இடுகைகள்

ஏப்ரல், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
ஏப்ரல் -29 என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள்.இவ்வுலகிற்கு நான் வர காரணமாயிருந்த எந்தை எங்களை எல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு சென்ற தினம் . எந்தையின் இழப்பு யாராலும் ஈடுசெய்ய முடியாது. ஒவ்வொரு நொடியும் எங்களுக்காக வாழ்ந்தவர். எங்களுடைய நலனே அவருடைய நலனாகப் போற்றியவர்.நாங்கள் கிராமத்தில் பிறந்திருந்தாலும்,ஒரு முற்போக்கு சிந்தனையுடன் எங்களை வளர்த்தார்.ஆண் பெண் குழந்தைகள் என்ற பேதம் இல்லாமல்,குழந்தைகள் மூவரையும் முக்கண்ணாக வளர்த்து சான்றோர் ஆக்கினார். உணர்வுகளை மதிக்க கூடியவர் . யாரையும் புண்படுத்த தெரியாத பண்பட்ட மனிதர் . பழைமையில் வாழ்ந்த கிராமத்திற்கு ஒரு புதிய வெளிச்சத்தைக் கொடுத்தவர்.இறை பற்று இல்லை என்றாலும், நீண்ட நாள்களாக கட்டப்படாமல் கிடந்த எங்களூர் கோவிலைக் கட்டவேண்டும் என்று முனைப்புடன் செயல் பட்டு கட்டிமுடித்தவர். பிறர் பசி கண்டு பொறுக்காதவர். எங்கள் வீட்டில் எப்பொழுதுமே ஒரு நான்கு பேர் சாப்பிட கூடிய அளவு உணவு இருந்து கொண்டே இருக்கும் . பசி என்று யார் வந்து கேட்டாலும் உடனே சாப்பிட சொல்லி விடுவார்.ஏழை செல்வந்தர் என்ற எந்த பாகுபாடும் அவரிடம் இருக்காது.அனைவரையும் ஒன்ற...

கோயம்புத்தூர் பயணம்

படம்
ஏப்ரல் 20 அன்று அலைபேசில் பேராசிரியர் மது.சா விமலானந்தம் ஐயா அவர்களுடன் உராயாடிக்கொண்டிருந்தேன் அப்பொழுது,அவர்கள் கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் பன்னிரு திருமுறை ஆய்வு மையம் 25,26-4-200 (சனி,ஞாயிறு) இரண்டு நாள் கந்தவேள் மாக்கதை வழிபாட்டுக் கருத்தரங்கம் நடைபெறுகின்றது,அதில் கலந்து கொள்வது நல்லது,பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்கள்.கூறியதோடு மட்டும் அல்லாமல் ,அப்பல்கலைகழகத் தொலைப்பேசி எண்ணைக்கொடுத்து ,அவர்களிடம் கருத்தரங்கில் கலந்து கொள்ள அழைப்பிதழ் அனுப்ப சொல்லவும் என்றார்கள்,அதன்படி அன்று காலையே அவர்களுடன் உரையாடி செய்தியினைக் கூறினேன்.அவர்களும் மகிழ்ந்து கருத்தரங்க அழைப்பிதழ் அனுப்பி வைப்பதாக்க அறிவித்தார்கள். இரண்டு நாள் செல்லலாம் எனத் திட்டமிட்டு,அடுத்தநாள் காலையில் இரயில்வே நிலையம் சென்று, கோவை செல்லக்கூடிய இரயில்லுக்கு முன்பதிவுமுன் பதிவு செய்து கொடுத்தார் என் துணைவர். இச் செய்தியினைப் பேராசிரியர் மது.சா வி அவர்களிடம் தெரிவித்தேன் அவர்கள் மகிழ்ந்தார்கள். திட்டமிட்டப்படி 24 -4-2009 அன்று காலை 12 மணிக்கு நானும் என் கணவரும் சிதம்பரத்திலிருந்து மாயவரம் மகிழ்வுந்தில் கிளம்பினோம்.1....

திருக்குறள் முதல் உரையாசிரியர்

காலந்தோறும் கற்போருக்குப் புதுப்பொருளைக் காட்டி,வாழ்வின் உயர்வுக்குத் வழிகாட்டியாய் விளங்கும் அறநெறி நூல் திருக்குறளாகும்.குறளின் பொருள் சுவை உண்கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பது. அதனால்தான் இதனைக் கற்போரெல்லாம் உரையெழுதவேண்டுமென எண்ணம் கொள்கின்றனர். பிற்காலத்தில் பல உரைகள் தோன்றுகொண்டு இருக்கின்றன. அவ் உரைகள் எல்லாம் பெரும்பாலும் பழைய உரைகளைத் தழுவியே அமைந்துள்ளது எனலாம். சில குறள்களுக்கு மட்டுமே வேறுபட்ட உரைகளைக் காணமுடிகின்றது. பழைய உரையாசிரியர்கள் அல்லது மரபுரையாசிரியர்கள் என்போர் பதின்மர்.அவர்களுள், இன்று நமக்கு ஐவர் உரைகளே கிடைத்துள . இவ் ஐவர் உரைகளுள் காலத்தால் முற்பட்ட உரை மணக்குடவர் உரையாகும்.ஆனாலும் இவர் உரையினை நோக்குழி,,இவருக்கு முன் உரைகள் இருந்துள்ளதைக் காணலாம். மணக்குடவர் உரையில் தடிந்தெழுலி தானல்கா தாகிவிடின் (17) என்னும் குறளுக்கு உரை கூறுகையில் ‘தடிந்து’ என்பதற்கு ‘கூறுபடுத்து’ என்று உரைப்பாரும் உளர் என்றும்,’செவிகைப்ப சொற்பொறுக்கும்’ என்பதற்குப் ‘புரோகிதர் தன்னிடத்துச்சொல்லுஞ் சொற்களைப் பொறுக்க வல்லென்பாரும் உளர்’என்றும் காணப்படுதலால்,இவருக்கு மு...

தமிழறிஞர்களுக்குப் பாராட்டு விழா

படம்
அண்மையில் தஞ்சாவூர் உலகத் திருக்குறள் பேரவை சார்பாக, செந்தமிழ் காவலர் பட்டம் பெற்ற தமிழறிஞர்களுக்குப் பாரட்டு விழா நடத்தினர். இவ்விழாவில் தஞ்சைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். இவ்விழாவில் தமிழறிஞர்கள் முதுமுனைவர் இரா.இளங்குமரனனார், பேராசிரியர் பி.விருதாச்சலம்,குன்றக்குடி ஆதினம் பொன்னம்பலடிகள் ஆகியோருக்குப் பாராட்டு வழங்கியதோடு மட்டுமல்லாமல், அறிஞர்கள் ஒவ்வொருவரும் ஒரு தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தவும் ஏற்பாடு செய்திருந்தனர். முதலில் பேராசிரியர் பி.விருதாச்சலம் ஐயா அவர்கள்,சிலம்பு தொடர்பான பொழிவினை நிகழ்தினார்கள்.முதுமுனைவர் இளங்குமரன் ,பொன்னம்பல அடிகள் இருவரும் திருக்குறள் தொடர்பான பொழிவினை நிகழ்த்தினார்கள். இவ்விழா மிக பயனுள்ளதாக இருந்தது. நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு மாணவர்கள் மாணவிகளுடை கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

திருக்குறள்

உலகம் அற இலக்கியங்களுள் சிறந்ததும், உலக பொதுமை கருத்துக்களைத் தாங்கியுள்ளதுமான நம் தமிழ் நூல்,அறநூல் திருக்குறள்.இக்குறள்கள் அனைத்தும் மணற் கிளைக்க நீருறுவது போல, குழந்தைகள் உண சுரக்கும் தாய்பால் போல கற்கும் தோறும் புதுப்பொருளை விரித்துச் செல்கிறன. அதனால் அதனைக் கற்பார் பலர். சிலர் அதற்கு உரை வரைந்துள்ளனர்.அவர்களுள் பழைய உராயாளர்கள் என்று கூறப்படுவோர் பதின்மர்.அவர்களுள் இன்று நமக்கு ஐவர் உரைகளே கிடைத்துள. மணக்குடவர் , காளிங்கர்,பரிப்பெருமாள்,பரிதியார்,பரிமேலழகர் என்போர் ஆவர் . இவ் ஐவர் உரைகளுள் காலத்தால் முற்பட்டவர் மணக்குடவர், இதனை அவர் உரையின் மூலமாகவே நாம் அறிந்து கொள்ளலாம்.

பழமொழி

கீழேயுள்ள பழமொழி அனைத்துக்கும் ஒரே பொருள். சினத்துடன் இருக்கும் ஒருவனிடம் மேலும் சினத்தை ஊதி பெரிதாக்குவது என்பதே. இப்படிதான் சிலர் இடம், பொருள், தெரியாமல் நடந்து கொள்கிறார்கள். 1 . எரிகிற இடத்துல சுக்கை வைத்து ஊதினாற் போல. 2 . எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற் போல் . 3 . எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்லக் கொள்ளி ? 4 . எரிகிற கொள்ளியில எந்த கொள்ளி நல்லது ? 5 . எரிகிற கொள்ளியை ஏற தள்ளினது போல். 6 . எரிகிறது நெஞ்சு சிரிக்கிறது வாய் . 7 . எரிகிறதை இழுத்தால் கொதிக்கிறது அடங்கும் . 8 . எரிகிற நெருப்புல எண்ணெய விடலாமா ? 9 . எரிகிற நெருப்புக்குப் பயந்து எண்ணெய்க் கொப்பரையில் விழுந்த மாதிரி . 10 . எரிகிற நெருப்பை எண்ணெய் விட்டு அடக்கலாமா ? 11 . எரிகிற புண்ணில் எண்ணெய் விட்டது போல . 12 . எரிகிற புண்ணில் புளி இட்டது போல. 13 . எரிகிற விளக்கானாலும் தூண்டிகோல் ஒன்று வேண்டும். 14 . எரிகிற விளக்கில் எத்தனை ஏற்றினாலுத் குறையுமோ ? 15 . எரிகிற வீட்டில் சுருட்டுக்கு எண்ணெய் கேட்டான். 16 . எரிகிற வீட்டில் பிடுங்குறது ஆதாயம் . 17 . எரிகிற வீட்டை அவிக்கக் கிணறு வெட்டநாள் பார்த்தது போல. 18 . எரிக்கு...

அண்மையில் படித்த கதை

அண்மையில் ஒரு கதை படித்தேன்.ஒரு அழகிய பண்ணை வீடு.அவ் வீட்டில் கணவன்,மனைவி இருவர் மட்டும் வசித்தனர். அங்கு எலி தொல்லை இருந்த்தால் ,அவ்வீட்டுகாரர் எலிபொறி கட்டை ஒன்றை வைத்து எலிகளைப் பிடிக்கலாம் என எண்ணி எலிப்பொறி கட்டை ஒன்றை வைத்தனர் .அதை பார்த்த ஒரு பெருச்சாளி ஐய்ய... யோ நாம மாட்டிக்கப் போறமுனு நினைத்து,அழுதது. சரி நமக்கு ஏற்பட்ட நிலையை நண்பர்களிடம் சொல்லாம் என எண்ணி முதலில் பண்ணையில் இருந்த கோழியிடம் சென்று கூறியது,உடனே கோழி எலிப்பொறி கட்டையால் எனக்கு ஒன்றும் ஆபத்து இல்லை அதனால்,உனக்கு ஆபத்து என்றால் நீயே பார்த்துக் கொள் என்றது.பெருச்சாளிக்கு மிகுந்த வருத்தமாக போய்விட்டது. சரி அடுத்து அங்குள்ள நம் நண்பன் ஆட்டிடம் முறையிடலாம் எனச் சென்று ஆட்டிடம் சென்று ஓ என அழுதது,ஆடு கேட்டது எதற்காக இப்படி ஒப்பாரி வைக்கறாய்,உனக்கு என்ன ஆகிவிட்டது .பெருச்சாளி உடனே எனக்கு ஆபத்து வந்துவிட்டது. என்னை பிடிக்க பண்ணை வீட்டில் எலி பொறி கட்டை வைத்துள்ளனர்.நான் பிடிபட்டுவிடுவேன்.என்க்கு பயமாக உள்ளது எனக் கூறியது . உடனே ஆடு கோழி சொன்ன பதிலையே தந்தது. ஐயோ நமக்கு யாரும் உதவமாட்டார்களா என எண்ணி,அடுத்து நம் நண்பன...

கருத்தரங்க அறிவுப்பு மடல்

படம்

அழகு

படம்
காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்! கடற்பரப்பில்,ஒளிப்புனலில் கண்டேன்!அந்தச் சோலையிலே,மலர்களிலே,தளிர்கள் தம்மில் தொட்ட இடம் எலாம்கண்ணில் தட்டுப் பட்டாள்! மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள்!ஆலஞ் சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந் தனில்அந்த அழகென்பாள் கவிதைத் தந்தாள் சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள் திருவிளக்கில் சிரிக்கின்றாள் ;நாரெ டுத்து நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வ ளைவில் நாடகத்தைச் செய்கின்றாள் ;அடடே செந்தோள் புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும் புதுநடையில் பூரித்தாள் ; விளைந்த நன்செய் நிறத்தினிலே என்விழியை நிறுத்தினாள் ; என் நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள் ; திசைகண்டேன் வான்கண்டேன் உட்புறத்துச் செறிந்தனவாம் பலப்பலவும் கண்டேன்,யாண்டும் அசைவனவும் நின்றனவும் கண்டேன்,மற்றும் அழகுதனைக் கண்டேன் நல்லின்பங் கண்டேன் பசையுள்ள பொருளிளெல்லாம் பசையவள் காண்! பழமையினால் சாகாத இளையவள் காண் ! நசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள் ! நல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை.-------- பாவேந்தர்

திருக்குறள் வகுப்பு

படம்
தஞ்சாவூர் உலகத் திருக்குறள் சார்பாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ,தஞ்சை பழைய பேருந்துநிலையம் அருகில் உள்ள வீரராகவா உயர்நிலைப் பள்ளியில் திருக்குறள் வகுப்பு நடைப்பெற்று வருகின்றது. பல்வேறு தமிழறிஞர்கள் இவ் வகுப்புகளில் கலந்துகொள்கிறார்கள். பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிமணியம் அவர்கள் மக்களிடம் திருக்குறளைக் கொண்டு சேர்க்கும் நோக்கில் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பாடம் நடத்துகின்றார்கள்.இவர் பல்வேறு திருக்குறள் உரைகளை ஒப்பிட்டு , சிறந்த உரை,அக்குறளுக்குப் பொருத்தமாக அமைந்த உரைகளைக் கூறி, குறளுக்குப் பொருத்தமான நடைமுறை வாழ்வியல் செய்திகளையும் கூறுகின்றார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இவ்வகுப்பு கடந்த ஞாயிறு 12.4.2009 அன்று 100 அதிகாரத்தைத் தொட்டது.அதனால் இதனை ஒரு சிறு விழாவாக அமைத்திருந்தார்கள்.அவ்விழாவில் பண்புடைமை அதிகாரத்திலிருந்து ஐந்து குறட்பாக்களைப் பேராசிரியர் கு.வெ.பா.நடத்தினார்கள்.ந.மு.வேங்கடசாமி தாளாளர் பேராசிரியர் பி.விருதாச்சலம் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

இராவுசாப்பட்டிபேராசிரியர் இரா.கலியபெருமாள்

படம்
தூய வெள்ளாடை,அமைதி தவழும் முகம்,கனிவான பேச்சு, அகத்தில் அறிவு முதிர்ச்சி,புறத்தில் இளமை,தமிழைத் தவிர வேறு நினையாத மனம்,அவரிடம் பயிலும் பயின்ற மாணவர்கள் மட்டுமல்ல யாவரும் விரும்பும் தமிழ்பேரறிஞராய் ந.மு.வேங்கடசாமி கல்லூரியில் வலம் வந்து கொண்டிருப்பவர்தான் பேராசிரியர் இரா.கலியமூர்த்தி. கடந்த மூன்றாண்டுகளாக அவர்களுடன் பழகும் வாய்ப்பினைப் பெற்றேன்.ஓர் ஆசிரியர் என்பவர் எப்படி இருக்கவேண்டுமென இவர்களைப் பார்த்தப் பிறகு தெளிந்தேன். மாணவர்களிடம் இவர் காட்டும் அக்கறை சொல்ல வார்த்தைகள் இல்லை.இவரிடம் மாணவர்கள் பழகும் முறையே அதற்குச் சான்றாகும். இவரிடம் பேசிக்கொண்டிருந்தால் பல இலக்கியங்களைக் கற்ற மகிழ்ச்சித் தோன்றும். சங்க இலக்கியம்,பக்தி இலக்கியம், இக்கால இலக்கியம்,திரைப்படப் பாடல்கள் அனைத்திலும் ஆழ்ந்த தோய்வின் காரணமாக ஒரு செய்திக்கு அது தொடர்பான இலக்கியம் முதல் திரைப்படப்பாடல் வரை எடுத்துக்காட்டுவார்கள். இவருடைய தமிழ் ஈடுபாட்டின் காரணமாக தமிழ்ப்பேராசான் ,ஔவை,வாண்டையார் விருது,மாமன்னன் இராசராசன் விருது, குறள் செம்மல், போன்ற விருதுகளைப் பல்வேறு நிறுவனங்கள் வழங்கி சிறப்பித்துள்ளது.ஐந்தாம் ஐந்தாம் ...

அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடுகள்

படம்

அண்ணாமலைப் பல்கலைக்கழப் பதிப்பக வெளியீடுகள்

பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகத் திகழக்கூடியது அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.தமிழையும் தமிழிசையையும் இரு கண்களாகக் கொண்டு 1922 ஆம் ஆண்டு ஜீன் 24 –இல் சிதம்பரத்தில் மீனாட்சி கல்லூரி என்னும் பெயரில் அறத்தந்தை அண்ணாமலை அரசர் அவர்களால் தொடங்கப் பெற்றது. அண்ணாமலப் பல்கலைக்கழகமாக 1929 ஆம் ஆண்டு விரிந்து உலகெங்கும் கல்வி மணத்தைக் கமழச் செய்கின்றது. இதே ஆண்டிலிருந்து அண்ணாமலைப் பல்கலைக்கழம் பதிப்பகம் நிறுவி, பொருளை மட்டும் நோக்கமாகக் கொள்ளலாமல், அறிவு செல்வம் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென விரும்பி நூல்களை அச்சிட்டு குறைந்த விலையில் வழங்கிவருகின்றனர். இப்பதிப்பகத்தின் வழி பல்வேறு துறைசார்ந்த 625 நூல்கள் வெளிவந்துள்ளன. அதனோடு பல்வேறு ஆய்வு சார்ந்த இதழ்களும்,கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.இவ்வளவு நூல்களையும் தொகுக்க முடியாத காரணத்தால்,இக் கட்டுரையில் தமிழியல் துறைசார்ந்து வெளிவந்துள்ள நூல்கள் மட்டும் தொகுத்துத் தரப்பெற்றுள்ளன. பல்கலைக்கழக வெளியீடுகள் தமிழுக்காக தொடங்கப்பெற்ற அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் தமிழ் சார்ந்த பல ஆய்வு நூல்கள், இந் நிறுவன பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்து...

தஞ்சையிலிருந்து சிதம்பரம் வரை

இன்று காலை மறக்கமுடியாத நாள். கடந்த பத்து நாள்களாக எங்கள் கல்லூரி காலவரையறை யற்ற விடுமுறை அறிவித்திருந்து.அதனால் என் சொந்த மண் தஞ்சைக்குச் சென்றிருந்தேன். கல்லூரி திங்கள் அதாவது இன்று திறப்பதாக அறிவித்து இருந்த செய்தி அறிந்து,நண்பர் ஒருவரிடம் இன்று விடுப்பு எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டேன் . எடுக்கலாம் என்றார். எங்களூரில் எங்கள் அப்பா 25 ஆண்டுகளுக்கு முன் கட்டிய உத்திராபதியார் கோவில் கும்பாபிஷேகம் அதனால் விடுப்பு எடுக்கலாம் என்று இருந்தேன்.அதோடு மட்டுமல்ல நான் புகுந்த ஊரிலும் மாலையில் 40 ஆண்டுகள் கழித்து திரௌபதி அம்மனுக்கு தீமிதி திருவிழா இரண்டிலும் கலந்துகொள்ளவேண்டுமென எண்ணி விடுப்பு எடுக்கலாம் என்று இருந்தேன். இன்று காலை தங்கை வீட்டிலிருந்து அவள் குழந்தைகள் அனைவரும் அம்மா வீட்டிற்குச் சென்று கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு பிறகு வயலூர் வரலாம் என்று திட்டமிட்டிருந்தோம்.சரி கல்லூரிக்கு விடுப்பு சொல்லலாம் என சுமார் 7.30 மணிக்கு எங்கள் துறை அலுவலக ஊழியரைத் தொடர்பு கொண்டேன். அவர் கண்டிப்பாக கல்லூரி வரவேண்டும் பத்து நாள்கள் தொடர்ந்து விடுமுறைவிட்டதால் விடுப்பு எடுக்க கூடாது என்று கூறிவிட்...

கணினி மற்றும் இணையத்தமிழ் ஆய்வுக்கட்டுரை தலைப்புகள்

கணினி மற்றும் இணையத்தமிழ் (ஆய்வுக்கட்டுரைகள்) தமிழ்த்துறை பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி பெரம்பலூர்-621212 1. முனைவர் தி. நெடுஞ்செழியன் ஒருங்குறியீடு உள்ளீட்டில் என.எச்.எம்.எழுதி மென்பொருள்-ஒரு பார்வை 2. முனைவர் ப.டேவிட் பிரபாகர் தமிழ்த்தரவின் தன்மைகளும் கணினியின் ஏற்புத்திறனும் 3. முனைவர் முகிலை இராசபாண்டியன் இணையநூலகத்தில் தேடுபொறியின் பயன்பாடு 4. முனைவர் சே.கல்பனா தமிழில் வலைப்பக்கம் உருவாக்கம் 5. முனைவர் நா.ஜானகிராமன் கணினியில் தமிழ் –ஒரு வரலாற்று நோக்கு 6. ஆ.ஞானமணி கணினிவழி கற்றல் கற்பித்தலின் அடிப்படை 7. முனைவர் இரா.குணசீலன் இணையத் தமிழ் வளர்ச்சியல் ஒருங்குறி 8. இரா.வைதேகி தமிழ்மொழி விசைப் பலகை மற்றும் எழுத்துப் பயன்பாடு 9. முனைவர் ந. அறிவுராஜ் இணையத் தமிழ் கற்றலும் கற்பித்தலும் 10. முனைவர் எல்.கே.அக்னிபுத்திரன் செயல்முறைப்படுத்தும் மொழிகள் 11. திருமதி லெ.விமலாதேவி இணையத் தமிழ் 12. ந.ஞானமணி தமிழ் மின்னிதழ்கள் 13. ஜெ.ராஜசொர்ணம் தமிழ் எழுத்துரு மென்பொருள் 14. முனைவர் தே.சம்பத் இலக்கணம் கற்பித்தலில் கணினியின் பயன்பாடு 15. நா.பரமசிவம் திண்ணை மின்னிதழ் கூறும் இலக்கியச் செய்த...

சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள்

1. அஞ்சித்தை மகள் நாகையார் 2. அஞ்சில் அஞ்சியார் 3. ஆதிமந்தியார் 4. ஊண்பித்தை 5. கழார்கீரன் எயிற்றாயார் 6. குமிழிஞாழலார் நப்பசலையார் 7. குறமகள் குறியெயினி 8. நப்பசலையார் 9. நன்னாகையார் 10. நெடும்பல்லித்தை 11. போந்தைப்பசலையார் 12. வருமுலையாரித்தி 13. வெண்பூதியார் 14. வெள்ளிவீதியார் 15. காவற்பெண்டு 16. குறமகள் இளவெயினி 17. தாயங்கண்ணியார் 18. பாரிமகளிர் 19. பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு 20. பேய்மகள் இளவெயினி 21. மாற்பித்தியார் 22. வெண்கியத்தியார் 23. ஒக்கூர் மாசாத்தியார் 24. ஔவையார் 25. காக்கை பாடினியார் நச்செள்ளையார் 26. நக்கண்ணையார் 27. பூங்கணுத்திரையார் 28. மாறோக்கத்து நப்பசலையார் 29. வெறிபாடிய காமக் கண்ணியார்