அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ்த்துறையில் அரசர் முத்தையாவேள் ஆய்வரங்கம் தொடக்கம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் (௩௧-௧0-௨00௮) இவ்வாண்டிற்கான அரசர் முத்தையவேள் ஆய்வரங்கம் தொடங்கப்பெற்றது. மொழிப்புல முதன்மையர் மற்றும் தமிழியல் துறைத்தலைவர் பேராசிரியர் பழ .முத்துவீரப்பன் அவர்கள் வரவேற்புரை வழங்க விழா இனிதே தொடங்கியது.பேராசிரியர் அவர்கள் கவிஞர் தமிழன்பனுக்கு நல்கிய வரவேற்புரை ஓர் ஆய்வுரை போல மிகச் சிறப்பாக இருந்த்து. மாண்பமை துணைவேந்தர் டாக்டர் எம். இராமநாதன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்கள்.அவர்களின் மையவுரை இயந்திரமயமாகிவிட்ட இன்றைய சூழலில் மானுடம் மனிதநேயத்தை துறக்கும் நிலை உருவாகிக்கொண்டுள்ளது,அந்நிலை ஏற்படாமல் தடுப்பதற்கு மொழி இலக்கியங்களைத் துணைக்கொள்ள வேண்டும் என்பதாகும். கவிபேர்ருவி பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் இலக்கியப் பக்கங்கள் என்னும் மையப் பொருண்மையில் பருந்து பார்வையோடு அருமையான பொழிவினை நிகழ்த்தினார்கள்.முதுநிலை விரிவுரையாளர் முனைவர் கி.கொளஞ்சி அவர்கள் நன்றியுரை வழங்க விழா நிறைவுற்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்