இடுகைகள்

ஜனவரி, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நட்பு................

நட்பு என்பதற்கு அன்பு,ஒத்த கருத்து,நலன்,அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் உறவினர் அல்லாதவருடன் கொள்ளும் உறவு என க்ரியாவின் தற்காலத் தமிழ் அகாரதியும், நட்பு,தோழமை என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும்.வயது,மொழி,இனம்,நாடு என எந்த எல்லைகளும் இன்றி,புரிந்து கொள்ளுதலையும்,அனுசரித்தலையிம் அடிப்படையாகக் கொண்டது நட்பு.நண்பர்கள் ஒருவருக்கொருவர் அனுசரித்துத் தங்களின் தனிப்பட்டு விருப்பு வெறுப்புக்களை மறந்து கொள்ளவார்கள்.நண்பர்கள் ஒருவருக்கொருவர் உண்மையாக நடந்து,இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவார்கள் என விக்கீப்பீடியாவும் பொருள் கூறுகின்றன. க்ரியா உறவினர் அல்லாத ஏற்படும் உறவு நட்பு எனக் கூறுகின்றது. விக்கிபீடியாவோ பொதுவாக இருவரிடம் தோன்றும் உறவு என்று கூறுகின்றது. நட்பினை ஆணுக்கும் ஆணுக்கும் ஏற்படும் நட்பு பெண்ணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் நட்பு ,பெண்ணுக்கும் ஆணுக்கும் ஏற்படும் நட்பு என்று வகைப்படுத்துகின்றனர்.சங்க இலக்கியத்தில் பார்க்கும் போது ‘பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே’ என்னும் அடி ஆண்பெண் நட்பைக் கூறுவதைக் காணலாம்.இங்கு காதலை ந...

பிள்ளையார் சுழி........

நாம் எழுதத் தொடங்குவதற்கு முன் 'உ' என்னும் எழுத்தை எழுதுவதை வழக்கமாக்க கொண்டுள்ளோம்.இதனை பிள்ளையார் சுழி என்றும்,அது பிள்ளையார் வழிபாட்டின் முதல் சின்னம் என்றும் கூறி அதற்குப் பல்வேறு புராணகதைகளும் கூறப்பெற்றுள்ளன. பொதுவாக பழங்காலத்தில் தமிழர்கள் ஓலைச்சுவடியில் எழுத்தாணி கொண்டு எழுதி வந்தனர். பனை ஓலைகள் எழுதுகின்ற பக்குவத்தில் இருக்கின்றதா? என்பதைக் கண்டறிய ஏட்டை எழுத்தாணி முனையால் தீண்டிப் பார்பதுண்டு.இங்ஙனம் தீண்டிப்பார்க்கின்ற குறிக்குத் தீண்டற் குறியென்று பெயர்.இந்த தீண்டற்குறியைத்தான் பின்னாட்களில் பிள்ளையார் சுழி என்று கூறும் மரபாக வந்தது. இவ்வாறு பிள்ளையார் வழிபாடு தமிழகத்துக்கு வருவதற்கு முன்பே ஏடுதீண்டும் வழக்கம் இருந்துள்ளது என்தென்பது ஆறிஞர்கள் ஆய்ந்து கண்ட உண்மையாகும்.மேலும்,புள்ளியில்லாச் சுழி என்பது வெறும் சுழியத்தைக் குறிக்கும்.ஓலைச்சுவடியில் எழுதும் போது புள்ளி வைப்பதில்லை.புள்ளி வைத்தால் ஏடு பொத்து கிழிந்துவிடும்.ஆகவே புள்ளியில்லாமல் வட்டமாக சுழியம் போடுவர்.புள்ளியில்லாச் சுழி என்னும் இச்சொல் வழக்கே பிள்ளையார் சுழியென மருவியிருக்க வேண்டும் என்பது தமிழறிஞர்களின்...

அறக்கட்டளைச் சொற்பொழிவு

படம்
ந.மு.வேங்கடசாமி நாட்டாரின் பெயிரில் உள்ள அறக்கட்டளைச் சார்பில் இன்று சொற்பொழிவு நடைபெற்றது. பேராசிரியர் மா.அறிவு நம்பி அவர்கள் நாட்டாரின் கட்டுரைத் திறன் என்னும் தலைப்பிலும் பதினெண் கீழ்கணக்கும் நாட்டாரும் என்னும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார். முதல் அமர்விற்கு துறைத்தலைவர் பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் தலைமையேற்றார். நாட்டாரின் இயற்பெயர் சிவப்பிரகாசம் என்னபதாகும்.இவருக்கு முன் பிறந்த இருவர் மரணம் எய்த,இக்குழந்தையைக் காப்பாற்ற வேண்டி திருவேங்கடப் பெருமானை வேண்டிக்கொண்டு பெயரை மாற்றி வேங்கடப் பெருமானின் நினைவாக வேங்கடசாமி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர்.என்று துவங்கினார். நாட்டாரின் கட்டுரையினை ஆய்து,கட்டுரை என்பதற்கு நாட்டார் கூறும் விளக்கம், சொற்களைப் பெய்துஉரைக்கும் திறன்,சொல்லவந்த கருத்தினை வலியுறுத்த அடுக்கி கூறும் உத்தி,அவர் எடுத்தாண்ட நூல்களை வகைபாடு செய்யும் முறை,எந்த நூலைப்பற்றி குறிப்பிட்டாலும் அந்நூலினை அடைகொடுத்து சிறப்பித்துக் கூறும் தன்மை,வினா விடையாக எழுதிச்செல்லும் பாங்கு,இசையில் அவருக்கிருந்த நுட்பமாக அறிவு போன்றவற்றை எடுத்துரைத்தார். இரண்டாம் அமர்விற்கு பேராச...

புத்தகக் கண்காட்சி 2010..

படம்
சென்ற ஞாயிற்றுக் கிழமை புத்தக்கண்காட்சி சென்று வந்தேன் .ஞாயிறு என்றதால் கூட்டம் அதிகமாக இருந்தது.அன்று மாலை கமல் வந்ததால் கூட்டம் வெளியில் சென்று விட்டது.உள்ளே சுமாரான கூட்டம்.சென்ற ஆண்டு 15000 ரூபாய்க்கு நூல்கள் வாங்கினேன் .இந்த ஆண்டு 3000 ரூபாய்க்குத் தான் நூல்கள் வாங்கினேன்.குடும்பத்துடன் வந்து மக்கள் நூல்களை வாங்கிய காட்சி மகிழ்ச்சியாக இருந்தது. விடியல்,அடையாளம்,தமிழ்மண,மெய்யப்பன்,பாரி,காவ்யா,அன்னம்,நர்மதா,காலச்சுவடு, உயிர்மை பதிப்பகங்களில் மட்டுமே நூல்கள் வாங்கினேன்.

தினமணியில்....

வலையுலகப் படைப்பாளிகள்! எம். மணிகண்டன்First Published : 01 Jan 2010 12:12:00 AM IST எழுத்துலகில் இது தலைமுறை மாற்றத்துக்கான தருணம். பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்பிவிட்டு, அது பிரசுமாகும் நாளுக்காகக் காத்திருக்கும் தலைமுறையின் காலம் கடந்துபோய்க் கொண்டிருக்கிறது. பெரிய பத்திரிகையில் படைப்புகள் பிரசுரமாகின்றன என்பது படைப்பாளிக்குப் பெருமைதான். ஆனால், அது நடக்காவிட்டால், அந்தப் படைப்புகள் குப்பைக் கூடைக்குத்தான் போக வேண்டும் என்று இன்றையத் தலைமுறை எண்ணிக் கொண்டிருக்கவில்லை. இந்தக்கால இளைஞர்கள் எதை வேண்டுமானாலும் எழுதுகிறார்கள், சொல்ல வந்ததைத் தைரியமாகச் சொல்கிறார்கள், பிறரிடம் கருத்துக் கேட்கிறார்கள், விரிவான வாசகர் வட்டத்தையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். கட்டற்ற விடுதலை உணர்வு அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது. இவற்றையெல்லாம் சாத்தியமாக்க அவர்களுக்கு உதவியிருப்பது இணையம். உலகளாவிய வலை, மின்னஞ்சல் போன்ற நிலைகளைத் தாண்டி வேறொரு பரந்த வெளியில் இணையம் பயணிக்கத் தொடங்கி சில ஆண்டுகளாகிவிட்டன. இந்தத் தலைமுறையினர் ஃபேஸ்புக்கையும், ட்விட்டரையும் தெரியாதவர்களைப் படிப்பறிவில்லாதவர்கள் என சீண்டுகிற...

கனவு மெய்ப்பட வேண்டும்....

நம்முடைய தமிழ்ப்புத்தாண்டு தை 1 என்றாலும் உலத்தாரால் பெருபான்மை (ஜனவரி 1)புத்தாண்டாகக் கொண்டாப்படுவதால் ,நாமும் கொண்டாடுகின்றோம். (அப்படி தானே) சென்ற ஆண்டு பல கனவுகளைச் சுமந்து கொண்டு,அதனை நோக்கியே சில நகர்வுகள் இருந்து இருக்கும் .அதனை விட்டு பிறழ்ந்தும் இருப்போம். இந்த ஆண்டுகள் இதனை எல்லாம் செய்ய வேண்டுமெனப் பல திட்டங்களை எல்லாம் வகுத்துக்கொண்டு ,கனவுகளைக் கண்டு கொண்டு, இருப்போம்.வழக்கம் போல் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஆகா! இதனை எல்லாம் நினைத்தோம் முடியவில்லையே என்று வருத்தப்படுவோம்! சிலர் தாங்கள் எண்ணிய செயல்களை எல்லாம் எண்ணியபடி முடித்து நிறைவு கொள்ளுவார்கள்.அவர்களால் மட்டும் எப்படி முடிகின்றது ! பல அறிஞருகள் இதனைப் பற்றியெல்லாம் கூறியிருக்கின்றார்கள்(புத்தாண்டின் தொடக்கத்திலேயே இப்படி எல்லாமா? என்று வினவுவது காதில் விழுகின்றது சரி சரி பல அறிஞர்கள் கருத்துக்களை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்,அதனைப் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள்) உங்கள் அனைவரின் கனவுகளும் மெய்ப்பட வாழ்த்துக்கள்.