இடுகைகள்

இலக்கணம் 05.01.2015

மகர இறுதி வேற்றுமை யாயின்  துவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே ( தொல்காப்பியம் - 31) வேற்றுமைப் புணரச்சியில் நிலைமொழிகளாக உள்ள மகர ஈற்றுச் சொற்கள் மகரம் கெட்டு வருமொழிக்கேற்ற வல்லவெழுத்து மிக்கு முடியும். எடுத்துக்காட்டு    மரம் + கோடு   = மரக்கோடு மரத்தினது கோடு என்று பொருள் பணம் + பெட்டி  = பணப்பெட்டி சட்டம் + பேரவை  = சட்டப்பேரவை பணம் + பயிர்   = பணப்பயிர் குற்றம்+ பத்திரிகை  = குற்றப்பத்திரிகை வட்டம் + பலகை     = வட்டப்பலகை சதுரம் + பெட்டி    

புணர்ச்சி 03.01.2015

பொதுவாக மொழியில் புணர்ச்சி என்பது ஒரு சொல்லோடு இன்னொரு சொல்லோ, உருபனோ வந்து சேரும்பொழுது இடையில் ஏற்படும் மாற்றங்கள்.  சமஸ்கிருத்தில் சந்தி என்று கூறப்படுகிறது. பணம் + பெட்டி ------- பணப்பெட்டி என இணையும் இதில் பணம் என்பது நிலைமொழி பெட்டி என்பது வருமொழி என்று கூறப்படுகிறது. இவற்றுள் நிலைமொழியின் இறுதி எழுத்தாகிய 'ம்' அதுபோல வருமொழியின் முதல் எழுத்து 'பெ' இதனை ப்+ எ என்று பிரிக்கலாம். 'ம்' 'ப்' இணைதலே புணர்ச்சி. இவை நான்கு வகைகளில் வரலாம். நிலைமொழி இறுதி           வருமொழிஇறுதி           1. மெய்                   +                  உயிர்        ------- பூமகள் + ஊர்வலம்                                                                         ...

உயிரீற்றுப் புணர்ச்சி 02. 01.2015

இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும் விதவாதன மன்னே ( நன்னூல் - 165) இந்நூற்பாக்கவை அடுத்து வரும் நூற்பாக்களில் பல இடங்களில் நிலைமொழி முன்னர் ஒற்றுமிகும் என்றும், சில இடங்களில் ஒற்றுமிகாது என்றும் விரிவாகக் கூறப்பெற்றுள்ளன. அவ்வாறு, குறிப்பிட்டுக் கூறப்பெறாத சொற்களில் இயல்பு  ஈறாகவும், விதி ஈறாகவும் நிற்கின்ற உயிரீற்றுச் சொற்களின் முன் பெரும்பாலும் ஒருமொழிக்கு ஏற்ற வல்லொற்று அல்லது மெல்லொற்று மிகும்.   அல்வழியில் எழுவாய்த் தொடரில் ஒற்றுமிகும் இடங்கள் அகர ஈறு -      விள க் குறிது ஆகார ஈறு -   புறா ப் பறந்தது இகர ஈற்று முன் ஒற்று மிகாது ( கிளி பறந்தது) ஈகார ஈறு -     தீ ப் பிடித்தது உகர ஈறு -      கடு ப் பெரிது. கடு - ஒருவகை மரம் ஊகார ஈறு -   கொண்மூ க் கடிது - கொண்மூ - மேகம் ஏகார ஈறு -     சே ப் பெரியது சே - ஒருவகை மரம் ஐகார ஈற்றின் முன்னும் ஒற்று மிகாது ( யானை பெரிது) ஓகார ஈறு -     ஓ ப் பெரியது ஓ - மதகுநீர் தாங்கும் பலகை ஔகார ஈறு - கௌவு க் கடிது வேற்றுமைத் தொகையில் ஒற்று...

தமிழ்க் குன்றம் - தமிழ் இலக்கண நூல்

ஒற்றுப்பிழைகள் ஏற்படாமல் தமிழ் மொழியைக் கையாளுவதற்குப் பேராசிரியர் பி.விருத்தாசலனார் தமிழ்க் குன்றம் என்னும் நூலை உருவாக்கியுள்ளார்கள். அந்நூலில் கூறப்பட்டுள்ள நூற்பாக்களோடு விளக்கங்களையும் தொடர்ந்து  எழுதலாம் என்று எண்ணுகிறேன். வேற்றுமை அல்வழிப் புணர்ச்சிகள் வேற்றுமை ஐம்முதல் ஆறாம் ; அல்வழி தொழில்பண் புவமை உம்மை அன்மொழி எழுவாய் விளி  ஈரெச்சம் முற்று இடையுரி தழுவுதொட ரடுக்கென வீரேழே (நன்னூல் - 152) வேற்றுமைப் புணர்ச்சியாவது ஐ, ஆல், கு, இன், அது, கண் என்னும் வேற்றுமை உருபுகள் ஆறும் மறைந்தும், வெளிப்பட்டும் வரச் சொற்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்தும் புணர்ச்சியாம். 1. நிலம் கடந்தான் - இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ உருபு தொக்கது    நிலத்தைக் கடந்தான் என்பது விரி. 2. கல்லெரிந்தான் - மூன்றாம் வேற்றுமை உருபாகிய ஆல் உருபு தொக்கது      கல்லால் எறிந்தான் என்பது விரி 3. கொற்றன் மகன் - நான்காம் வேற்றுமை உருபாகிய கு உருபு தொக்கது     கொற்றனுக்கு மகன் என்பது விரி 4. மலைவீழருவி - ஐந்தாம் வேற்றுமை உருபாகிய இன் உருபு  தொக்கது ...

என் பெயர் சிவப்பு

  இயற்கையால் அது வரையும் நுண்ணோவியங்களினால் வசீகரிக்கப்பட்டு  மூழ்கிதிளைத்த நுண்மையர் அதனை தங்களின் கலைவழி வெளிப்படுத்த பெரிதும் முனைந்து,  இயற்கையை அதன் நிலையிலேயே / இலக்கிய படைப்பில் மரபு வழி காணப்படும் நுண்ணோவியங்களைப் தீட்டுவது என இரு நிலைகளில் வெளிப்படுத்துகின்றனர்.   என் பெயர் சிகப்பு (My Name is Red )  என்னும் நாவல் ஒவியம் குறித்து நுட்பமாக பேசுகிறது. ஒவியம் குறித்தான புரிதலுக்கான அனைத்து சாத்தியங்களையும் திறந்துவிடுகின்றது.

கனவு ஆசிரியர் என்னும் நூலிலிருந்து

படம்
 இன்று பொருளியல் தேவையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் கல்வி முறையில், மானுட விழுமியங்கள், அற மதிப்பீடுகள்  குறித்த இடம் தெரியவில்லை. இவற்றை கற்பிப்பதில் ஆசிரியரின் பங்கு பெரிது என்றாலும், இன்றை சூழல் உகந்ததாக உள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது.  க. துளசிதாசன் தொகுத்து பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள கனவு ஆசிரியர் என்னும் நூல் தமிழகப் படைப்பாளுமைகள் பலர் தங்களுக்கும் ஆசியருக்குமான உறவினைக் கூறுவதாக அமைந்துள்ளது. தன்னுடைய மகன் படித்துக் கொண்டிருந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கு ஆப்ரஹாம் லிங்கன் எழுதிய கடிதம்  எல்லா மனிதர்களும் நீதிமான்கள் அல்லர். அனைத்து மனிதர்களும் வாய்மையானவர்கள் அல்லர் என்பதை அவன் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்பதை நான் அறிவேன். ஆனால் அதே சமயம் ஒவ்வொரு அயோக்கியனுக்கும் ஒரு நாயகன் இருக்கிறான் என்பதையும் ஒவ்வொரு சுயநல அரசியல்வாதிக்கும் ஒரு தன்னலம் கருதாத தலைவர் இருக்கிறார் என்பதையும் அவனுக்குச் சொல்லிக்கொடுங்கள். ஒவ்வொரு எதிரிக்கும் ஒரு நண்பன் இருக்கிறான் என்பதையும் அவனுக்குச் சொல்லிக் கொடுங்கள். ஒவ்வொரு எதிரிக்கும் ஒரு நண்பன் இருக்கிறான் என்பத...
தமிழிலக்கியத் திறனாய்வு – வினாக்கள் 1.     இலக்கியத் திறனாய்வு என்னும் சொல்லை முதலில் பயன்படுத்தியவர் . அ . ச . ஞானசம்பந்தம் 2.     விமர்சனம் எம்மொழிச் சொல் வடமொழி 3.     ஆய்தல் என்பதன் பொருள் உள்ளதன் நுணுக்கம் 4.     இலக்கியத்திறனாய்வு இலக்கியத்தைக் கற்கிற திறனாய்விலும் தனித்துறையாக இயங்க வேண்டும் என்று கூறியவர் நார்த்த ரோப் ஃரை 5.     தீர்ப்பளிக்கும் திறனாய்வுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் டி . எஸ் . எலியட் 6.     மற்ற கலைகள் எல்லாம் உமையாக கிடக்கும் பொழுது திறனாய்வு ஒன்றுதான் வாய்திறந்து பேசுகிறது என்று கூறியவர் நார்த்த ரோப் ஃரை இலக்கியத் திறனாய்வாளர்களும் திறனாய்வு நூல்களும் 1.     க . பூரணச்சந்திரன்                                   - தமிழிலக்க...