காவிதிமாக்கள்

சங்க இலக்கியத்தில் மக்களுக்கு வேண்டத்தக்கது அறிந்து ,வேண்டியதை விருப்பு வெறுப்பின்று வழங்கிய அமைச்சர்களுக்கு கொடுக்கப்பெற்ற பட்டமே காவிதிப்பட்டம்.

அமைச்சர்கள் மக்களின் நன்மை தீமைகளைத் தம் அறிவால் கண்டு,மேலும் ஆய்ந்து அன்பு நெறியிலும் அறச்செயலிலும் ஒழுக எக்காலமும் மாறாதவாறு தன்னைக் காத்து,சான்றோரால் பழித்து ஒதுக்கப்பட்ட தீவினைகளை விலக்கி,அதனால் உயர்ந்து,வறியோருக்கு வழங்கதலான் உலகெலாம் புகழும் தலைமை அமைந்த காவிதிப்பட்டம் பெற்ற அமைச்சர்கள் எனச் சங்க இலக்கியம் கூறுகின்றது.

நன்றும் தீதும் கண்டாய்ந்து அடக்கி,
அன்பும் அறனும் ஒழியாது காத்து,
பழிஒரீஇ உயர்ந்து,பாய்புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்கள் (மதுரைக்காஞ்சி)

என்று மாங்குடி மருதனார் அமைச்சர்கள் மக்களுக்காவே வாழ்ந்த அமைச்சர்கள் சிறப்பிக்கப்பட்டதைக் கூறுகின்றார்.ஆனால் இன்றைய அமைச்சர்கள்?..........சொல்லமுடியுமா ? விரல் விட்டு எண்ணமுடியுமா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்