலைப் பார்த்த புலவர், பாணர் பொற்றாமரைப் பூவைச் சூடவும் புலவர் நெற்றிப் பட்டம் அணிந்து யானையுடன்,ஏறுதற்கேற்றப ஒப்பனை செய்து தேரை நிறுத்தவும் செய்தல் அறச்செயல் ஆகுமோ? வெற்றியிற் சிறந்த முதுக்குடுமு பெருவழுதியே ! வேற்றாருடைய நிலத்தை அவர் துன்புறும்படி கைப்பற்றி உன்னுடைய பரிசிலரிடத்து இனிய செயல்களைச் செய்கின்றாய் என நெட்டியார்,அவ்வழுதியை வஞ்சப் புகழ்ச்சியணி தோன்றப் புகழுகின்றார். பாணர் தாமரை மலையவும்,புலவர் பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும், அறனோ மற்...

காவிதிமாக்கள்

சங்க இலக்கியத்தில் மக்களுக்கு வேண்டத்தக்கது அறிந்து ,வேண்டியதை விருப்பு வெறுப்பின்று வழங்கிய அமைச்சர்களுக்கு கொடுக்கப்பெற்ற பட்டமே காவிதிப்பட்டம். அமைச்சர்கள் மக்களின் நன்மை தீமைகளைத் தம் அறிவால் கண்டு,மேலும் ஆய்ந்து அன்பு நெறியிலும் அறச்செயலிலும் ஒழுக எக்காலமும் மாறாதவாறு தன்னைக் காத்து,சான்றோரால் பழித்து ஒதுக்கப்பட்ட தீவினைகளை விலக்கி,அதனால் உயர்ந்து,வறியோருக்கு வழங்கதலான் உலகெலாம் புகழும் தலைமை அமைந்த காவிதிப்பட்டம் பெற்ற அமைச்சர்கள் எனச் சங்க இலக்கியம் கூறுகின்றது. நன்றும் தீதும் கண்டாய்ந்து அடக்கி, அன்பும் அறனும் ஒழியாது காத்து, பழிஒரீஇ உயர்ந்து,பாய்புகழ் நிறைந்த செம்மை சான்ற காவிதி மாக்கள் (மதுரைக்காஞ்சி) என்று மாங்குடி மருதனார் அமைச்சர்கள் மக்களுக்காவே வாழ்ந்த அமைச்சர்கள் சிறப்பிக்கப்பட்டதைக் கூறுகின்றார்.ஆனால் இன்றைய அமைச்சர்கள்?..........சொல்லமுடியுமா ? விரல் விட்டு எண்ணமுடியுமா?

முனைவர் மு.இளங்கோவனின் நூல்வெளியீட்டு விழா

படம்
வெள்ளியன்று மாலை 6.30 மணிக்கு முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் அயலகத் தமிழறிஞர்கள் இணையம் கற்றபோம் என்னும் இரு நூல்களின் வெளியீட்டுவிழா நடைபெற்றது.இயல்பிலேயே நாட்டுப்புற கலைகளில் ஈடுபாடுடைய பேரா.மு.இளங்கோவன் அவர்கள் நாட்டுப்புறப் பாடலைப் பாடக்கூடிய கிராம மங்களை அழைத்து வந்து பாட சொல்லியிருந்தார்.நன்றாக இருந்து கிராமத்திற்குச் சென்று வந்தது போன்ற உணர்வு. பேராசிரியர் அகிலா தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட பேராசிரியர் இரா.வாசுகி வரவேற்பு வழங்க விழா இனிதே தொடங்கியது.புதுவைப் பல்கலைகழகப் பேராசிரியர் அ.அறிவுநம்பி அவர்கள் தலைமையேற்று நூலினைப் பற்றிய செய்திகளை வழங்கியதோடு,நூலாசிரியருக்கும் தமக்கும் இருக்க கூடிய உறவினைப் பிணைப்பினை வெளிப்படுத்தினார். புதுவை சட்டபேரவைத் தலைவர் இரா.இராதாகிருஷ்ணன் அவர்கள் நூலினை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.அவரைத் தொடர்ந்து, முனைவர் து. சாந்தி (முதல்வர், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி) முனைவர் அ. அழகிரிசாமி (முதல்வர், இராசேசுவரி மகளிர் கல்லூரி) திருமிகு இரா. அனந்தராமன் (ச.ம. உறுப்பினர்) முனைவர் அரங்க. பாரி (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) திருமிகு குணவதிமைந்தன் (குறும்பட இயக...