இடுகைகள்

நவம்பர், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பண்பாட்டு ஆவணக்காரர் சிஎம் முத்து

 வெள்ளந்தியான சிரிப்புக்குச் சொந்தக்காரர் சிஎம் முத்து அவர்கள் . எங்க ஆயி என்று வாய் நிறைய அழைத்துக் கொண்டு அவர் பேசும் கதைகளைக்  கேட்பது அலாதியானது . 2012 இல் தான் அவருடைய கதைகளை வாசிக்க தொடங்கினேன் முதலில் அவருடைய கறிசோறு நாவல் வாசித்தேன் .அந்த கதை கொடுத்த உணர்வு அவருடைய அனைத்து எழுத்துக்களையும் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது அதன் பிறகு அவருடைய ஐந்து பெண்களும் அக்ரஹாரத்தை வீடும் நெஞ்சின் நடுவே  இவர்களும் ஜக்கா வண்டியும் அப்பா என்றொரு மனிதர் கதைகளையும் வாசித்தேன் . அவருடைய எழுத்துக்களை வாசித்த பின்பு அவரை காண வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது . அவரின் புத்தகங்களை வெளியிட்ட அனன்யா பதிப்பக உரிமையாளர் வியாகுலன் அவர்களிடம் சி எம் முத்து அவர்களின் தொடர்பு எண்ணைப் பெற்று அவருடன் உரையாடினேன் .அவரை நேரில் சந்தித்து உரையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தேன் . ஒரு நாள் அவருடைய ஊரான இடையிருப்புக்கு சென்றேன் . செல்லும் வழி நெடுக அவர் கதையில் விவரித்திருந்த நில வெளி விரிந்து கொண்டே இருந்தது . வேளாண் குடியில் பிறந்து வேளாண் மக்களின் வாழ்வியலை பண்பாட்டை ஆவணமாக்கும் கலைஞர்.அஞ்சலக ...

பேராசிரியர் மா.இராமலிங்கம்

படம்
1982 ஆம் ஆண்டு புதிய உரைநடை என்னும் நூலூக்குச் சாகித்திய அகதெமி விருதும்1983 இல் விடுதலைக்கு முன் தமிழ் சிறுகதை என்னும் நூலூக்கு தமிழ் வளர்ச்சித்துறை பரிசும்,1992 இல் கவிதை படைப்புக்குப் பாவேந்தர் பாரதிதாசன் விருதும்,1988 இல் நல்லாசிரியர் விருதும்,நாவல் இலக்கியம் என்னும் நூலுக்கு விருதும்,2008 இல் நிச்சயத்தார்த்தம் என்னும் குஜராத்தி மொழிபெயர்ப்பு நூலிக்கு சாகித்திய அகதெமி விருதும் பெற்ற பெருமைக்குரியவர் பேராசிரியர் மா.இராமலிங்கம்.இவர் இலக்கிய உலகில் எழில் முதல்வன் என்னும் புனைப்பெயரில் பல படைப்புக்களைப் படைத்துள்ளார்.ஒய்வு பெற்ற பின்பும் ஒயாது உழைத்துக் கொண்டு இருப்பவர். பல்வேறு மொழிகளில் உள்ள நூல்களைத் தமிழில் மொழிப்பெயர்ப்புச் செய்து கொண்டுள்ளார்கள். நாகை மாவட்டம் திருத்துரைப்பூண்டி என்னும் தாலுக்காவில் உள்ள தகட்டூர் என்னும் ஊரில் 5-10-1939 ஆம் ஆண்டு திருமிகு வ.மாணிக்கம் திருமதி மா.இராமாமிருத அம்மையார் இணையருக்கு மகவாய் தோன்றினார்.உயர்நிலைக் கல்வி திருத்துறைப்பூண்டியிலும்,தமிழ் இளங்கலை கும்பகோணம் அரசு கல்லூரியிலும் பயின்று,முதுலை சென்னை மாநிலக்கல்லூரியில் பயின்று முதல் வகுப்பி...