திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும் இவ்வுரைகியையுமாறு சென்னை இந்துதியாலஜிகல் ஹைஸ்கூல் தமிழ்ப்பண்டிதர் கோ.வடிவேல் செட்டியார் அவர்கள் இயற்றிய தெளிப்பொருள் விளக்கமும் கருத்துரையும் குறிப்புரையும், சென்னை சித்தாரிப்பேட்டை ஆங்கிலோவர்னாகுலர்ஸ்கூல் தமிழ்ப்பண்டிதர் வல்லி. ப. தெய்வநாயக முதலியார் அவர்களாலும், சென்னை திருவல்லிக்கேணி, கம்மர்ஷியல் அச்சியந்திரசாலையில் இரண்டு பகமாக 1904 ல்  பதிப்பிக்கப்பட்டது. அந்நூலை மீள் பதிப்பாக 2015 ல்
சிவாலயம் ஜெ.மோகன் பதிப்பித்துள்ளார்.



அண்மையில் சிவாலயம் மோகன் அவர்களைத் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ.இளவழகன் அய்யா அவர்கள் சந்திக்க சென்றார். அவரோடு நானும் எனது கணவர் மருத்துவர் சேக்கிழாரும் உடன் சென்றோம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் அவரோடு உரையாடிக்கொண்டிருந்தோம். அவர் மென் பொருள் பொறியாளர் என்றாலும் தமிழ் மீது அளப்பறிய காதலால் தமிழின் தொன்மையான நூல்களைத் தேடித்தேடி சேகரித்து அவற்றைப் பாதுகாப்பதும், அந்நூல்களை மீள்பதிப்பாக்கம் செய்வது குறித்தும் சிலாகித்தார்.

அவருடைய உரையாடலின் பெரும்பகுதி தமிழுக்கு தான் ஏதேனும் செய்யவேண்டும் என்பது பற்றியே இருந்தது. அதற்காக அவர் திட்டமிட்டுள்ள பணிகளையும் கூறினார். தன் குடும்பத்திற்காகத் தேவையானவை செய்தாகிவிட்டது. இனி தமிழுக்காவே வாழப்போகிறேன் என்றார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்