பண்பாட்டு ஆவணக்காரர் சிஎம் முத்து
வெள்ளந்தியான சிரிப்புக்குச் சொந்தக்காரர் சிஎம் முத்து அவர்கள் . எங்க ஆயி என்று வாய் நிறைய அழைத்துக் கொண்டு அவர் பேசும் கதைகளைக் கேட்பது அலாதியானது . 2012 இல் தான் அவருடைய கதைகளை வாசிக்க தொடங்கினேன் முதலில் அவருடைய கறிசோறு நாவல் வாசித்தேன் .அந்த கதை கொடுத்த உணர்வு அவருடைய அனைத்து எழுத்துக்களையும் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது அதன் பிறகு அவருடைய ஐந்து பெண்களும் அக்ரஹாரத்தை வீடும் நெஞ்சின் நடுவே இவர்களும் ஜக்கா வண்டியும் அப்பா என்றொரு மனிதர் கதைகளையும் வாசித்தேன் . அவருடைய எழுத்துக்களை வாசித்த பின்பு அவரை காண வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது . அவரின் புத்தகங்களை வெளியிட்ட அனன்யா பதிப்பக உரிமையாளர் வியாகுலன் அவர்களிடம் சி எம் முத்து அவர்களின் தொடர்பு எண்ணைப் பெற்று அவருடன் உரையாடினேன் .அவரை நேரில் சந்தித்து உரையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தேன் . ஒரு நாள் அவருடைய ஊரான இடையிருப்புக்கு சென்றேன் . செல்லும் வழி நெடுக அவர் கதையில் விவரித்திருந்த நில வெளி விரிந்து கொண்டே இருந்தது .
வேளாண் குடியில் பிறந்து வேளாண் மக்களின் வாழ்வியலை பண்பாட்டை ஆவணமாக்கும் கலைஞர்.அஞ்சலக துறையில் பணியாற்றினாலும் அவருடைய எண்ணங்கள் எல்லாம் கதை சொல்வதும் எழுதுவதும் என்ற நிலையிலே மையம் கொண்டிருந்தது அவர் பத்து நாவல்களையும் 300க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதி உள்ளார் அவருடைய நாவல்கள் கதைகள் அத்தனையும் தான் சார்ந்த பகுதியை உள்ளடக்கியதாகவே இருக்கும் அவர் சாதியத்தை எழுதுகிறார் என்றாலும் சாதியத்தின் உள்ளே இருக்கக்கூடிய முரண்களை எழுதி செல்கிறார் அண்மையில் அவர் எழுதி வெளியிட்ட சோழகர் ஒரு வரலாற்று பண்பாட்டு ஆவண நூல் என்று கூறலாம்
இவர் தன்னுடைய கதைகளை ஒரு சிலை வடிப்பவன் செம்மைப்படுத்துவது போல மேலும் மேலும் அழகு படுத்தி பார்க்கின்றார் ஆகையினால் அவருடைய இவர்களும் ஜக்கா வண்டியும் என்ற புதினம் மேலும் விரிவு பெற்று தெளிவு பெற்று மேல் பதிப்பாக வெளிவந்துள்ளது அது போலவே அவருடைய ஐந்து பெண்களும் ஆக்ராஹரத்தில் வீடும் என்ற நாவலும் மேம்படுத்தி எழுதிக் கொண்டிருக்கிறார் இவருடைய எழுத்துக்கள் ஒரு எதார்த்த வகையான எழுத்துக்களாக இருக்கின்றன
அதை எழுதுவது குறித்து அவரிடம் உரையாடு கொண்டிருக்கும் பொழுது எப்படி இந்த கதைகளை எல்லாம் உருவாக்குகிறீர்கள் என்று கேட்டேன் எனக்கு ஒண்ணுமே தெரியாது நான் உட்கார்றேன் கலைத்தாய் என்னை ஆசீர்வதி இருக்கா அப்படியே என்னுடைய உள்ளத்தில் வந்து கொட்டுது அப்படின்னு சொல்லுவாங்க ஒரு கதை கருவா மனசுல நினைச்சுட்டேன் அது சுற்றி சுத்தியே என்னுடைய எண்ண அலைகள் மோதி கொண்டே இருக்கும் அவர் எழுதற இடங்கள் எல்லாம் காடு கர அப்படியான இடங்களாகத்தான் இருக்கு அவர் எங்கோ ஒரு சொகுசான இடத்தில் உட்கார்ந்து கொண்டு எழுதுறது இல்ல அவர் வீட்டுக்கு போய் இருந்தபோ அந்த காட்சியை என்னால பார்க்க முடிந்தது மிக மிக எளிமையான ஒரு வாழ்க்கை வாழக்கூடியவர் தான் சிஎம் முத்து அவருடைய கதைகளில் வரக்கூடிய கதாபாத்திரங்கள் எல்லாம் அவர்களுடைய மன அவஸ்தைகளை மிக நுட்பமாக பதிவு செய்கிறன அது மட்டும் அல்லாமல்ஒரு கதாபாத்திரத்தை சுற்றி நடக்கக்கூடிய நிகழ்வுகள் அதனுடைய சூழல்கள் அந்த சமகாலத்தில் நடக்கக்கூடிய வரலாற்று நிகழ்வுகள் அத்தனையும் இணைத்து அவருடைய கதைகளா அமைகின்றன .
கருத்துகள்