பால் அரசியல் தாய்ப்பால் - புட்டிப்பால் - மாட்டுப்பால் பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள்
பால் குறித்த விவாதங்கள் அண்மை காலத்தில் மேற்கிள ம்பியுள்ளன. அனைத்திலும் கலப்படம் என்ற சூழல் இன்று நிலவுகிறது. நூகர்வோருக்குப் பெரும் சவாலான காலகட்டமாக இருக்கிறது. எந்த பொருளை நம்பி வாக்குவது என்ற புரியாத நிலை. ஒவ்வொரு செயல்களுக்குப் பின்னும் நுண் அரசியல் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது. பால் விற்பனை பெருக்கத்திற்காகச் செயப்படும் அரசியல் மிக ஆபத்தானதாக இருக்கிறது. மனித உணர்வுகள் காயடிக்கப்படுகின்றன. இதனுள் செயல்படும் தன்மையை தக்க தரவுகளின் பின்புலத்தோடு பால் அரசியல் என்னும் நூலினை நக்கீரன் அவர்கள் எழுதியுள்ளார்கள். தன் குழந்தைகளுக்கு உண்மையாகவே தாய்ப்பால் கொடுக்க நினைத்தாலும், தமக்குப் பால் சுரக்கவில்லை என்று பல தாய்மார்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் அது உண்மை நிலை அல்ல. எந்தவொரு தாய்க்கும் அவருடைய குழந்தைக்குத் தேவையான அளவுக்குப் பால் சுரக்கும் என்பது தான் இயற்கை. ஆனால் ஒரு தாயை அப்படி நினைக்க வைப்பத்தன் பின்னே மறைந்திருக்கும் அரசியலை அத்தாயே அறியமாட்டார். அது மட்டுமன்றி தாய்ப்பால் சுரப்பதை உண்மையிலேயே குறைக்கச் செய்வதன் பின்னணியில் பெரும் மருத்துவ அரசியல் மறைந்திருக்கிறது. ...