இலக்கணம் 05.01.2015
மகர இறுதி வேற்றுமை யாயின் துவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே ( தொல்காப்பியம் - 31) வேற்றுமைப் புணரச்சியில் நிலைமொழிகளாக உள்ள மகர ஈற்றுச் சொற்கள் மகரம் கெட்டு வருமொழிக்கேற்ற வல்லவெழுத்து மிக்கு முடியும். எடுத்துக்காட்டு மரம் + கோடு = மரக்கோடு மரத்தினது கோடு என்று பொருள் பணம் + பெட்டி = பணப்பெட்டி சட்டம் + பேரவை = சட்டப்பேரவை பணம் + பயிர் = பணப்பயிர் குற்றம்+ பத்திரிகை = குற்றப்பத்திரிகை வட்டம் + பலகை = வட்டப்பலகை சதுரம் + பெட்டி