கோயம்புத்தூர் பயணம்

ஏப்ரல் 20 அன்று அலைபேசில் பேராசிரியர் மது.சா விமலானந்தம் ஐயா அவர்களுடன் உராயாடிக்கொண்டிருந்தேன் அப்பொழுது,அவர்கள் கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் பன்னிரு திருமுறை ஆய்வு மையம் 25,26-4-200 (சனி,ஞாயிறு) இரண்டு நாள் கந்தவேள் மாக்கதை வழிபாட்டுக் கருத்தரங்கம் நடைபெறுகின்றது,அதில் கலந்து கொள்வது நல்லது,பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்கள்.கூறியதோடு மட்டும் அல்லாமல் ,அப்பல்கலைகழகத் தொலைப்பேசி எண்ணைக்கொடுத்து ,அவர்களிடம் கருத்தரங்கில் கலந்து கொள்ள அழைப்பிதழ் அனுப்ப சொல்லவும் என்றார்கள்,அதன்படி அன்று காலையே அவர்களுடன் உரையாடி செய்தியினைக் கூறினேன்.அவர்களும் மகிழ்ந்து கருத்தரங்க அழைப்பிதழ் அனுப்பி வைப்பதாக்க அறிவித்தார்கள்.
இரண்டு நாள் செல்லலாம் எனத் திட்டமிட்டு,அடுத்தநாள் காலையில் இரயில்வே நிலையம் சென்று, கோவை செல்லக்கூடிய இரயில்லுக்கு முன்பதிவுமுன் பதிவு செய்து கொடுத்தார் என் துணைவர். இச் செய்தியினைப் பேராசிரியர் மது.சா வி அவர்களிடம் தெரிவித்தேன் அவர்கள் மகிழ்ந்தார்கள்.


திட்டமிட்டப்படி 24 -4-2009 அன்று காலை 12 மணிக்கு நானும் என் கணவரும் சிதம்பரத்திலிருந்து மாயவரம் மகிழ்வுந்தில் கிளம்பினோம்.1.15 மணிக்கு இரயில் வண்டி நிலைத்தில் நுழைந்தோம். கூட்டம் மிதமாக இருந்தது.
என் கேள்வன் அங்குள்ள விசாரணைப் பகுதியினை அணுகி ,கோவை செல்லும் இரயில் எந்த தடத்தில் வரும் அறிந்து வந்தார். மூன்றாம் தடம் என்றவுடன் மாடி ஏறி சென்று ,அவ்விடத்தை அடைந்தோம்.எங்களுக்கு முன்பே பேராசிரியர் மது.வி.சா அவர்கள் வந்துவிட்டார்கள். வெயில் அதிகமாக இருந்ததால்,குளிரூட்டப்பட்ட இருக்கை கிடைக்குமா என பார்க்கின்றேன்,என என்னவர் முயன்றார் கிடைக்க வில்லை.நல்ல வெயில் .இரயில் சரியாக 2.30 மணிக்கு அவ்விடத்தை விட்டு இரயில் நகரத்தொடங்கியது.


3.20க் கெல்லாம் கும்பகோணத்தை வந்து அடைந்துவிட்டது ,நல்ல வேகமாக விரைந்து சென்றது. அங்கு மது.சா.வி அவர்களுக்கு ,கும்பகோணத்தில் உள்ள நண்பர்கள் ,இரவு உண்ணுவதற்குச் சப்பாத்தி , தண்ணீர் கொடுத்தார்கள். 5 நிமிடங்கள் நின்றுவிட்டு உடனே கிளம்பியது. ஐயா அவர்கள் கொண்டு வந்த கந்தபுராணம் உரைநடை நூலினைப் படிக்கத் தொடங்கினேன்.உற்பத்திக்காண்டம் படித்தேன் .


ஐயா அவர்கள் நான் கொண்டு சென்ற தொன்மம் தொடர்பான புத்தகத்தினைப் படித்துக்கொண்டு வந்தார்கள். என்னுடைய புத்தகத்தினைப் பார்த்து விட்டு ஏன் படிக்கும் போது முக்கிய இடங்களில் அடி கோடிகள் இடாமல் வைத்துள்ளாய்,படிக்கும் போது முக்கிய இடங்களை குறித்து வைக்க வேண்டும் என்றார்கள்.என்னிடம் உள்ள வழக்கம் நான் புத்தகத்தில் குறிப்பதில்லை தாளில் குறித்துக்கொள்வேன் என்னவோ புத்கத்தில் குறிக்க மனது வராது என்றேன் .இல்லையம்மா நாம் புத்தகத்தைப் படித்துள்ளோம் என்பதை அடையாளப்படுத்துவதுடன்,பிறகு ஒருநாள் நமக்குத் தேவையான முக்கிய செய்திகளை உடனே பார்க்கவும் அது உதவும் , புத்தகத்தைப் படித்து கிழிக்கிறேன் என்று கூறுகிறார்களே அதற்கு கோடு கிழிப்பது தான் என்று அதற்கு விளக்கமும் அளித்தார்கள். அவர் சொல்லதும் எனக்குச் சரியென்றே பட்டது நான்,அன்றிலிருந்து அவ்வாறு செய்வதாக முடிவெடுத்தேன் ,நல்லது சொல்லும் போது அதைக் கேட்கவேண்டுமில்லையா.

ஒவ்வொருவரிடமிருந்தும் உள்ள நல்ல சிந்தனைகளை நல்ல பண்புகளை நாம் பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் அப்பொழுது வாழ்க்கை சிறப்பாக அமையும்.


தஞ்சைக்கு 4.30 க்கு வந்தது.உற்பத்திகாண்டத்தை முடிக்கும் நிலையில் இருந்தேன். ஐயா வை எதுவும் சாப்பிடுக்கின்றீர்களா என்று கேட்டேன் ,வேண்டாம் என்றார்.நீ என்ன படித்துக் கொண்டே வருகிறாய் படிக்கும் பொழுது இடையில் ஏதாவது நொருக்குத் தீனிகள் சாப்பிடமாட்டாயா என வினாவினார். அவர் நண்பர்கள் அவரிடம் உங்களுடன் ஒரு பெண் வருகிறார் ,இரயில் போகும் போது சாப்பிட்டுக் கொள்ள ,ஏதாவது கொண்டு வருவார் எனக் கூறானார்களாம் ,ஆனால் நான் ஒன்றும் எடுத்துச் செல்லவில்லை.ஏன்ன எனக்கு எப்பொழுதும் ஏதாவது தின்று கொண்டே இருக்கும் பழக்கம் கிடையாது.விரும்புவதும் இல்லை.



சிறிது நேரம் கழித்து சூப் குடிங்கலாம் என்று எண்ணி ,அவரிடம் கேட்டேன் வேண்டாம் என்றார்.குடியுங்கள் என்று கூறி இரண்டு சூப் வேண்டும் என்றேன்.ஒரு சூப் குடுக்கும் போதே,சரியில்லாதது போல் இருந்தது,அதனால் ஒன்றே போதும் என்று கூறிவிட்டு ,ஆளுக்குப் பாதி அதனைப் பகிர்ந்து கொண்டோம்.சுமாராக இருந்து.


இடையில் என் கணவர் எவ்விடத்தில் உள்ளீர்கள் என்று கேட்டார்.தங்கை பேசினாள்.கோவையில் இருக்கும் காவல் துறை உயர் அதிகாரியான என் மாமா எங்கு வந்து கொண்டுள்ளீர்கள் என்று கேட்டார்.
திருச்சிக்கு 5.20 மணிக்குச் சென்றது.கந்தபுராணத்தில் ஊற்பத்தி காண்டம் மட்டும் 110 பக்கங்கள் படித்து முடித்திருந்தேன் . அதனைப் பற்றி சிறிது நேரம் சிந்தித்துக் கொண்டு இருந்தேன். அதில் ஏற்றபட்ட சில ஐயங்களை பேராசிரியர் அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.மாமாவிடம் பேசினேன் அவர் இரயில் நிலையத்தில் காத்திருக்கிறேன் என்றார்.


கோயம்புத்தூரை வந்தடையும் போது நேரம் 9.20 ஐத் தொட்டுவிட்டது.மாமா காத்திருந்தார், புகைவண்டி நிலையத்தில் நல்ல கூட்டம் நீந்தி கொண்டு வெளிவந்தோம். மாமாவினைடைய வாகனத்தில் புறப்பட்டோம்.மாமா கருவூரில் வேலை செய்தும் போதே மது.ச.வி அவர்களைத் தெரியும் என்று கூறினார்கள்.இரவு உணவு மாமா வாங்கி கொடுத்தார்.கல்லூரியில் சென்று தங்கலாம் என்று இருந்தோம், ஆனால் இரவு 11 நெருங்கி விட்டது அதனால் ,இங்கு வீட்டிலேயே தங்கி கொள்ளலாம் என அவருடைய வீட்டிற்குப் போனோம். அங்கு விடுமுறைக்கு கோயம்புத்தூரிலேயே உள்ள இன்னொரு வீட்டிற்குச் சென்றிருந்தார்கள். மாமா எங்களை அவரது இல்லத்தில் தங்க வைத்துவிட்டு கிளம்பினார். நானும் ஐயா அவர்களும் அங்கு தங்கி கொண்டோம்.


புது இடம் என்பதால் இரவு தூக்கமே வரவில்லை. படித்தேன் மணி 1 ஆகிவிட்டது படுத்தேன், ஏனோ தூக்கமே இல்லை. தூக்கம் இல்லாத இரவு ,பல்வேறு நினைவலைகள் வந்து சென்றன. இரவின் மௌன மொழியைக்க கேட்டுக்கொண்டே, அதனோடு என்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு,இரவின் வாசனையை நுகர்ந்து கொண்டு,இரவு தன்னை எப்படியெல்லம் வெளிப்படுத்திக்கொள்கிறது என எண்ணினேன்.



இரவு என்று ஒன்று இல்லை என்றால் இந்த உலக இயக்கம் எப்படி இருக்கும் என எண்ணிப் பார்த்தேன்.இரவு எத்தனை எத்தனை கதைகளைத் தன்னுள் புதைத்துக்கொண்டு,மௌன சாட்சியாய் நின்று கொண்டு இருக்கிறது.வியந்தேன். என்னையும் அறியமல் சிறிது நேரம்



கண்ணயர்ந்தேன் . 5மணிக்கு முழிப்பு வந்தது.எழுந்து காலை வேலைகளை முடித்தேன் மணி 6.30 ஆகியது.மாமா வந்தார் எங்களை அழைத்துச் செல்ல வந்தார்.7.30 மணிக்கு கிளம்பி,கோயம்புத்தூரின் அழகை பருகியபடி,காலைவேளையின் இதமான,தென்றல் வருட காலை உணவினை முடித்துக்கொண்டு,எங்கள் வாகனம் கற்பகம் பல்கலைக்கழகத்தை நோக்கிச் சென்றது.



9மணிக்கு விழா 8.20 க்கெல்லாம் சென்றுவிட்டோம். மாமா சிறி நேரம் பேசிகொண்டு இருந்துவிட்டுச் சென்றார்.




9மணிக்கு விழா 8.20 க்கெல்லாம் சென்றுவிட்டோம். மாமா சிறி நேரம் பேசிகொண்டு இருந்துவிட்டுச் சென்றார்.
எவ்வித ஆர்பாட்டங்கள் இல்லாம் இயல்பாக அழைப்பிதழில் குறிப்பிட்டு இருந்து போல் ,சரியாக 9 மணிக்குத் தொடங்கினார்கள். அரங்கு நிரம்பி வழிந்தது.முதல் அமர்வாக மகாவித்துவான் வே.சிவசுப்பிரமணியம் அவர்கள் உற்பத்தி காண்டத்திலுள்ள திருக்கைலாயப் படலம்,பார்ப்பதிப்படலம்,மேருப்படலம்,காமதகனப்படலம்,மோனநீங்குப்படலம்,,தவங்காண் படலம்,மணம் பேசும் படலம்,வரைபுனை படலம்,கணங்கள் செல் படலம்,திருக்கல்யாணப் படலம்,திருவவதாரப்படலம்,துணைவர் வருபடலம்,சரவணப்படலம்,திருவிளையாட்டுப் படலம், தகரேறு படலம், அயனைச் சிறைபுரிபடலம்,அயன் சிறைநீங்கு படலம்,விடைபேறு படலம் ஆகிய தலைப்புகளில் சொற்பொழிவாற்றனார்கள்.சரியாக 11.20 க்குத் தனது பொழிவினை நிறைவு செய்தார். இடையே தேனீரும், ரொட்டிகளும் வழங்கினார்கள் .அதிலும் ஒரு ஒழுங்கினைக் கடைப்பிடித்தார்கள்.






தொடந்து திருமுறைமணி எ.வேலாயுதம் அவர்கள் ஊற்பத்தி காண்டத்தின் மீதி படலங்களையும்,அசுரகாண்டத்தில் திக்கு விசயப்படலம் வரை எடுத்துக்கொண்டு , மிகதெளிவாகவும் நகைச்சுவை உணர்வோடும் சொற்பொழிவாற்றினார்கள்.



1.10 மணிக்கு நிறைவுற்றது. மதியவுணவினை ஏற்பாடு செய்திருந்தார்கள்.ஆனால் என்னால் உண்ண முடியவில்லை. உடல்நிலை சரியில்லை, என் கணவரிடம் உடல் நிலைப் பற்றி கூறினேன்.மருந்து சாப்பிட்டு விட்டு சிறிது ஓய்வெடு என்று கூறினார்.



மாமாவுக்கு அலைபேசியால் பேசினேன் வந்து அழைத்துக்கொண்டு வீட்டில் விடும் படி கூறினேன். அவர் வந்து அழைத்துச் செல்ல மணி 3 ஆகிவிட்டது .செல்லு வழியில் ஏதாவது சாப்பிடு என்று கூறி ,உணவு வாங்கி கொடுத்தார்கள் சரியாக சாப்பிட முடியவில்லை. சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது தங்கை பேசினால் உடல் நலம் பற்றி வினாவினாள்.என் கணவர் என்னை ஊருக்கு கிளம்பி வந்து விடு முடியாததுடன் இருக்க வேண்டாம் என்றார். மாமா உடனே அலை பேசியில் தொடர்பு கொண்டு கடவு சீட்டினை முன்பதிவு செய்தார்கள்.



சாப்பிட்டு விட்டு மாமா அலுவலகம் சென்று விட்டார் ,என்னை அவரது ஓட்டுநரை விட்டு வீட்டில் விடும் படி பணித்தார். வீடு வந்து சேரும் பொழுது நேரம் 4. அந்த வீட்டில் வேலை செய்ய கூடி 3 சிறு பெண் குழந்தைகள் வந்தார்கள்.


படிக்கும் பிள்ளைகள்,அம்மா அப்பா கூலித் தொழிளாளர்களாம்.விடுமுறை நாள்கள் ,மாலை நேரத்தில் வந்து ஏதாவது வேலைகளைச் செய்துவிட்டு பணம் வாங்கி கொண்டு செல்வார்களாம்.அதுகளைப் பார்க்க எனக்குப் பாவமா இருந்து ஆளுக்கு பத்து ரூபாய் வைத்துக்கொள்ளுங்கள் என்று கொடுத்தேன் ,இல்லை ஏதாவது வேலை சொல்லுங்கள் செய்து விட்டு வாங்கி கொள்கிறோம் என்றார்கள்.வேண்டாம் என்று கூறியதைக் கேட்காமல் என் துணியைத் துவைத்துப் போட்டுவிட்டு,பணம் வாங்கி கொண்டார்கள் . அந்த பிள்ளைகளை எண்ணி ஏனோ என் மனம் வலித்து.


அந்த குழந்தைகளிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன் ,ஆர்வமாக அவர்களைப் பற்றி கூறிக்கொண்டிருந்தார்கள். தெலுங்கு பேசும் பிள்ளைகள் போல இடையே அதுகளுக்குள் தெலுங்கில் பேசிக்கொண்டிருந்தன.அந்தப் பிள்ளைகள் 5.30 மணிக்கு மேல் சென்றன.பிறகு நான் சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொடண்டேன் .6 மணிக்கு மாமா வந்தார் பேசிக்கொண்டு இருந்தோம்.6.45 க்கு மது.ச.வி ஐயா வந்தார்கள்.


சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு 7 மணிக்கு மாமா வீட்டுக்கு கிளம்பி சென்று பிள்ளைகளைப் பார்த்து வரலாம் என்று கூறினேன் ,அவரும் இசைந்தார் .7.20 க்கு கிளம்பி சென்றோம்.அங்கு மாமா பையனுக்குகா காய்ச்சல்.மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றார். குழந்தைகள் என்னுடன் நன்றாக பேசினார்கள்.அவருடையப் பெண் கதை கேட்டாள் கூறினேன்.அங்கு சாப்பிட்டோம்.குழந்தைகளுடன் பொழுது இனிமையாக கழிந்தது.



வீடு திரும்ப மணி 11 ஆகிவிட்டது. அன்று இரவும் சுத்தமாக எனக்குத் தூக்கம் வரவில்லை . ஊருக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணம். இமை பொழுதும் கூட என் இமை மூடவில்லை. சிறிது நேரம் படித்தேன் .பிறகு இரவின் கையில் என்னை ஒப்படைத்தேன், உடலோ அசைவற்று ,மனமோ பல்வேறு நினைவுகளின் ஊடே நீந்தி கொண்டே சென்றது.இரவின் விசித்திரத்தை எண்ணி வியந்தபடி நேரத்தைப் பார்த்தேன் மணி 3.எழுந்து குளித்துவிட்டு, ஒரு மணிநேரம் படித்துக்கொண்டு இருந்தேன். 5.30 மணிக்கு மாமாவும் கிளம்பி அவருடைய அலுவலகத்திற்கு வந்து , கடவுச்சீட்டினை எடுத்துக்கொண்டு புறப்பட்டோம். 6.30 இரயில் நிலையத்தை அடைந்தோம். அவரும் என்னுடன் கரூவூர் வரை வந்தார்.அவருடைய மாமியார்விட்டுக்குச் செல்ல.அவருடன் பல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டேன் .

பயணம் இனிதாக அமைந்தது.
தஞ்சை வரும் போது மதியம் 1மணி தம்பி வந்தான் அழைத்துச்செல்ல,நானும் அவனும் தங்கை வீட்டுக்கச் சென்று மதிய உணவினை முடித்துக்கொண்டு ,சிறிது நேரம் ஒய்வெடுத்த பிறகு ,என்னை வயலூரில் கொண்டு வந்து விட்டான்.மாலை 5 மணிக்கு என் கணவர் வந்தார் ,மகிழ்வுந்தில் கிளம்பி 8.30 மணிக்குச் சிதம்பரம் வந்து சேர்ந்தேன்.


ஒவ்வொரு பயணங்களும் நமக்குச் சில பாடங்களைக் கற்பித்துக்கொண்டே இருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்