இடுகைகள்

அக்டோபர், 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ்த்துறையில் அரசர் முத்தையாவேள் ஆய்வரங்கம் தொடக்கம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் (௩௧- ௧0 - ௨00௮) இவ்வாண்டிற்கான அரசர் முத்தையவேள் ஆய்வரங்கம் தொடங்கப்பெற்றது. மொழிப்புல முதன்மையர் மற்றும் தமிழியல் துறைத்தலைவர் பேராசிரியர் பழ .முத்துவீரப்பன் அவர்கள் வரவேற்புரை வழங்க விழா இனிதே தொடங்கியது.பேராசிரியர் அவர்கள் கவிஞர் தமிழன்பனுக்கு நல்கிய வரவேற்புரை ஓர் ஆய்வுரை போல மிகச் சிறப்பாக இருந்த்து. மாண்பமை துணைவேந்தர் டாக்டர் எம். இராமநாதன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்கள்.அவர்களின் மையவுரை இயந்திரமயமாகிவிட்ட இன்றைய சூழலில் மானுடம் மனிதநேயத்தை துறக்கும் நிலை உருவாகிக்கொண்டுள்ளது,அந்நிலை ஏற்படாமல் தடுப்பதற்கு மொழி இலக்கியங்களைத் துணைக்கொள்ள வேண்டும் என்பதாகும். கவிபேர்ருவி பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் இலக்கியப் பக்கங்கள் என்னும் மையப் பொருண்மையில் பருந்து பார்வையோடு அருமையான பொழிவினை நிகழ்த்தினார்கள்.முதுநிலை விரிவுரையாளர் முனைவர் கி.கொளஞ்சி அவர்கள் நன்றியுரை வழங்க விழா நிறைவுற்றது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறை

எத்திசையும் புகழ் மணம் கமழும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் எழுபத்தைந்தாண்டு புகழ் பூத்த நீண்ட நெடிய வரலாற்றினையும்,மரபினையும் கொண்டது. நில்லாத செல்வத்தை நிலைக்கச் செய்யவும் , நீங்காத கலைப்புரட்சியை நிரம்ப வளர்த்தெடுக்க எண்ணிய அறத்தந்தை அண்ணாமலையரசர் . அவர்கள் தமிழையும் தமிழிசையையும் இரு கண்களாக நினைந்து 1922ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் நாள் சிதம்பரத்தில் மீனாட்சி கல்லூரி எனத் தொடங்கினார். பின்நாளில்1929 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அண்ணாமலைப்பல்கலைக்கழகமாகச் செயல்படத் தொடங்கி ஆல் போல் தழைத்து செழித்தோங்கி வளர்ந்தது வளர்ந்து வருகிறது. மீனாட்சி கல்லூரியாக இருந்த காலகட்டத்தில் தமிழ்தாத்தா எனப் போற்றக்கூடிய உ.வே.சாமிநாதைய்யர் முதல்வராக இருந்து தமிழ்த்துறைக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகமாக உருவெடுத்த பின்னர் தமிழியல்துறையில் தமிழகத்து, சிறந்த புலமையோரும்,சான்றோரும் பணிபுரிந்து சிறப்பித்துள்ளனர். தமிழியல் துறையில் சட்டப்பேரறிஞர் பேராசிரியர் கா.சுப்பிரமணியப்பிள்ளை தமிழ்ப் பேராசிரியராக விளங்கத் தமிழியல் துறையவரலாறு பீடுடன் தொடங்குகின்றது. தமிழியல் துறையின்...

மலர்

மலர்களின் கண்ணீர் துளிகள் வாசனை திரவியம்

உழைப்பு

காற்றையும் கட்டிப் போடலாம் உழைப்பிருந்தால்

தமிழறிஞர் பேராசிரியர் பி.விருத்தாசலம்

படம்
'கெடல் எங்கே தமிழின் நலம்,அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க'. என்னும் பாடல் அடிகளுக்கேற்ப வாழ்ந்து வருபவர் பேராசிரியர் பி.விருத்தாசலம் அவர்கள். தனித்தமிழ் மீது பற்றுக்கொண்ட இவர்கள் தமிழியக்கம் தழைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு நிறைவேற்றியுள்ளார்கள். குறிப்பாக, சென்னைப் பல்கலைக்கழக அடையாளச் சின்னத்தில் இருந்த DOCTRINA VIM PROMOVET INSITAM என்னும் குறிக்கோள் மொழியைத் தமிழில் மாற்ற வேண்டுமென 8.11.1976,30.31977,30.11.1977 ஆகிய நாள்களில் நடைபெற்ற மூன்று பேரவைக் கூட்டங்களில் தீர்மானங்கள் தந்து போராடியதன் விளைவாக சென்னைப் பல்கலைக்கழ அடையாளச் சின்னத்தில் கற்றனைத்தூறும் அறிவும் ஆற்றலும் என மாற்றியதையும்,சென்னைப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பெறும் பட்டங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் வழங்கப்பெற்றதை,தமிழிலும் வழங்க வேண்டும் கூறி மாற்றியதையும் கூறலாம். தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தின் அருகில் உள்ள மேலத்திருப்பூந்துருத்தி என்னும் சிற்றூரில் திருவாட்டி தென்காவேரியம்மையாருக்கும்,திருவாளர் பொ.பிச்சை நாட்டார் என்பாருக்கும்அருமை மகவாய் 22-5-1940-இல் தோன்றினார். இவர் திருவையாறு சீனிவாசராவ் மேனி...
குழந்தையின் தனிமையில் பூப்பவை பூக்கள் அல்ல சாக்கடை

அந்திமாலை பற்றி கூறுங்காலை

முனைவர் பேராசிரியர் கவிஞர் வெற்றிச்செல்வன் அவர்களுடன் உரையாடிய போது ,அந்திமாலையைப் பற்றி கூறிய கவிதை மாலை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டு ஒளிபரப்ப பணிக்கப்பட்டிருந்தேன் பகலும் இரவும் முத்தமிட்டுக் கொள்ளும் நேரம் என்றான் கவியோகி ஓங்காரப் பேரிரைச்சல் கொண்ட வாழ்வினின்றும் ஒதுங்கி நுரைக்க நுரைக்க போதை கிறுகிறுக்க மது குவளைகளில் ஜலதரங்கம் கேட்க முன்மொழியப்படுகிற பகலின் பின்பகுதி என்றான் குடிமகனொருவன் காமன் கிளர்ந்தும் நினைவுகள் கவியாவிட்டாலும் பரவாயில்லை நசுங்கிப் புழுங்கும் உக்கிரப் பகலில் அடக்குமுறைகளிலிருந்து மனதை வருடி ஒத்தடம் கொடுக்க மென்காற்று சுமந்து வரும் ஆறுதல் இது காதலனொருவனின் கனிவுரை அரசு ஊழியம் பார்க்கும் பெண்ணொருத்தியோ மாலை என்பது அலுவலக வன்முறைக்கும் குடும்ப வன்முறைக்குமான சிறுதொலைவு பயணமென்றாள் எனக்கும் மாலை பற்றி சொல்வதற்கு இருக்கிறது ஒன்று கடைசி கடைசியாய் பார்த்த உடல் மொழிப்படி

முக்கூடல் இலக்கிய நிகழ்வு

முக்கூடல் இலக்கிய நிகழ்வு 5.10.2008 மாலை 5.30 மணிக்குத் தொடங்கி 8.30 -க்கு நிறைவுற்றது.பேராசிரியர் கவிஞர் வெற்றிச்செல்வன் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து சிறப்பாகச் செயல்பட்டார்.நிகழ்வில் கவிப்பித்தனுடைய இடுக்கி என்ற நூல் வெளியிடப்பட்டது.கதைசொல்லி கம்பீரன் நாட்டுப்புறக் கதை சொல்ல,காதர் என்பவர் அனைவரையும் பிணிக்கும்படி அருமையாகப் பாடினார்.கவிதைகள் வாசிக்கப்பட்டன.நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுற்றது.
இன்று ந.மு.வேங்கடசாமி கல்லூரி சென்று பேராசிரியர் பி.விருதாச்சலம் ஐயா அவர்களைச் சந்தித்து உரையாடினேன்.அவர்கள் தொடர்பான செய்திகளை விரைவில் வெளிவிடுவேன்