அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறை

எத்திசையும் புகழ் மணம் கமழும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் எழுபத்தைந்தாண்டு புகழ் பூத்த நீண்ட நெடிய
வரலாற்றினையும்,மரபினையும் கொண்டது.
நில்லாத செல்வத்தை நிலைக்கச் செய்யவும் ,
நீங்காத கலைப்புரட்சியை நிரம்ப வளர்த்தெடுக்க எண்ணிய அறத்தந்தை அண்ணாமலையரசர் .


அவர்கள் தமிழையும் தமிழிசையையும் இரு கண்களாக நினைந்து 1922ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் நாள்
சிதம்பரத்தில் மீனாட்சி கல்லூரி எனத் தொடங்கினார்.
பின்நாளில்1929 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அண்ணாமலைப்பல்கலைக்கழகமாகச்
செயல்படத் தொடங்கி ஆல் போல் தழைத்து செழித்தோங்கி வளர்ந்தது வளர்ந்து வருகிறது.


மீனாட்சி கல்லூரியாக இருந்த காலகட்டத்தில் தமிழ்தாத்தா எனப் போற்றக்கூடிய உ.வே.சாமிநாதைய்யர் முதல்வராக இருந்து தமிழ்த்துறைக்கு
நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகமாக உருவெடுத்த பின்னர் தமிழியல்துறையில் தமிழகத்து,
சிறந்த புலமையோரும்,சான்றோரும் பணிபுரிந்து சிறப்பித்துள்ளனர்.

தமிழியல் துறையில் சட்டப்பேரறிஞர் பேராசிரியர் கா.சுப்பிரமணியப்பிள்ளை தமிழ்ப் பேராசிரியராக
விளங்கத் தமிழியல் துறையவரலாறு பீடுடன் தொடங்குகின்றது.
தமிழியல் துறையின் வளர்ச்சிக்கு வித்துட்ட துறைத்தலைவர்கள்


1.திரு.கா.சுப்பிரமணியப்பிள்ளை,எம்.ஏ.,எம்.எல்., 1929

2.திரு.ராபி.சேதுப்பிள்ளை,பி.ஏ.,பி.எல்., 1930

3.திரு.சுவாமி விபுலானந்தா,பி.எஸ்ஸி(லண்டன்) 1931

4.திரு.சோமசுந்தர பாரதியார் ,எம்.ஏ.,பி.எல்., 1933

5.திரு.பண்டிதமணி,மு.கதிரேசன் செட்டியார் 1938

6.திரு.கா.சுப்பிரமணியப்பிள்ளை,எம்.ஏ.,எம்.எல்., 1940

7.திரு.தெ.பொ.மீனாட்சி சுந்தரம்,எம்.ஏ.,பி.எல்.,எம்.ஓ.எல் 1944

8.டாக்டர் அ.சிதம்பரம் செட்டியார்,எம்.ஏ.,பி.எல்.,எம்.ஓ.எல் 1946

9.திரு.லெ.கரு.இராமநாதன் செட்டியார் 1953

10.திரு.தெ.பொ.மீனாட்சி சுந்தரம்,எம்.ஏ.,பி.எல்.,எம்.ஓ.எல்., 1958

11.திரு.கோ.சுப்பிரமணியப்பிள்ளை,எம்.ஏ,.பி.எல்., 1963

12.முனைவர் வ.சுப.மாணிக்கம்,எம்.ஏ.,எம்.ஓ.எல்.,பிஎச்.டி., 1970

13.திரு க.வெள்ளைவாரணன் 1977

14.இராமசாமிப் பிள்ளை(பொறுப்பு)

15.முனைவர் ச.அகத்தியலிங்கம்

16.முனைவர் நா.பாலுசாமி எம்.ஏ.,பி.எல்.,எம்.லிட்.,பிஎச்.டி., 1981

17.முனைவர் ஆறு.அழகப்பன்,எம்.ஏ.,எம்.லிட்.,பிஎச்.டி., 1984

18.முனைவர் சு.சாமிஐயா,எம்.ஓ.எல்.,பிஎச்.டி., 1992

19.முனைவர் அ.ஆனந்த நடராசன்,எம்.ஏ.,பி.ஓ.எல்,பிஎச்.டி., 1994

20.முனைவர் க.தியாகராசன்,எம்.ஓ.எல்.,பிஎச்.டி 1999

21.முனைவர் ப.தங்கராசு,எம்.ஏ.,பி.எட்.,பிஎச்.டி., 2002

22.முனைவர் துரை.பட்டாபிராமன்,பி.ஓல்.,பி.இடி.,எம்.ஏ.,எம்.பில்.,பி.எச்.டி.,2005
23. முனைவர் பழ.முத்துவீரப்பன் ,எம்.ஏ.,பிஎச்.டி.,2008
24. திருமதி முனைவர் ப. ஞானம், எம்,ஏ, பி.எச்.டி., 31. 01. 2013

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்