முனைவர் மு.இளங்கோவனின் நூல்வெளியீட்டு விழா





வெள்ளியன்று மாலை 6.30 மணிக்கு முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் அயலகத் தமிழறிஞர்கள் இணையம் கற்றபோம் என்னும் இரு நூல்களின் வெளியீட்டுவிழா நடைபெற்றது.இயல்பிலேயே நாட்டுப்புற கலைகளில் ஈடுபாடுடைய பேரா.மு.இளங்கோவன் அவர்கள் நாட்டுப்புறப் பாடலைப் பாடக்கூடிய கிராம மங்களை அழைத்து வந்து பாட சொல்லியிருந்தார்.நன்றாக இருந்து கிராமத்திற்குச் சென்று வந்தது போன்ற உணர்வு.

பேராசிரியர் அகிலா தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட பேராசிரியர் இரா.வாசுகி வரவேற்பு வழங்க விழா இனிதே தொடங்கியது.புதுவைப் பல்கலைகழகப் பேராசிரியர் அ.அறிவுநம்பி அவர்கள் தலைமையேற்று நூலினைப் பற்றிய செய்திகளை வழங்கியதோடு,நூலாசிரியருக்கும் தமக்கும் இருக்க கூடிய உறவினைப் பிணைப்பினை வெளிப்படுத்தினார்.


புதுவை சட்டபேரவைத் தலைவர் இரா.இராதாகிருஷ்ணன் அவர்கள் நூலினை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.அவரைத் தொடர்ந்து,


முனைவர் து. சாந்தி (முதல்வர், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி)
முனைவர் அ. அழகிரிசாமி (முதல்வர், இராசேசுவரி மகளிர் கல்லூரி)
திருமிகு இரா. அனந்தராமன் (ச.ம. உறுப்பினர்)
முனைவர் அரங்க. பாரி (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)
திருமிகு குணவதிமைந்தன் (குறும்பட இயக்குநர்)
பாவலர் மகரந்தன் (சாகித்திய அகாடமி உறுப்பினர்)

அனைவரும் வாழ்த்துரை நல்க. நன்றியுரையை பாவலர் சீனு.தமிழ்மணி வழங்க விழா இனிதே நிறைவுற்றது.

.

கருத்துகள்

ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
பகிர்வுக்கு நன்றி
jananidevaki இவ்வாறு கூறியுள்ளார்…
தஙகள தகவல்களுக்கு நன்றி,நான் நன்கு கற்ற பதில் தகவல் தரும் வரை தவறான தட்டச்சுப் பிழையடன் நன்றிநன்றி நன்றி,
jananidevaki இவ்வாறு கூறியுள்ளார்…
த்ங்கள் தகவல்களைப் பின்பற்றி தங்களுக்கு நன்றி சொல்லி நன்றி சொல்லி தட்டச்சுப் பழகிக்கொள்கிறேன்,
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சேகரன்
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கு நன்றி முனைவர் தேவகி அவர்களே...விரைவில் பழகுங்கள் வாழ்த்துகள்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்